திருப்பூர்:திருப்பூரில்
ஆழ்குழாய் கிணறு மின் மோட்டார்கள், அடிக்கடி பழுதாவதால், குடிநீர் சப்ளை
பாதிக்கிறது; மாநகராட்சி நிதியும் வீணாகிறது.
திருப்பூர் மாநகராட்சி
பகுதிகளில், மூன்று திட்டங்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது;
1,300 ஆழ்குழாய் கிணறுகள் மூலம், சப்பை தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
நடப்பாண்டில் மட்டும் 80 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டன. 100க்கும்
அதிகமான ஆழ்குழாய் கிணறுகளில், பழுதடைந்த மோட்டார்கள் மாற்றப்பட்டன.
ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள தரமற்ற மோட்டார்கள் அடிக்கடி பழுதாவதால்,
தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்; மாநகராட்சி நிதியும்
வீணாகிறது.மக்கள் கூறியதாவது:பெரும்பாலான வார்டு களில், குடிநீர்
பற்றாக்குறை நிலவுகிறது. "போர்வெல்' தண்ணீர் கிடைப்பதால் துவைக்கவும்,
குளிக்கவும் பயன்படுகிறது. இதில், நூற்றுக்கும் அதிகமான இடங் களில்
மோட்டார்கள் பழுது அடைந்துள்ளன.மோட்டார்கள் தரமின்றி உள்ளதால், அடிக்கடி
பழுதாகின்றன; மீண்டும் மோட்டார் மாற்ற, மாநகராட் சிக்கு வீண் செலவு
ஏற்படுகிறது. மோட்டார் பழுதடைந்தால், தண்ணீர் சப்ளை தடைபடுகிறது.
ஒரு
ஆழ்குழாய் கிணறுக்கு மோட்டார் அமைக்க, இரண்டு முதல் நான்கு லட்சம் ரூபாய்
செலவாகிறது. எனவே, பழுதடைந்த மோட்டார்களை மாற்றும் போது, தரமானதாக அமைக்க
வேண்டும், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE