புதுடில்லி: மணிப்பூர் மாநிலத்தில், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலால், கடந்த சில நாட்களாக, செய்தித்தாள்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகளும், செய்தித் தாள்களை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இதையடுத்து, மாநிலத்தில் செய்தித் தாள்கள் சுதந்திரமாக வெளிவர தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், பயங்கரவாதிகள் அனுப்பிய மிரட்டல் கடிதங்களை இணைத்து, பிரஸ் கவுன்சில் தலைவர், மார்க்கண்டேய கட்ஜூ, முதல்வர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, இபோபி சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.