பொது செய்தி

தமிழ்நாடு

12-வது உலகத் தமிழ் இணைய மாநாடு கோலாலம்பூரில் இன்று தொடங்குகிறது

Updated : ஆக 15, 2013 | Added : ஆக 15, 2013 | கருத்துகள் (13)
Share
Advertisement
கணினியிலும் இணையத்திலும் தமிழ் மொழியை மேம்படுத்தும் ஆராய்ச்சி மாநாடன தமிழ் இணைய மாநாடு தமிழகத்திலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடுகளில் உலக அளவில் உள்ள கணிப்பொறி அறிஞர்கள், மொழி வல்லுனர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் போன்ற பல்வேறு ஆர்வலர்கள் கலந்து கொண்டு தகவல் தொழில்நுட்பத்தில் தமிழை மேம்படுத்தும் பணிகளை
12-வது உலகத் தமிழ் இணைய மாநாடு கோலாலம்பூரில் இன்று தொடங்குகிறது

கணினியிலும் இணையத்திலும் தமிழ் மொழியை மேம்படுத்தும் ஆராய்ச்சி மாநாடன தமிழ் இணைய மாநாடு தமிழகத்திலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாடுகளில் உலக அளவில் உள்ள கணிப்பொறி அறிஞர்கள், மொழி வல்லுனர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் போன்ற பல்வேறு ஆர்வலர்கள் கலந்து கொண்டு தகவல் தொழில்நுட்பத்தில் தமிழை மேம்படுத்தும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக 12வது உலகத்தமிழ் இணைய மாநாடு இன்று(ஆகஸ்ட் 15) 2013ல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மிகச்சிறப்பாக துவங்குகிறது. இம்மாநாடு இரண்டாம் முறையாக மலேஷியாவில் நடைபெறவுள்ளதும், இதனை உத்தமம் என்ற உலகந்தழுவிய அமைப்பும் மலாயாப்பல்கலைக்கழக மொழியியல் புலத்தின் மலேஷிய மொழிகள் மற்றும் பயனாக்க மொழியியல் துறையும் ஒருங்கிணைந்து நடத்தவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.இம்மாநாட்டினை மலேஷிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத்துறை அமைச்சர் மாண்புமிகு டத்தோஸ்ரீ அகமது ஷபெரிசீக் அவர்கள் 15.8.2013 வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் மலாயாப்பல்கலைகழக வளாகத்தில் தொடக்கி வைத்து சிறப்பிக்க உள்ளார்கள். அவ்வமயம் மலாயாப்பல்கலைக்கழக துணைவேந்தர் டான்ஸ்ரீகவுத்பின்ஜேஸ்மான் அவர்களும்,அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தரும், கான்பூர்(இந்தியா) இந்தியத்தொழில்நுட்பத்தின் தற்போதைய தலைவர் பேராசிரியர் டாக்டர் மு. ஆனந்தகிருஷ்ணன் அவர்களும்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர். மலேசிய நாட்டு முரசு, அமைப்பின், நிறுவனர் திரு. முத்து நெடுமாறன் அவர்கள் மாநாட்டு மையக்கருத்துரை நிகழ்த்தவுள்ளார். இம்மாநாட்டில் ஏழு நாடுகளிலிருந்து வருகைதரும் ஏறத்தாழ 650 பேராளர்களும் பங்கேற்பாளர்களும் கலந்து கொள்வதோடு நூறு ஆய்வுக்கட்டுரைகள் பன்னாட்டுப் பேராளர்களால் படைக்கப்படவுள்ளது.

கையடக்கணிணிகளில் தமிழ்க்கணிமை, ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களில் தமிழைப்படித்தல்- எழுதுதல், குறுஞ்செயலிகள், திருவூற்றுத்தமிழ்மென்பொருள்கள்-தன்மொழியாக்கல், தமிழ்க்கணினிசொல்லாக்க ஆய்வுகள், கணினிக்குத்தமிழ் மொழியறிவு ஊட்டல், தமிழ் இணையத்தின் தற்போதைய நிலை- எதிர்கால வளர்ச்சி, தமிழ் எழுத்துரு பகுப்பி- சொல்திருத்தி, இயந்திர மொழிமாற்றம், இயன்மொழிப்பகுப்பாய்வு பிழைத்திருத்தி, கணினி வழி தமிழ்கற்றல்- கற்பித்தல் குறித்தான ஆய்வுகள் போன்ற குறிப்பிடத்தக்க பிரிவுளில் கட்டுரைகள் படைக்கப்படவுள்ளதோடு ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பான ஆய்வடங்களல் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. மாநாட்டினையொட்டி பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் ஆய்வுக்கட்டுரைப்போட்டியும் தமிழ் குறுஞ்செயலி உலகப்போட்டியும் நடைபெற உள்ளன.

