ஜம்மு காஷ்மீரில் படுமோசமான செயல் ; மனநலம் பாதித்த 5 பெண்கள் கற்பழிப்பு
ஜம்மு காஷ்மீரில் படுமோசமான செயல் ; மனநலம் பாதித்த 5 பெண்கள் கற்பழிப்பு

ஜம்மு காஷ்மீரில் படுமோசமான செயல் ; மனநலம் பாதித்த 5 பெண்கள் கற்பழிப்பு

Updated : செப் 05, 2013 | Added : செப் 05, 2013 | கருத்துகள் (55) | |
Advertisement
ஜம்மு காஷ்மீரில் மன நலம் பாதித்த 5 மைனர்பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தனியார் அரசு சாரா தொண்டு நிறுவன இயக்குனர் மற்றும் பாதுகாவலர் இருவர் கைது செய்ப்ப்பட்டுள்ளனர். இன்னும் பலருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மன நலம் பாதித்தவர்கள் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக நாடு
Five mentally challenged girls raped in Jammu NGOஜம்மு காஷ்மீரில் படுமோசமான செயல் ; மனநலம் பாதித்த 5 பெண்கள் கற்பழிப்பு

ஜம்மு காஷ்மீரில் மன நலம் பாதித்த 5 மைனர்பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தனியார் அரசு சாரா தொண்டு நிறுவன இயக்குனர் மற்றும் பாதுகாவலர் இருவர் கைது செய்ப்ப்பட்டுள்ளனர். இன்னும் பலருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மன நலம் பாதித்தவர்கள் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளது.

சமீப காலமாக நாட்டில் கற்பழிப்பு குற்றம் பெருகிய வண்ணமே உள்ளது. மருத்துவ மாணவி கற்பழிப்பு, மும்பை பெண் பத்திரிகையாளர் கற்பழிப்பு, மும்பை மற்றும் டில்லி உள்ளிட்ட நகரங்களில் இது போன்ற குற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் மன நலம் பாதித்த பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.




தகவல் வெளியே பரவியது :

ஜம்மு மாவட்டம் ஷன்னிரமா என்ற பகுதியில் அரசு சாரா நிறுவனம் மனநல காப்பகம் நடத்தி வருகிறது. இங்கு 20 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கு உள்ள டைரக்டர் சில பெண்களிடம் தவறான முறையில் நடந்துள்ளார் என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர் மூலம் தகவல் வெளியே பரவியது. இதனையடுத்து போலீசில் அளித்த புகாரின்படி காப்பகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து நடந்த விசாரணையில் இயக்குனர் இந்த குற்றத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து இயக்குனர் கைது செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்த பாதுகாவலரும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் சிலர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.


300 க்கும் மேற்பட்ட கற்பழிப்பு : ஜம்மு டிவிஷனல் கமிஷனர் இது குறித்து விசாரிக்க டாக்டர்கள் மற்றும் போலீசார் கொண்ட குழுவை நியமித்தார். இந்த குழு விசாரணையில் இந்த பெண் குழந்தைகளிடம் சிலர் வழக்கமாக பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சில ஊழியர்களும் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்து வருகிறது.


மனநலம் பாதித்த குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த கொடூரத்தில் ஈடுபட்டவர்களுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.


காஷ்மீரை பொறுத்தவரை கடந்த 2012 ம் ஆண்டில் 300 க்கும் மேற்பட்ட கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (55)

Nagarajan Thamotharan - Chennai,இந்தியா
06-செப்-201312:07:25 IST Report Abuse
Nagarajan Thamotharan கடுமையான சட்டங்களினாலும் , தண்டனைகளும் மனிதனின் அடிப்படை குணத்தை / பாலியல் கவவ்ர்சியை / காம பசியை கட்டுபடுத்த முடியாது என்பதை அரசு நினைவு கொள்ள வேண்டும். அடக்கு முறைகள் கொடூர குற்றங்களை தூண்ட வழிவகை ஏற்படுத்தும். வரைமுறையற்ற கலாசாரம் , கட்டுபாடற்ற சமுதாயம், விதிமுறைகளை மீறிய மனித தேவைகளுக்காக மாற்றியமைக்கப்பட்ட / எழுதப்பட்ட மத கோட்பாடுகள், சுயநலமுடைய அரசியல்வாதிகளின் தவறான வழிநடத்தல் இவையெல்லாம் பாலியல் குற்றங்கள் பெருக காரணமாக இருக்கின்றது . நகர வளர்ச்சிக்கு வித்திட்ட அரசாங்கம், நகர் புற மக்களுக்கு தேவையான வசதிகளையும், கேளிக்கை விடுதிகளையும், மது பார்களையும் அனுமதித்த அரசாங்கம், தனி மனிதனின் விருப்பத்தை போக்க நகர்புற வழர்ச்சியின் அங்கமான பாலியல் தொழிலை தடை செய்வதால் இது மாதிரியான இழிவான செயல் / அறியாத வயதில் பணத்திற்காக விற்கபடும் அவலம் / மனநலம் குன்றியவர்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குடும்ப பெண்களுக்கு பாலியல் ரீதியான இடையூரு போன்ற செயல்கள் நடைபெறுகிறது . மத்திய / மாநில அரசு புறநகர் பகுதிகளில் நகர்புற வழர்ச்சியின் அங்கமான பாலியல் தொழிலை, வருமானத்திற்காக தொழில் செய்ய முன்வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தொழில் ரீதியான விதிமுறைகளை / கட்டுபாடுகளை விதித்து பாலியல் தொழிலுக்கு (சிகப்பு விளக்கு பகுதிகளை ) அங்கீகரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் குடும்ப பெண்கள் நிம்மதியாக வாழ / இது மாதிரியான இழி செயல் நடைபெறாமல் தடுக்க முடியும்.
Rate this:
Cancel
Skv - Bangalore,இந்தியா
06-செப்-201311:15:14 IST Report Abuse
Skv வெரிவந்துட்டால் பயித்தியமாவது பித்தாவது கழிசடைகள் கழுதையகூடா விடமாட்டானுக இப்படி வெறிபிடிச்சு அலையும் கூட்டத்தாஇ வெறி பிடிச்சா நாயவிட்டு கடிச்சு குதர்வைக்கணும் ஹைட்ரோபோபிய வந்து சாவட்டும் சனிக மாட்டின்ன்டவன் கதி இதுன்னும் மாட்டிக்காமல் திரயும் பல பெரியமனித போர்வைலே இருக்கும் நாய்களையும் கொல்லனும் விஷவாயு செலுத்தி
Rate this:
Cancel
Sesha Narayanan - Chennai,இந்தியா
06-செப்-201309:54:27 IST Report Abuse
Sesha Narayanan சமீபத்தில் முகனூலில் ஒரு சம்பவம். கர்பவதியான ஒரு மானை ஒரு பெண் சிங்கம் அடித்து கொன்று விட்டது. அப்புறம்தான் கர்பத்தில் உள்ள குழந்தை மானை பார்த்தது. வேதனை தாங்காமல் பத்தடி சென்று விழுந்து விட்டது. இதை போட்டோ எடுத்த போட்டோக்ராபர் கிட்ட சென்று பார்த்திருக்கிறார். பெண் சிங்கம் கர்பவதியான அந்த மானை கொன்ற வேதனை தாங்கள் இறந்து விட்டது. இந்த மிருகங்களுக்கு உள்ள நேயம் கூட ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு இல்லை என்பது வேதனைக்கு உரிய விஷயம். காமத்தை கொன்று மனிதர்கள் முதலில் மனித நேயம் கொள்ளட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X