மீட்டர் பொருத்த தயார்
நமச்சிவாயம், ஆட்டோ ஓட்டுனர்,ஆரப்பாளயம்: மீட்டர் பொருத்த அரசு வலியுறுத்தினால், நாங்கள் பொருத்த தயார். ஓர் இடத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, அங்கிருந்து மீண்டும் திரும்ப வருவதற்கு சவாரி கிடைத்தால் ஓரளவிற்கு லாபம் கிடைக்கும். சவாரி இறக்கிவிடும் இடத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் இருந்தால் அங்கிருந்து நாங்கள் சவாரி ஏற்ற முடியாது. இதனை சமாளிக்கவே சற்று கூடுதலான கட்டணம் கேட்கிறோம். ஆரப்பாளையம்- மாட்டுதாவணி செல்ல ரூ.150 கேட்டால் தான், பேரம் பேசி ரூ.120க்கு வருவார்கள். மீட்டர் இருந்தால் இந்த பிரச்னை இல்லை, மீட்டரை ஆன் செய்தவுடன் குறைந்தபட்ச கட்டணம் காட்டிவிடும். ஆட்டோக்காரர்கள் என்றாலே, அதிக கட்டணத்தை கறந்துவிடுவார்கள் என்று நினைக்கும், பயணிகளுக்கும் சரியான கட்டணம் வசூலிக்கின்றனர் என்ற நம்பிக்கை வரும்.
இனி ரூ.150 கேட்க முடியாது:
செல்லபாண்டி, கார் ஓட்டுனர், பைபாஸ்ரோடு: சென்னை போல், மதுரையிலும் ஆட்டோக்களுக்கு மீட்டர் வைக்க வேண்டும். 8 கிலோ மீட்டர் உள்ள மாட்டுதாவணி - ஆரப்பாளையம் செல்வதற்கு 150 ரூபாய் வாங்கும் ஆட்டோ ஓட்டுனர்கள், இனி அதிகபட்சம் ரூ.90 மட்டுமே வாங்க முடியும். பேரம் பேசி நேரத்தை விரயம் செய்வதை தடுக்க, இது தான் கட்டணம் என மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் வசூலிக்கும் இரு மடங்கு கட்டணம், வெயிட்டிங் சார்ஜ் போன்ற மறைமுக கட்டணங்களும் கனிசமாக குறையும். வெளியூரிலிருந்து மதுரைக்கு வந்து செல்லும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதையும் தடுக்கலாம். மீட்டர் பொருத்துவதால் ஆட்டோ ஓட்டுனர்களும் பயனடைவார்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE