அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டணி குறித்து முடிவு செய்ய மீண்டும் மாநாடு: விஜயகாந்த் அறிவிப்பு

Updated : ஆக 26, 2013 | Added : ஆக 24, 2013 | கருத்துகள் (51)
Advertisement
public meeting, alliance,Vijaykanth, கூட்டணி,முடிவு,மாநாடு, விஜயகாந்த்

சென்னை: ""கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், சேலத்தில் மாநாடு நடத்தி, கூட்டணி குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்டேன். அதேபோல, விரைவில் ஒரு மாநாடு நடத்த முடிவு செய்திருக்கிறேன்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தன் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு, தே.மு.தி.க., அலுவலகத்தில், நேற்று, 61 மாற்றுத் திறனாளிகளுக்கு, மோட்டார் சைக்கிள்கள் வழங்கி, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: நான் பேசுவதற்கு முன் சிரித்து விட்டேன். இதை பார்த்தால், நான் குடித்து விட்டு பேசுவதாக பத்திரிகைகளில் செய்தி, வெளியிடுவர். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. சத்ரியனாக இருப்பதை விட, சில நேரங்களில் சாணக்கியத்தனத்தை வெளிப்படுத்த வேண்டும். "விஜயகாந்த் கோபக்காரர்' என, பத்திரிகைகளில் செய்தி போடுகின்றனர். ஆனால், என்னை விட, ஜெயலலிதா அதிக கோபக்காரர். பாவம் ஒரு பக்கம்; பழி ஒரு பக்கம் என்பதை போல, இதைப் பற்றி பெரிதாக செய்தி வெளியிட மாட்டார்கள். நான் மனதில் பட்டதை மட்டுமே பேசுவேன். எனவே, இதைப் பற்றி கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது. 1995ல் இருந்து, அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன.


எம்.ஜி.ஆர்., பெயர் சொல்லி ஒரு கட்சியும், அண்ணாதுரை பெயர் சொல்லி மற்றொரு கட்சியும் மக்களை ஏமாற்றுகின்றன. உண்மையை சொல்வதற்கு, நான் என்றும் பயப்பட மாட்டேன். தவறு செய்தவர்கள் எல்லாம், "டாட்டா' காட்டி செல்லும்போது, எந்த தவறும் செய்யாத நான் எதற்கு பயப்பட வேண்டும். வி.வி.மினரல்ஸ் நிறுவனம், கனிம வள கொள்ளையில் ஈடுபட்டது குறித்து கடந்த ஆண்டே, கன்னியாகுமரியில் நான் பேசினேன். கனிம வளத்தை கொள்ளை அடித்து, நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர். உண்மையைப் பேசினால் வழக்கு போடுவர். என்னிடம், இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. பிரதமரிடம், தே.மு.தி.க., சார்பில், உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதி, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது; ஆனால், அ.தி.மு.க., சார்பில் எந்த நிதியும் வழங்கவில்லை. மக்கள் வரிப்பணத்தில் தான் நிதி வழங்கியுள்ளனர். அரசியல் பேச வேண்டும் என்றால், எதை வேண்டுமானாலும் பேசலாம். அரசிடம் இருந்து மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியது எதுவும் கிடைக்கவில்லை. கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் சேலத்தில் மாநாடு நடத்தி, கூட்டணி குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்டேன். அதேபோல, விரைவில் ஒரு மாநாடு நடத்த முடிவு செய்திருக்கிறேன். இவ்வாறு, விஜயகாந்த் பேசினார். இந்நிகழ்ச்சியில், தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எம்.எல்.ஏ.,க்களை இழுக்க திட்டம்?

நேற்று முன்தினம், தே.மு.தி.க., துணைச் செயலர் ஆஸ்டின், கட்சியிலிருந்து விலகி உள்ளார்; இவர், பண்ருட்டி ராமச்சந்திரனின் தீவிர ஆதரவாளர். இச்சூழலில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, நாளை, அக்கட்சியினரால், மாநிலம் முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், பிறந்த நாளன்று, விஜயகாந்துக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலரை, நாளை, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வைக்கும் முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, தே.மு.தி.க.,வினரை பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது. இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு, எப்படியெல்லாம் குடைச்சல் கொடுக்கலாம் என, யோசித்து செயல்பட்டு வருகிறோம்; அநேகமாக, அவரது பிறந்த நாள் அன்று கூட, அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்புள்ளது' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elangovan Govindasamy - Jacksonville,யூ.எஸ்.ஏ
26-ஆக-201302:42:33 IST Report Abuse
Elangovan Govindasamy விஜயகாந்த் சார் மாநாடு போட்டு தொண்டர்கள் விருப்பத்திற்கினங்க அ தி மு க உடன் கூட்டணி வைத்தீர்கள் அதே கூட்டணியில் இருந்து வெளி ஏறி நீர்களே அப்போ தொண்டர்களிடம் மீண்டும் கருத்து கேட்டிர்களா 29 சீட்டும் எதிர்க்கட்சி அந்தஸ்தும் வந்தபிறகு கண்ணை மறைத்துவிட்டது துரோகம் செய்ய முனைந்தீர் அண்ணா பேரை சொல்லி கொள்ளை அடிப்பவர்களை தெரியும் எம் ஜி ஆர் பெயரை சொல்லி யாரும் கொள்ளை அடிக்கவில்லை ஏதாவது தகடுதித்தம் பண்ணி மக்களை ஏமாற்றி முதல்வர் ஆகும் உமது பகல் கனவு என்றுமே நிறைவேறாது நடக்க இருக்கும் மாநாட்டில் மீண்டும் அ தி மு க வுடன் சேர சொன்னால் சேர்ந்து விடுவீரா?
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
25-ஆக-201319:44:17 IST Report Abuse
suresh ஐயா, கூட்டணி அமைப்பது பற்றி போன தேர்தலிலேயே உங்களை எச்சரித்து இதே நாளிதழில் ஆலோசனை வழங்கி இருந்தேன். எனினும், இம்முறையாவது சேருவார் பக்கம் சேர்ந்து, சேராதாரை ஒதுக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா
25-ஆக-201318:51:22 IST Report Abuse
தங்கவேல்  பாக்கி 3 பேரை வைத்துக்கொண்டு நடத்தினாலும் அது ஒரு ஒரு மாநாடுதான் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X