சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நான்காவது திருமணம் செய்ய முயன்றவர் திருச்சி பெண்ணை கொன்றது அம்பலம்

Added : செப் 04, 2013
Advertisement
நான்காவது திருமணம் செய்ய முயன்றவர் திருச்சி பெண்ணை கொன்றது அம்பலம்

நாகர்கோவில்: நான்காவது திருமணம் செய்ய முயன்று, போலீசில் பிடிபட்ட, போலி போலீஸ்காரர், வில்வின் ரெஜிஸ், நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். பணத்துக்காக, அவர், திருச்சி, பெண்ணை கொலை செய்தது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே, மிடாலத்தை சேர்ந்தவர், வில்வின் ரெஜிஸ், 27; கட்டட தொழிலாளி. அஞ்சுகிராமம் அருகே, அழகப்பபுரத்தை சேர்ந்த, கல்லூரி மாணவியை, நான்காவது திருமணம் செய்ய முயன்றபோது, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் போலீசார், "உரிய' முறையில் விசாரித்தபோது, ஏற்கனவே, மூன்று பெண்களை திருமணம் செய்ததையும், ஒரு பெண்ணை பணத்துக்காக, கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.

போலீஸ் தரப்பில் கூறியதாவது: வில்வின் ரெஜிஸ், திருச்சி, ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்ப்பதாக கூறி, 2008ல், இப்பகுதியை சேர்ந்த, புனிதா என்பவரை, திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டில் இருந்து, கொடுத்த பணம் மற்றும் நிலத்தை விற்று விட்டு, மேலும், பணம் கேட்டு கொடுமை படுத்தியுள்ளார்.
இது குறித்து, கருங்கல் போலீசில், புனிதா புகார் செய்ததும், "இனி ஒழுங்காக வாழ்வேன்' என, போலீசாரிடம் எழுதி கொடுத்துள்ளார். அதன் பின், திருச்சி, அரியமங்கலத்தை சேர்ந்த, சந்தியா, 25, என்பவரை, இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவருக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளன. ஒரு கட்டத்தில், சந்தியாவை ஏமாற்றி விட்டு, கோவை, வ.உ.சி. நகரை சேர்ந்த, ஜெனிபர், 19, என்பவரை, திருமணம் செய்வதாக கூறி, குமரி மாவட்டத்துக்கு கடத்தி வந்துள்ளார். இது தொடர்பாக, கோவை போலீசார் குழித்துறை வந்து, வில்வின் ரெஜிசை கைது செய்து, சிறையில் அடைத்தனர். வெளியில் வந்த வில்வின், நான்காவதாக, ஒரு கல்லூரி மாணவியை, திருமணம் செய்ய முயன்றுள்ளார். இந்த நிலையில் தான், அவர் மீது புகார் செய்யப்பட்டு, போலீசில் சிக்கினார்.

பெண் கொலை : இவர், 2010ல், திருச்சியில் வசித்தபோது, பக்கத்து வீட்டு பெண், இவருடன் பழகியுள்ளார். அந்த பெண்ணின் கணவர், அதே பகுதியை சேர்ந்த, ஜோஷி என்ற பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். ஜோஷியைக் கொலை செய்ய, பக்கத்து வீட்டுப் பெண், வில்வின் உதவியை நாடியுள்ளார். அவர் அறிவுரைப்படி, ஜோஷி கல்லணைக்கு வரவழைக்கப்பட்டு, அங்கு அவரை, வில்வின் கொலை செய்துள்ளார். "இக்கொலை தொடர்பாக, வில்வினிடம் விசாரணை நடந்து வருகிறது' என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X