சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் பலாத்கார புகார்

Added : ஆக 22, 2013
Advertisement

புதுடில்லி: சர்ச்சைக்குரிய ஆசாராம் பாபு, 72, சாமியார் மீது, இளம் பெண் ஒருவர், பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்துள்ளார். குஜராத்தின் ஆமதாபாத் அருகே, ஆசிரமம் நடத்தி வருபவர் ஆசாராம் பாபு. பாலியல் பலாத்காரம், மர்மக் கொலைகள் போன்ற பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளவர். இவரின் ஆசிரமத்திற்கு, நாட்டின் பல பகுதிகளில் கிளைகள் உள்ளன. மத்திய டில்லியில் உள்ள, கமலா மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று சென்ற, பெயர் குறிப்பிடப்படாத இளம்பெண் ஒருவர், சாமியார் ஆசாராம் பாபு, தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், பலாத்கார சம்பவம், ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள, ஆசாராம் ஆசிரமத்தில் நடந்ததாக அப்பெண் கூறியதால், வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரிக்குமாறு, ராஜஸ்தான் போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X