சுதந்திர தின விழாவை சீர்குலைக்க சதி? பயங்கரவாதியின் துப்பாக்கி பறிமுதல்

Added : ஆக 14, 2013 | கருத்துகள் (2) | |
Advertisement
கோவை: பெங்களூரு குண்டுவெடிப்பு பயங்கரவாதி, "கிச்சான்' புகாரியின், அதிநவீன கைத்துப்பாக்கி, கோவை நகரில் கைப்பற்றப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார். சுதந்திர தினவிழாவில் அசம்பாவிதம் நிகழ்த்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனரா என்பது குறித்து, விசாரணை நடக்கிறது.சேலத்தைச் சேர்ந்த, தமிழக பா.ஜ., செயலர், ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை, சி.பி.சி.ஐ.டி., தனிப்படை போலீசார்
சுதந்திர தின விழாவை சீர்குலைக்க சதி? பயங்கரவாதியின் துப்பாக்கி பறிமுதல்

கோவை: பெங்களூரு குண்டுவெடிப்பு பயங்கரவாதி, "கிச்சான்' புகாரியின், அதிநவீன கைத்துப்பாக்கி, கோவை நகரில் கைப்பற்றப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார். சுதந்திர தினவிழாவில் அசம்பாவிதம் நிகழ்த்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனரா என்பது குறித்து, விசாரணை நடக்கிறது.

சேலத்தைச் சேர்ந்த, தமிழக பா.ஜ., செயலர், ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை, சி.பி.சி.ஐ.டி., தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். இது தொடர்பாக, கர்நாடக மாநிலம், பெங்களூரு பா.ஜ., அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில், பெங்களூரு சிறையிலிருக்கும், கிச்சான்புகாரி, சுலைமான் ஆகியோரின், "நெட்வொர்க்' குறித்து விசாரித்தனர். இவர்கள் கைதாகும் முன், பயங்கரவாத சதிச்செயலில் ஈடுபடும் திட்டத்துடன், மேலப்பாளையத்தைச் சேர்ந்த, முகமது தாசின் என்பவரிடம், 17.5 கிலோ வெடிபொருட்களை கொடுத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.


கைது:

முகமதுதாசினை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், பெங்களூரு சிறையிலிருக்கும் கிச்சான்புகாரி, தன் கைத்துப்பாக்கியை கோவையைச் சேர்ந்த, முகமது பஷீர், 24, என்பவரிடம், ரகசியமாக கொடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. முகமதுபசீரை பிடித்து விசாரித்த போலீசார், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், முகமது அன்சர், 38, என்பவரை பிடித்து விசாரித்தனர். துப்பாக்கி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என, இவர் நடித்தார். இவரது வீட்டில் சி.பி. சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தியும் பயனில்லை. குடும்பத்தாரிடம் விசாரித்த போது, போலீசாரின் கெடுபிடிக்கு பயந்து, கிச்சான்புகாரியின் துப்பாக்கியை, வீட்டருகிலுள்ள சாக் கடையில் வீசியது தெரியவந்தது. கடந்த இரு நாட்களாக, "பொக்லைன்' இயந்திரம் மற்றும் 10க்கும்மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களை கொண்டு, சாக்கடையை தோண்டிய போலீசார், ஒருவழியாக நேற்று காலை, "7.65 எம்எம்' ரக அமெரிக்க தயாரிப்பு (யு.எஸ்.ஏ., ஆட்டோ) துப்பாக்கி மற்றும் 53 குண்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, முகமது அன்சர் கைது செய்யப்பட்டார்.


விசாரணை:

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கி, கிச்சான் புகாரிக்கு எப்படி கிடைத்தது, என்பது குறித்து, இனிமேல் தான் விசாரிக்க வேண் டும். இத்துப்பாக்கி தானியங்கி ரகத்தைச் சார்ந்தது. பா.ஜ., மற்றும் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்யும் திட்டத்துடன், இதை பதுக்கி வைத்திருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். பயங்கரவாத தொடர்பில் இருக்கும் நபர்களிடம், இதுபோன்ற அதிநவீன துப்பாக்கி இருப்பது, வி.வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கலாம். சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடக்கும் நேரத்தில், அசம்பாவிதம் நிகழ்த்த, இவர்கள் திட்டமிட்டிருந்தனரா என்பது குறித்தும் விசாரிக்கப்படும். கிச்சான் புகாரி, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Praveen Stanley - New Delhi,இந்தியா
15-ஆக-201314:56:19 IST Report Abuse
Praveen Stanley இது இந்திய பாகிஸ்தான் பிரச்சினையாக மட்டும் தெரியவில்லை. இரு நாடுகளின் இன்றைய அரசியல் சூழ்நிலைகளை சாதகமாக பயன்படுத்தி இங்கு ஒரு போர் உருவாக்க உலக சக்திகள் முயற்சி போன்று தெரிகின்றது. இதை இரு நாட்டு அரசுகளும் ஊடகங்களும் கவனமாக கையாளவேண்டும் மக்களின் உணர்சிகளை தூண்ட கூடிய செய்திகளையோ அறிக்கைகளையோ தவிர்க்க வேண்டும் இல்லையென்றால் இரு நாடுகளும் மூன்றாம் உலக போரின் போர்களமாக கூடும் அதுமட்டில்லாமல் அதன் பின் உலக ஆதிக்க சக்திகளின் பிடியில் இரு நாடுகளின் மக்களும் பொருளாதாரமும் வெகு காலத்திற்கு சிக்க நேரிடலாம். போர் வந்தால் கண்டிப்பாக அமெரிக்கவும் சீனாவும் தங்கள் பலத்தை சோதனை செய்து பார்க்க முயலும். மற்ற நாடுகள் இவ்விரு அணிகளில் சேர்ந்து கொள்ளும். விவேகமற்ற வீரம் தேவையற்ற அழிவையே தரும்
Rate this:
Cancel
M.S.A.Siddique - Doha Qatar,கத்தார்
15-ஆக-201311:06:15 IST Report Abuse
M.S.A.Siddique இது முழுவதும் ஜோடிக்கப்பட்ட பொய்யான தகவல் உண்மை விரைவில் வெளியாகும் புத்த கயா குண்டு வெடிப்பு சம்பவம் போலே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X