சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூன்று திருமணம் செய்து பெண்களை ஏமாற்றிய ராணுவ சமையல்காரர் கைது

Updated : ஆக 16, 2013 | Added : ஆக 16, 2013 | கருத்துகள் (1)
Advertisement

கோவை: மூன்று திருமணம் செய்து, பெண்களை ஏமாற்றிய ராணுவ சமையல்காரரை, போலீசார் கைது செய்தனர். கோவை, பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர், பிலிப் ஜோசப், 33; ராணுவத்தில் சமையல்காரராக பணியாற்றுகிறார். கன்னியாகுமரியைச் சேர்ந்த திவ்யா என்பவரை திருமணம் செய்து, விவாகரத்து செய்த இவர், புஷ்பலதா, 25, ரம்யா, 24, பிரேமா, 33, ஆகியோரை, அடுத்தடுத்து, யாருக்கும் தெரியாமல், திருமணம் செய்து கொண்டார். இவர்களிடம், ராணுவத்தில் பெரிய அதிகாரியாக பணியாற்றுவதாகக் கூறி ஏமாற்றி, வாழ்க்கை நடத்தினார். இத்தகவல், மூன்றாவது மனைவி பிரேமாவுக்கு தெரிந்ததும், போலீசில் புகார் கொடுத்தார். மூன்று மனைவிகளும், தங்களின் கைக்குழந்தைகளுடன் பிலிப் ஜோசப்பை கைது செய்யக் கோரி, மே 27ல், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி, கலெக்டரிடம் மனு அளித்தனர். தங்களை ஏமாற்றி திருமணம் செய்த பிலிப் ஜோசப், அவரது தாய் மேரி, சகோதரர் ஸ்டீபன், சகோதரி உஷா, அவரது கணவர் சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, முதல்வரின் தனிப் பிரிவிலிருந்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அவர், டில்லியில் இருப்பதாக தகவல் கிடைத்ததும், டில்லி சென்ற கோவை போலீசார், ராணுவ உயர் அதிகாரிகளிடம், பிலிப் ஜோசப் குறித்த மோசடி புகார்களை தெரிவித்தனர். விசாரித்த ராணுவ அதிகாரிகள், பிலிப் ஜோசப்பை, நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள ராணுவ முகாமிற்கு, இட மாற்றம் செய்தனர். அதன் பின், பிலிப் ஜோசப்பை, ராணுவ விதிமுறைகளின்படி, தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து, பிலிப் ஜோசப்பை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஆக-201308:50:47 IST Report Abuse
Srinivasan Kannaiya போன கற்பு வரபோவதில்லை... உங்களை போல் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை பிலிப் ஜோசப் போன்றவர்கள் காட்டில் அடை மழை தான்... தனித்தோ/மனது ஒத்த மற்றவர்களுடனோ. வாழ்ந்து காட்டுங்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X