பொது செய்தி

இந்தியா

மதுரைக்கு குறி:உளவுத்துறை எச்சரிக்கை

Updated : ஆக 21, 2013 | Added : ஆக 21, 2013 | கருத்துகள் (1)
Advertisement

மும்பை : பாகிஸ்தான் முகாம்களில் பயிற்சி பெற்ற 8 பயங்கரவாதிகள் இலங்கை வழியாக தென்னிந்தியாவை தாக்க திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. உளவுத்துறை மூலம் மகாராஷ்டிர போலீசுக்கு பெறப்பட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாக்.,கில் பயிற்சி இந்த பயங்கரவாதிகளில் 4 பேர் பஞ்சாபை சேர்ந்தவர்கள் எனவும், மற்றவர்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஜாப்னா நகரில் இருந்து 28 கி.மீ., தொலைவில் முகாமிட்டுள்ள இவர்கள் தமிழகத்தின் மயிலாடுதுறை அல்லது மதுரை நகரங்களை குறித்திருக்கலாம் எனவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்த தாக்குதல் இன்னும் சில மாதங்களில் நடத்தப்படலாம் எனவும், பாக்., நாட்டைச் சேர்ந்த சிலர் இலங்கை பாஸ்போர்ட் மூலம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பை மற்றும் திருவனந்தபுரத்திற்கு வந்து சென்றதாக இலங்கை உளவுத்துறை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani Maran - mannargudi.,இந்தியா
21-ஆக-201309:40:01 IST Report Abuse
Mani Maran பயபுட தேவையில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X