பெரியார்தாசன் காலமானார்
பெரியார்தாசன் காலமானார்

பெரியார்தாசன் காலமானார்

Added : ஆக 19, 2013 | கருத்துகள் (15) | |
Advertisement
சென்னை:சென்னையில் பெரியார்தாசன் காலமானார். 63 வயதான பெரியார்தாசன் உடல்நலம் சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். பெரியார்தாசன் கேம்பிரிட்ஸ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது

சென்னை:சென்னையில் பெரியார்தாசன் காலமானார். 63 வயதான பெரியார்தாசன் உடல்நலம் சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். பெரியார்தாசன் கேம்பிரிட்ஸ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (15)

Ravanan Ramachandran - Chennai,இந்தியா
19-ஆக-201316:47:16 IST Report Abuse
Ravanan Ramachandran கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக எனது தந்தையின் 80 வது வருட விழாவுக்கு வருகை தந்து சுமார் 150 நிமிடங்கள் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் உரை நிகழ்தியது இன்னும் என் நினைவில் இடம் பெற்றுள்ளது. அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது அவரது பேச்சு. அவரது ஆத்மா சாந்தி அடைய பெரியாரை பிரார்த்திக்கின்றேன்.
Rate this:
Cancel
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ நாடறிந்த அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றிவரும், பிரபல மனோதத்துவ நிபுணருமான பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள் இன்று திங்கட்கிழமை (19.08.2013) அதிகாலை 1:30 மணியளவில் உடல் நலக் குறைவு காரணமாக தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். தன்னுடைய நீண்டகால நாத்திக+புத்தமதப் பயணத்தின் இறுதியில் தன்னையும் இவ்வுலகையும் படைத்தவனைக் கண்டுகொண்ட பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள், "கருத்தம்மா" என்ற பெண்சிசுக் கொலையை மையப்படுத்தி எடுத்திருந்த திரைப்படத்தின் மூலமும் தமிழக மக்களிடையே பிரபலமானவராவார். உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற அவர், கடவுள் மறுப்புக்கொள்கையில் உறுதியாகயிருந்து தனது பெயரையே நாத்திகச் சிந்தனையாளரான பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற சொல்லை இணைத்துக் கொண்டு, 'பெரியார்தாசன்' ஆக வாழ்ந்தவர். சமூக சிந்தனைக் கருத்துகளைப் பரப்புவதில் முன்னணியில் நின்ற அவர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இஸ்லாத்தைப் பற்றி, கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்த பெரியார்தாசன், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 11ந் தேதி (வியாழக்கிழமை) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையத்தில் இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு, தன்பெயரை "படைத்தவனுக்கு அடிமை" என்ற பொருள்படும் "அப்துல்லாஹ்" என்று மாற்றிக் கொண்டார். இஸ்லாத்தை ஏற்ற பிறகு தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் இஸ்லாமியர்கள் தங்கள் அமைப்பின் சார்பாக சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்ததை ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டார். இந்நிலையில் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்கள் உடல் நலிவுற்று சென்னை சோளிங்கநல்லூர் குளோபல் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்தார்.
Rate this:
SKR - kuwait,குவைத்
20-ஆக-201310:12:09 IST Report Abuse
SKRமேலதிக விபரங்களை கொடுத்தமைக்கு நன்றி. ஏக இறைவன் இவருக்கு சொர்கத்தையும் இவரது குடும்பதர்களுக்கு ஆருதலையும் அளிப்பானாக. எஸ் கே ஆர் - குவைத்...
Rate this:
Cancel
Musthafa Shajahan - Jeddah,சவுதி அரேபியா
19-ஆக-201312:22:07 IST Report Abuse
Musthafa Shajahan அப்துல்லாஹ் அவர்களிற்கு சொர்கத்தை அளிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன் ஆமீன் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X