பெண்­ணாக அடை­யாளம் காட்டி கொள்­ள­மாட்டேன்| Dinamalar

தமிழ்நாடு

பெண்­ணாக அடை­யாளம் காட்டி கொள்­ள­மாட்டேன்

Added : ஆக 25, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தமிழ் சமூ­கத்தில், திரு­நங்­கைகள் அறி­யப்­பட்ட அள­வுக்கு, திரு­நம்­பிகள் அறி­யப்­ப­ட­வில்லை. ‘‘எங்­களை வெளிப்­ப­டுத்தி கொள்ள முடி­யாத அள­விற்கு நம் சமூக சூழல்
இருக்­கி­றது என்­பதை உங்­களால் மறுக்க முடி­யாது,’’ என்­கிறார் திரு­நம்பி செல்வம்.
பெண்­ணாக பிறந்து ஆணாக தன்னை உணர்ந்து தற்­போது ஆணாக வாழ்ந்து வரு­கி­ற­வ­ரிடம்
பேசி­யதில் இருந்து...
பாண்டி செல்வி, செல்­வ­மாக
மாறி­யது எப்­படி?
தேனீ தான் எனக்கு பூர்­வீகம். என்­னோடு பிறந்தவர்கள் மொத்தம் ஐந்து பேர். 4ம் வகுப்பு வரை படித்தேன். பெற்­றோ­ருடன் சேர்ந்து சின்ன வய­தி­லேயே, நானும் கல்­லு­டைக்கும் வேலைக்கு போனேன். ௧௦ வயதில், கூந்தல் வளர்ப்­பது
வேத­னை­யாக இருந்­தது.
இதனால் கோவி­லுக்கு சென்று அடிக்­கடி மொட்டை அடிக்க துவங்­கினேன். ஆண் பிள்­ளை­க­ளுடன் சேர்ந்து விளை­யா­டு­வது, ஊர் சுற்றுவது என்று என் நட­வ­டிக்­கை­களை துவக்­கத்தில் வீட்டில் சாதா­ர­ண­மா­கவே எடுத்து கொண்­டனர்.
பெண்கள் அணியும் உடை­களில் இருந்து விலகி சட்­டையும், கால் சட்­டையும் அணி­வது வழக்­க­மா­னது.
அந்த கால­
கட்­டங்கள்..?
என் வீட்டில் என்னை பெண்­ணாக நடத்­து­வது எனக்கு அதிக வெறுப்பை ஏற்­ப­டுத்­தி­யது. அந்த சூழலில் தனித்து
சுதந்­தி­ர­மாக இருக்­கவே என் மனம் விரும்­பி­யது. அதனால் வீட்டை விட்டு ஓடி போக­லாமா அல்­லது செத்து போக­லாமா என, யோசித்து கொண்­டி­ருந்தேன்.
பதி­னைந்து வய­திற்கு பிறகு தான், நான் யார் என, எனக்கு விளங்க ஆரம்­பித்­தது. ஆனால் வீட்டில் சொல்ல பய­மாக இருந்­தது. அடுத்த மூன்று ஆண்டுகள் வரை வெளி­யு­ல­கத்­திற்­காக பெண்­ணா­கவே வாழ வேண்­டிய சூழ்­நி­லைக்கு தள்­ளப்­பட்டேன்.
முதல் காதல்...?
ஆண்­க­ளோடு சம­மாக பழ­கி­னாலும், எனக்கு அவர்கள் மீது ஈர்ப்பு இல்லை. என் தோழிகள் சிலர் மீது ஈர்ப்பு இருந்­தாலும், அதை காதல் என்று சொல்ல முடி­யாது.
ஆனால், 17 வயதில் என் தோழி ஒருவர் மீது எனக்கு காதல் ஏற்­பட்­டது. நான் அணியும் ஆடைகள், என் நட­வ­டிக்­கை­களை பார்த்து, என்னை ஆண் என்று நினைத்து அவளும்
முழு­மை­யாக காத­லிக்க துவங்­கினாள்.
ஒருநாள் திடீ­ரென்று அவள் என்னை திரு­மணம் செய்­வது குறித்து பேசினாள். அப்­போது தான், நான் என்னை பற்­றிய உண்­மையை அவ­ளிடம் சொன்னேன். அடுத்த ஒரு மணி நேரம் இடை­விடாமல் அழுது தீர்த்­தவள், அடுத்த நொடியில், மீண்டும் என்னை காத­லிப்­ப­தாக சொன்ன போது, எனக்கே ஆச்­ச­ரி­ய­மாக தான் இருந்­தது.
