பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பணியில் சேர போலி முகவரியில் பதிவு செய்த விவகாரம் : மூடி மறைக்க வேலைவாய்ப்பு துறை முயற்சி

Updated : ஆக 19, 2013 | Added : ஆக 18, 2013 | கருத்துகள் (2)
Share
Advertisement
அரசு பணி, போலி முகவரி, பதிவு,வேலைவாய்ப்பு துறை,Employment, department

போலி முகவரியைக் கொண்டு, "ஆன்-லைன்' மூலமாக, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசுப் பணியில் சேர முயற்சித்த விவகாரத்தை மூடி மறைக்க, தீவிர முயற்சி நடந்து வருகிறது.

கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்டத்தில், 1,588 கண்டக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில், 817 பேர், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்; போலி முகவரி கொடுத்து, ஆன்-லைன் மூலமாக பதிவு செய்தவர்கள்.இதனால், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு பறி போனது. ஆட்சி மாற்றத்துக்குப் பின், இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.


வெளிச்சத்திற்கு வந்த உண்மை :

மாறாக, அதே போன்ற முறைகேட்டை நிகழ்த்த முயற்சி நடந்தது. போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்டம் சார்பில், டிரைவர் மற்றும் கண்டக்டர்களைத் தேர்வு செய்வதற்காக, பதிவு மூப்பு விவரங்கள் கோரி, 2012 ஜூலை 20ல், வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து ஆக., 28ம் தேதி, பட்டியல் அனுப்பப்பட்டது. அதில், ஆக., 3ம் தேதியை, வயது வரம்பு கணக்கிடப்பட்ட தேதியாகக் குறிப்பிட்டு, பட்டியல் அனுப்பப்பட்டது. போக்குவரத்துக் கழகத்தின் கடிதம் கிடைத்த நாளுக்குப் பின், பதிவு செய்தவர்களை இந்த பட்டியலில் சேர்க்கக் கூடாது என்பதே விதிமுறை.ஆனால், ஜூலை 21லிருந்து, ஆக., 3 வரை ஆன்-லைனில் பதிவு செய்த, 73 டிரைவர்கள், 34 கண்டக்டர்கள் என, 107 பேரின் பெயர்களும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தன. அவர்கள் அனைவருமே, கோவை மாவட்டத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்கள்; போலி முகவரி கொடுத்து, பதிவு செய்தவர்கள்.பொள்ளாச்சியைச் சேர்ந்த, தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர், பாஸ்கரன் வாங்கிய தகவல்களால், இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.


ஆதாரம் :

இந்த விவகாரத்தில், போக்குவரத்துக் கழக அதிகாரிகளும், வேலைவாய்ப்புத் துறை அலுவலர்களும் இணைந்து செயல்பட்டதற்கு, பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.உதாரணமாக, "வேலைவாய்ப்பு அலுவலகம் அனுப்பிய பட்டியலில் உள்ளவர்களின் ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்று ஆகியவற்றை எங்களால் ஆய்வு செய்ய இயலாது' என்று, அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்தால், 2012 ஆக., 23ல் அனுப்பப்பட்ட கடிதம், வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு, அக்., 11ல் தான் கிடைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.இவ்விரு அலுவலகங்களும், 5 கி.மீ., இடைவெளியில் தான் அமைந்துள்ளன.இதற்கு இடைப்பட்ட, 50 நாட்களில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலருக்கும் பணி நியமனம் வழங்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால், இது தொடர்பாக, வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் போலீசில் புகாரே தரப்படவில்லை.


விசாரணை தேவை :

ஜன., 23ல், கோவை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்ததாக, ஒரு புகாரைக் காண்பிக்கிறது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்; ஆனால், அப்படியொரு புகாரே, தங்களுக்கு வரவில்லை என, பதிலளித்துள்ளது, மாநகர காவல் துறை.இதிலிருந்தே, இந்த முறைகேட்டை மறைக்க, வேலைவாய்ப்புத் துறையினர் தீவிரமாக முயற்சிப்பது உறுதியாகி உள்ளது.கோவை மாவட்ட வேலைவாய்ப்புத் துறை உதவி இயக்குனர் ஜோதிமணியிடம் கேட்டபோது, ""காவல் துறையிடம் புகார் தரப்பட்டுள்ளது; விசாரணை நடந்து வருகிறது. போலி முகவரி கொடுத்த யாருக்கும், பணி நியமனம் வழங்கப்படவில்லை என்பதால், இதில் முறைகேடு நடந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என்றார்.நேர்மையான விசாரணை நடந்தால், கடந்த ஆட்சியிலும், இப்போதும் நடந்த பல முறைகேடுகளும் வெளிச்சத்துக்கு வரும்.


இது ஆதாரமில்லையா?

கோவை கோட்டத்தில், தற்போது பணியாற்றும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பலரும், தங்களது சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் கோரியுள்ளனர். புதிய பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின், அவர்களை மாற்றுவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் உறுதி கூறியுள்ளனர்.வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலரும், கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, போலி முகவரி கொடுத்து பணியில் சேர்ந்தது, இதன் மூலம் உறுதியாகி உள்ளது. ஆனால், அந்த முறைகேடு பற்றி, இந்த ஆட்சியில் எந்த விசாரணையுமே நடக்காததன் மர்மம், யாருக்குமே புரியவில்லை.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
18-ஆக-201306:33:16 IST Report Abuse
P. Kannan இதில் என்ன மர்மம் இருக்கிறது இது எல்லாம் போக்குவரத்து மந்திரியுடைய அனுமதியுடனே நடைபெற்றிருக்கும். சரியா பாருங்க மலையாளி யாராவது இப்படி வந்து இருக்காங்களான்னு ஏன்னா அவர்களுக்கு இது போல் வேலையெல்லாம் கைவந்த கலை.
Rate this:
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
18-ஆக-201304:53:39 IST Report Abuse
Baskaran Kasimani மக்கள் அரசாங்க வேலையை புறக்கணித்தால் தவிர இதற்க்கு விடிவு கிடையாது. வசூல் மன்னர்கள் ஏதாவது சூழ்ச்சி செய்து கொண்டுதான் இருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X