புதுடில்லி: ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், இன்று துவங்கும், "ஜி - 20' மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர், மன்மோகன் சிங் நேற்று காலை புறப்பட்டு, மதியம் அங்கு சென்றடைந்தார். இந்த இரண்டு நாள் மாநாட்டில், "பிரிக்ஸ்' நாடுகள் அமைப்பின் தலைவர்களை அவர் சந்தித்து, இந்திய பொருளாதாரம், வளர்ந்த நாடுகளின் பொருளாதார திணிப்பு போன்றவை குறித்து விவாதிக்க உள்ளார்; சனிக்கிழமை நாடு திரும்புகிறார்.
இதை முன்னிட்டு, அவர் வெளியிட்ட அறிக்கையில், "மரபுசாரா நிதிக் கொள்கைகளில் இருந்து, முறைப்படி வெளியே வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என, தெரிவித்திருந்தார்.