கன்டோண்மென்ட் வார்டு பெண்களுக்கு ஒதுக்கீடு | Dinamalar

கன்டோண்மென்ட் வார்டு பெண்களுக்கு ஒதுக்கீடு

Added : ஆக 18, 2013 | |
குன்னூர்:வெலிங்டன் கன்டோண்மென்ட் வாரியத்துக்கு உட்பட்ட 6 மற்றும் 7ம் வார்டுகள் பெண்கள் வார்டாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.வெலிங்டன் கன்டோண்மென்ட் வாரியத்துக்கு உட்பட்ட 7 வார்டுகள் உள்ளன. இதில் 23 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 7 வார்டுகளில் 1 மற்றும் 4ம் வார்டுகள் பெண்கள் வார்டுகளாக இருந்தது. 2ம் வார்டு எஸ்.சி., வார்டாகவும், 3,5,6,7

குன்னூர்:வெலிங்டன் கன்டோண்மென்ட் வாரியத்துக்கு உட்பட்ட 6 மற்றும் 7ம் வார்டுகள் பெண்கள் வார்டாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.வெலிங்டன் கன்டோண்மென்ட் வாரியத்துக்கு உட்பட்ட 7 வார்டுகள் உள்ளன. இதில் 23 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 7 வார்டுகளில் 1 மற்றும் 4ம் வார்டுகள் பெண்கள் வார்டுகளாக இருந்தது. 2ம் வார்டு எஸ்.சி., வார்டாகவும், 3,5,6,7 ஆகிய வார்டுகள் பொது வார்டுகளாக இருந்தன.கவுன்சிலர்களுக்கான பதவி ஐந்தாண்டு காலம் நிறைவடைந்ததால் வரும் டிசம்பர் மாதம் வார்டுகளுக்கான தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் தற்போது வார்டுகள் மாற்றியமைக்க வாரிய நிர்வாகம் முடிவு செய்தது. இதன் பேரில் நேற்று வார்டுகளுக்கான குலுக்கல் வாரிய அலுவலகத்தில் நடந்தது. வாரிய முதன்மை செயல் அதிகாரி வெங்கட் நரசிம்ம ரெட்டி, துணை தலைவர் வினோத்குமார், உறுப்பினர்கள் லலிதா, ஸ்ரீதேவி பாலாஜி மற்றும் மார்டின் பங்கேற்றனர்.
குலுக்கலில் 6 மற்றும் 7ம் வார்டுகள் பெண்கள் வார்டுகளாக அறிவிக்கப்பட்டன. 2ம் வார்டு எஸ்.சி., வார்டாகவே நீடிக்கிறது. மீதமுள்ள 1,3,4,5 ஆகிய வார்டுகள் பொது வார்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X