பொது செய்தி

தமிழ்நாடு

தயா "சைபர் பார்க்' பூங்காவில் மழைநீர் வடிகால் திட்டம்: மேடையை உடைக்க உத்தரவு

Added : செப் 02, 2013
Share
Advertisement
தயா "சைபர் பார்க்' பூங்காவில் மழைநீர் வடிகால் திட்டம்: மேடையை உடைக்க உத்தரவு

மதுரை: மதுரையில், தி.மு.க., எம்.பி., அழகிரி குடும்பத்திற்கு சொந்தமான தயா "சைபர் பார்க்" ஆக்கிரமித்த பூங்காவில், மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டத்தை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி அருகே, அழகிரி குடும்பத்திற்கு சொந்தமான தயா சைபர் பார்க் உள்ளது. கட்டடம் அமைந்துள்ள 1.20 ஏக்கர் நிலத்திற்கு, அழகிரி பெயரில் பட்டா உள்ளது. "மேற்கில் சர்வே எண் "116/2பி'ல் 0.10 சென்ட், 116/2சி 6ல் 0.04 சென்ட், வடகிழக்கில் புல எண் 113/2 வண்டிப்பாதை புறம்போக்கில் 0.08 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டியிருப்பதாக,' புகார் எழுந்தது. அதன் அருகில் உள்ள, "ஹனிவெல்' கம்பெனி அமைந்துள்ள அண்ணாமலை என்பவரின் கட்டடம் 11.50 சென்ட், டி.ராசு என்பவரின் காலி இடத்தில் 5.50 சென்ட், நாச்சம்மை என்பவரின் மருத்துவமனை கட்டடத்தில் 1.50 சென்ட் ஆக்கிரமிப்பு இருப்பதும், தெரியவந்தது.

ஆக்கிரமிப்பின் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்க, 2011 அக்.,4ல், அன்றைய கலெக்டர் சகாயம் நோட்டீஸ் அனுப்பினார். அதைத் தொடர்ந்து, அப்பிரச்னையை, மாநகராட்சி கையில் எடுத்தது. நீண்ட பரிசீலனைக்கு பின், கடந்த பிப்.,26 ல், தயா சைபர் பார்க் ஆக்கிரமித்து கட்டியிருந்த சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு இடத்திலிருந்த பூங்காவின் மரங்கள் வெட்டப்பட்டன. அத்துடன் பிரச்னை முடிந்ததாக கருதப்பட்டது. ஆனால், ஆறு மாதங்களுக்கு பின், வேறொரு வழியில், தயா சைபர் பார்க் நிர்வாகத்திற்கு, மாநகராட்சி நெருக்கடி தந்துள்ளது. சம்மந்தப்பட்ட ரோட்டில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கியது. ரோட்டை ஒட்டி, நேர் திசையில் நடந்த அப்பணி, தயா சைபர் பார்க் கட்டடத்தை ஒட்டி செல்லும் வகையில், மாற்றப்பட்டுள்ளது. இதனால், தயா சைபர் பார்க் நுழைவுப் பகுதிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு பகுதி முழுவதையும், அப்பணியில் பயன்படுத்த உள்ளதால், மழை காலத்தில் சாக்கடை நீர், தயா "சைபர் பார்க்' கட்டடத்தில் பாய வாய்ப்புள்ளது. இந்நிலையில், நேற்று அப்பணிகளை பார்வையிட்ட, கமிஷனர் நந்தகோபால், சைபர் பார்க் கட்டடம் முன் அகற்றப்படாமல் இருந்த பூங்கா சிமெண்ட் மேடையை, உடைத்து அகற்றுமாறு, பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X