திருவொற்றியூர். வடிவுடையம்மன் கோவிலில், திருப்பணிஎன்ற பெயரில், கல்வெட்டுக்கள்அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சில கல்வெட்டுக்கள் உடைக்கப்பட்டுள்ளன. மேலும், தரையில், ‘டைல்ஸ்’ கற்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. வழிபாட்டுக்குரிய லிங்கங்கள், பிரிக்கப்பட்டு ஆங்காங்கே சாதாரண கற்கள் போலபோடப்பட்டிருக்கின்றன.
அறநிலைய துறையின் இந்தநடவடிக்கையை பக்தர்கள் மட்டுமின்றி, தொல்லியல் ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
லிங்கங்களுக்கு அவமதிப்பு:
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், தேவார மூவர் பாடல் பெற்ற தலங்களில் முக்கியமானது. 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த கோவிலில், சோழர்கள் உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களை சேர்ந்த மன்னர்களின் கல்வெட்டுக்கள் உள்ளன.கடந்த காலங்களில் நடந்த திருப்பணிகளின் போது, சில கல்வெட்டுக்கள், கோவிலில் ஆங்காங்கே தரையில் பதிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், இந்து சமயஅறநிலைய துறை சார்பில், கும்பாபிஷேகத்திற்காக திருப்பணி நடந்து வருகிறது.அதற்காக, தரையில் பதிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் அகற்றப்பட்டு ஆங்காங்கே போடப்பட்டுள்ளன. இதில், சில கல்வெட்டுக்கள் உடைந்துள்ளன. பிரகாரங்களில் இருந்த
சிவலிங்கங்கள் பிரிக்கப்பட்டு, சாதாரண கற்களை வரலாற்றை,போல கிடக்கின்றன.தரையில், ‘டைல்ஸ்’ கற்கள் பதிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலும், அருணகிரிநாதரும், வள்ளலாரும் வழிபட்ட சிலைகள், அவற்றின் இடங்களில் இருந்துஅகற்றப்பட்டுள்ளன. இது, பக்தர்கள் மட்டுமின்றி, தொல்லியல் ஆர்வலர்களிடமும் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘போராட்டம் நடத்துவோம்’:இது குறித்து, ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் ரமேஷ் கூறியதாவது:கோவிலின் பிரதான சின்னங்களை அப்புறப்படுத்த,அறநிலைய துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. திருப்பணி என்ற பெயரில், கல்வெட்டுக்களை அப்புறப்படுத்துவது, தமிழர்களின்கண்முன்னே அழிப்பதற்கு சமம்.தரையில் உள்ள, கல்வெட்டுக்களை அப்புறப்படுத்தும் போது, நான்கு கல்வெட்டுக்கள் உடைந்துள்ளன. கல்வெட்டுக்கள் விலைமதிப்பற்றவை.
கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும், அறநிலைய துறையால், மூல கல்வெட்டை உருவாக்க முடியாது.இனிமேலும், திருப்பணி என்ற பெயரில், கோவில் சிலைகள் சிதைக்கப்பட்டால், பெரும் போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
இது குறித்து, தொல்லியல்துறை முன்னாள் கண்காணிப்பாளர், சத்தியமூர்த்தி கூறியதாவது:சென்னையில் உள்ள கோவிலில், இது போன்று நடக்கிறது என்பதால், அனைவரின் கவனத்தையும் இந்த செய்தி ஈர்த்துள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட கோவில்களில், இது போன்ற கொடுமைகள், தினசரி நடக்கின்றன.இந்து சமய அறநிலைய துறைக்கு, போதிய அக்கறை இல்லாததே, இதற்கு காரணம்.தமிழக கோவில்களில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவையும் போதிய பராமரிப்பின்றி உள்ளன. இந்த பிரச்னையில், அரசு உடனடியாக தலையிட வேண்டும். இல்லையெனில், இன்னும், 20 ஆண்டுகளில், தமிழகத்தில் கல்வெட்டுக்களையே பார்க்க முடியாமல் போய்விடும்.இவ்வாறு, அவர் கூறினார்.இது தொடர்பாக அறநிலைய துறை உயரதிகாரிகளின் அலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்ட போது அவர்கள், அலைபேசியை எடுக்கவே இல்லை.
பக்தர்கள் திருவொற்றியூர்:
துவக்கத்தில் இருந்தே, இந்த பிரச்னைக்கு எதிராக குரல் கொடுத்தோம். தரையில், ‘டைல்ஸ்’ கற்கள் பதிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், அறநிலைய துறை அதிகாரிகள், எங்கள் முறையீடுகள் எதையும், காது கொடுத்து கேட்கவில்லை. ஆகம விதிப்படி, அமைக்கப்பட்ட கோவில் சிலைகளை அப்புறப்படுத்துவதும், சிவலிங்கங்களை உடைப்பதும், வேதனை அளிக்கிறது. இதுபற்றி முறையிட்டால், அறநிலைய துறை எங்களை எதிரியாகவே பாவிக்கிறது, ஆச்சரியம் தான்.
-நமது நிருபர்-