அதற்கு பிறகு...?
அடுத்து ஓராண்­டுக்கு இரு­வரும் எதை பற்­றியும் கவலை இல்­லாமல் தீவி­ர­மாக காத­லித்தோம். திடீ­ரென்று அவ­ளுக்கு திரு­மணம் ஏற்­பாடு செய்த நிலையில், இரு­வரும் வீட்டை விட்டு கேர­ளா­விற்கு ஓடி போனோம். இரு வீட்­டாரும், எங்­களை தேடி கண்­டு­பி­டித்து அழைத்து வந்து விட்­டனர்.
இரண்டு வீடு­களின் பிரச்னை, ஊர் பிரச்­னை­யாக மாறி போனது. அப்­போது ஊரில் அனை­வரும் கூடி­யி­ருந்த நிலையில், ‘நான் பெண் இல்லை...
ஆணாக மாறி விட்டேன்’ என்று சொன்னேன். என்னை பற்றி எவ்­வ­ளவோ விஷ­யங்­களை கூறி, என் நிலை­மையை விளக்­கினேன்.
ஒரு கட்­டத்தில், நான் திரு­நம்பி என்று தெரிந்த பின், வேறு வழியே இல்லை என்று நொந்து போய், அவளை எனக்கு திரு­மணம் செய்து தர ஒரு­வ­ழி­யாக முடி­வெ­டுத்­தனர்.
ஆனால் அப்­போது, ஜாதி பிரச்­னையால்,
அவள் வீட்டில் எனக்கு திரு­மணம் செய்து தர மறுத்து விட்­டனர்.
சென்­னைக்கு வந்­தது எப்­படி?
காதல் தோல்­வியில் கொஞ்ச காலம் ஊரில் சுற்றி திரிந்தேன். அதற்கு மேல், என்னால் அங்கு வாழ முடி­ய­வில்லை. அதனால், சென்னை வந்தேன்.
இங்கு எனக்கு ஓரிரு திரு­நங்­கைகள் உதவி செய்தனர். கட்­டட வேலை, தனியார் நிறு­வ­னத்தில் கூலி வேலை என்று நான்­கைந்து ஆண்­டு­களில், வாழ்க்கை மாறி போனது.
அதற்கு பின் என் குடும்பம் என்னை ஏற்­றுக்­கொள்ள ஆரம்­பித்­தது. தங்­கைக்கு திரு­மண உதவி, தம்பிக்கு படிப்பு செலவு என்று குடும்­பத்­திற்கு உதவி செய்ய ஆரம்­பித்தேன். என் அம்­மாவும், அப்பாவும் இப்­போது என்­னுடன் தான் வசிக்­கின்­றனர்.
சமூ­கத்தில் திரு­நம்­பிகள்
எதிர்­கொள்ளும் பிரச்­னைகள்?
நான் என்னை ஆணாக காட்­டிக்­கொள்ளும் படும் பாட்டை வார்த்­தையால் விளக்க முடி­யாது. அது போன்ற நேரங்­களில், செத்து போய் விடலாம் என்று கூட தோன்றும். ஒரு­வேளை எப்­போ­தா­வது என்னை ஆணாக வெளிப்­ப­டுத்த முடி­யா­மல்­போனால், நிச்­சயம் செத்து போவேன்.
எதிர்­பார்ப்­புகள்?
உங்கள் வீடு­களில் திரு­நம்­பியோ, திரு­நங்­கையோ இருந்தால் முதலில் அவர்­களை முழு­மை­யாக ஏற்று கொள்­ளுங்கள். உங்கள் குழந்தை திரு­நம்பி என்று சொன்னால், அதை மறைத்து வேறொரு ஆணுக்கு, திரு­மணம் செய்து வைத்தால், ஒன்று... அவர்கள் மனச்­சிக்கல் அதி­க­மாகி மரித்து போகலாம். அல்லது கண­வரை விட்டு பிரிந்து வீட்டை விட்டு ஓடி போகலாம். காரணம் ஒரு ஆணால் இன்னொரு ஆணோடு குடும்பம் நடத்த முடி­யாது.
திரு­நம்­பிகள் பாலியல் ரீதி­யாக துன்­பு­றுத்­தப்­பட்­ட­தாக புகார் அளித்தால், கடு­மை­யான
நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X