உலகந்தழுவிய நிலையில் வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்ப அறிவையும்- ஆற்றலையும் பயன்படுத்தி, எதிர்காலத்தேவைகளை-மேம்பாட்டினை முன்னிறுத்தியும் தமிழ்மொழிப்பயன்பாடு உலகமெங்கும் மேலோங்க, குறிப்பாக இணையம் வறியாக அமைய இம்மாநாட்டு ஆய்வுகளும், கருத்துரைகளும் வழிகாட்டுவனவாக அமையும் என எதிர்பார்க்கலாம்.அறிவு- ஆற்றல்- ஆக்கம் என்பவை சமுதாய வளர்ச்சிக்கும், நாட்டு வளர்ச்சிக்கும் மொழி வளர்ச்சிக்கும் தேவையானவை. இன்றைய தகவல் தொழில்நுட்பங்களும், கணினி அறிவியல் கோட்பாடுகளும்- செயற்பாடுகளும் இவற்றை அடைவதற்கு உறுதுணையாக அமைய இதுபோன்ற மாநாட்டுப்பங்களிப்பு துணை செய்யும் என உறுதியாக நம்பலாம்.

தமிழகத்தில் இருந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பிக்க இங்கு வந்துள்ளார்கள். மாநாட்டை ஒட்டி நடைபெறும் தமிழ் மென்பொருள் கண்காட்சியை உத்தமத்துடன் இணைந்து கணித்தமிழ்ச்சங்கமும் நடத்துகிறது. இந்த மாநாட்டிலும், கண்காட்சியிலும் கலந்து கொள்ளும் வகையில் இருபதுக்கும் மேற்பட்ட கணித்தமிழ்ச் சங்கத்தினர் மலேஷியா வந்துள்ளனர்.இந்த கண்காட்சியில் மலேஷியா, இலங்கை, சிங்கபப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள முன்னணி தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள் அரங்குகளை அமைத்துள்ளார்கள்.தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் தினமலர் எப்பொழுதும் முன்நிற்கும். இந்திய மற்றும் தமிழகச்செய்திகளை கடந்த 15 ஆண்டுகளுக்கும்மேலாக இணையம் வாயிலாக உலகத்தமிழர்களிடம் கொண்டு சேர்க்கும் முன்னணி இணையதளமான தினமலர்.காம் விளங்குகிறது. தற்போதைய தலைமுறைக்கேற்ற வகையில் ஆப்பிள் செல்போன், டேப்லெட், ஆண்ட்ராய்ட் கருவிகளில் போன் கையடக்கக் கருவிகள் மூலம் தினசரி செய்திகளையும், தமிழையும் இளையதலைமுறையினருக்கு சென்று சேர்க்கும் பணியின் முன் நிற்கிறது, தினமலர்.இந்த தமிழ் இணைய மாநாட்டுக் கண்காட்சியில் தினமலர்.காம் சார்பில் மிகப்பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் மாநாட்டுக்கு வருகைதந்துள்ள உலகத்தமிழர்களிடம் கையடக்க கருவிகளில் தினமலரின் இணையதள பயன்பாடுகள் செயல்பாடுகள் விளக்க உள்ளது.

இக்கண்காட்சி 16-8-2013 தொடங்கி 18-8-2013 வரை மலாயாப்பல்லைகழக வேந்தர்துங்கு அரங்கில் நடைபெற உள்ளது. இதுபோன்ற கண்காட்சி இக்காலத் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்ணுற்று அறிந்து கொள்வதற்கும் பெரிதும் உதவும். மலேஷியா நாட்டில் உள்ள 500க்கும் மேற்பட்ட அரசுத் தமிழ்ப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் ஆயிரக்கணக்கில் இக்கண்காட்சியில் கலந்து பெரிதும் பயன்பெற உள்ளனர். அவர்களுக்கென புதிர்போட்டிகள், விளையாட்டுகள் முதலியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சொ. ஆனந்தன்,தலைவர் கணித்தமிழ்ச்சங்கம், கோலாலம்பூர்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
15-ஆக-201317:18:01 IST Report Abuse
K.Balasubramanian இணையத்தால் இணைவோம் . பல கோடி தமிழர்களின் நிலை உலகில் உயர பாடு படுவோம் .
Rate this:
Cancel
saravanan - Erode,இந்தியா
15-ஆக-201316:39:20 IST Report Abuse
saravanan மென்மேலும் என் மொழி வளர மன்மார்த்த வாழ்த்துக்கள்....
Rate this:
Cancel
Prem - Bangalore,இந்தியா
15-ஆக-201314:38:15 IST Report Abuse
Prem தமிழ் நன்கு கற்போம், தமிழை காப்போம் , தமிழை வளர்ப்போம்... இது தமிழ் மக்களின் பொறுப்பு ஆகும் ....கடமை அல்ல ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X