புதுடில்லி: பல்வேறு வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் நிறுவனரான யாசின் பட்கல், இந்திய-நேபாள எல்லையில் , கைது செய்யப்பட்டார். பட்கல் கைது சம்பவம் குறித்து, முலாயம்சிங் யாதவின், சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலர் கமல்பரூக்கியிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு அவர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் சிறுபான்மையினர் குறிவைக்கப்படுகின்றனர் என்றார். இவரின் பேச்சு மதநல்லிணக்கத்திற்கு எதிராக உள்ளதாக எழுந்த புகாரின் பேரில், அவரை கட்சியின் பொதுச்செயலர் பதவியை பறித்து, கட்சி மேலிடம் நீக்கி உத்தரவி்டடது.