சாமியார் ஆசாராம் குற்றச்சாட்டு : என் மீதான நடவடிக்கைகளுக்கு சோனியா தான் காரணம்

Added : ஆக 30, 2013 | கருத்துகள் (2)
Share
Advertisement
சாமியார் ஆசாராம் குற்றச்சாட்டு : என் மீதான நடவடிக்கைகளுக்கு சோனியா தான் காரணம்

போபால்: ""என் மீதான வழக்கு மற்றும் விசாரணைகளுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவர் மகன் ராகுலும் தான் காரணம்,'' என, சர்ச்சைக்குரிய ஆசாராம் சாமியார் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஜோத்பூர் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்; மீறினால், அவர் கைது செய்யப்படுவார்,'' என, ஜோத்பூர் போலீஸ் கமிஷனர், பிஜு ஜார்ஜ் ஜோசப் தெரிவித்து உள்ளார்.

ஆசிரமம் : குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் ஆசிரமம் நடத்தி வரும், பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள ஆசாராம் பாபு, 72, என்ற சாமியாருக்கு, நாட்டின் பல நகரங்களில், ஆசிரம கிளைகள் உள்ளன. சில நாட்களுக்கு முன், டில்லியைச் சேர்ந்த, 16 வயது சிறுமி, சாமியார் ஆசாராம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, டில்லி போலீசில் புகார் கொடுத்தார். அந்த சம்பவம், ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள சாமியாரின்
ஆசிரமத்தில் நடந்தது என, தெரிவிக்கப்பட்டதால், அந்த வழக்கு, ஜோத்பூருக்கு மாற்றப்பட்டது. "30ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, சாமியாருக்கு, "சம்மன்' அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், "ஏராளமான ஆன்மிக நிகழ்ச்சிகள் இருப்பதால், செப்., 19ம் தேதி வரை என்னால் ஆஜராக முடியாது' என, சாமியார் தெரிவித்து வருகிறார். இதுகுறித்து, ஜோத்பூர் போலீஸ் கமிஷனர், பிஜு ஜார்ஜ் ஜோசப்பிடம் கேட்ட போது, ""30ம் தேதி வரை பார்ப்போம்; அவர் ஆஜராகவில்லை என்றால், 31ம் தேதி அவரை கைது செய்து, ஜோத்பூர் கொண்டு வருவோம்,'' என்றார். இதற்கிடையே, இம்மாதம், 26ம் தேதி, லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தின் போது, "சாமியார் ஆசாராம் பாபு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஐக்கிய ஜனதா தளம் தலைவர், சரத் யாதவ் பேசியிருந்தார். அப்போது, சர்ச்சைக்குரிய சில வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருந்தார். அந்த வார்த்தைகளை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி, டில்லியில் உள்ள சரத் யாதவின் வீட்டுக்கு, சாமியாரின் உதவியாளர்கள் சிலர் நேற்று சென்றனர். அவர்களுடன் பேசிய சரத் யாதவ், பின், நிருபர்களிடம் கூறும்போது, ""முதலில், சாமியாரை போலீசில் சரணடைய சொல்லி, அவரின் உதவியாளர்களை அனுப்பி வைத்துள்ளேன்,'' என்றார்.

எம்.பி.,க்கள் ரகளை : சரத் யாதவை, சாமியாரின் ஆதரவாளர்கள் சந்தித்த விவகாரத்தை, லோக்சபாவில் நேற்று திடீரென எழுப்பிய, ஐக்கிய ஜனதா தளம் கட்சி, எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து எதுவும் அறியாத, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், கமல்நாத் மற்றும் சபாநாயகர் மீரா குமார், சபையை அமைதியாக நடத்த ஒத்துழைக்குமாறு பல முறை வேண்டி கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சாமியார் ஆசாராம்
கூறியதாவது: என் மீதான இந்த வழக்குகளுக்கும், விசாரணைகளுக்கும், காங்கிரஸ் தலைவர், சோனியாவும், அவர் மகன் ராகுலும் தான் காரணம் என, எனக்கு நெருக்கமான சிலர் கூறியுள்ளனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக, மத மாற்றத்தில் ஈடுபட்டு வரும் கும்பலைச் சேர்ந்தவர்களும் இத்தகையவர்களுக்கு ஆதரவாக
உள்ளனர். என்னை கைது செய்து சிறைக்கு அனுப்பினால், நான் உண்ணாவிரதம் இருப்பேன். சிறை உணவை நான் தொட மாட்டேன். என்னை கொல்லும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாக, சிறை உணவு இருக்கும் என, நான் கருதுகிறேன். எனக்கு எந்த கட்சியினரும் ஆதரவாக இல்லை. என்னை காப்பாற்ற யாரும்முயற்சிக்கவில்லை. இவ்வாறு, சாமியார் ஆசாராம் கூறினார்.

இதை, காங்கிரஸ் மறுத்துள்ளது. இதற்கிடையே ஆசாராம் மீதான பாலியல் பலாத்கார வழக்கை சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில், சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MarkaAlagan - hocinminh city,வியட்னாம்
30-ஆக-201304:40:37 IST Report Abuse
MarkaAlagan இதுதாண்டா இந்தியா, ஒவ்வொரு குற்றவாளிகளும் எதையாவது ஒரு காரணத்தைச்சொல்லி தப்பிக்கப் பார்ப்பது.அதற்க்கு மேல் அரசியல் ஆதாயம் தேடி ஏதாவது ஒரு கட்சியில் அடைக்கலம் தேடிக்கொள்வது. போலீசாரே சமன் அனுப்புங்கள், அனுப்பிக்கொண்டே இருங்கள்.
Rate this:
Cancel
p.mohamed rafik,kuruvadi - hafar al batin,இந்தியா
30-ஆக-201302:57:54 IST Report Abuse
p.mohamed rafik,kuruvadi இது போன்ற செக்ஸ் பைத்தியங்களை கைது செய்ய என்ன தயக்கம்.மத மாற்ற கும்பல் என்று எதையாவது சொல்லி தப்பித்து விடலாம் என்று அனைவரையும் முட்டாளாக்க எண்ணுகிறாரா இந்த சாமியார்.மனிதனை மனிதனாக எண்ணாமல் கடவுளாக பூஜித்தால் அதற்கு இவர் பொறுப்பல்ல. மக்களை முட்டாளாக்கி வெறியை விதைக்கும் சமூக விரோத அமைப்புக்களே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X