இந்திய எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி ஆப்கனில் தலிபான்களால் சுட்டுக்கொலை

Added : செப் 06, 2013 | கருத்துகள் (1)
Advertisement

காபூல்: ஆப்கானிஸ்தானில் வசித்த, இந்திய எழுத்தாளர், சுஷ்மிதா பானர்ஜி, தலிபான்களால், நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். கோல்கட்டாவைச் சேர்ந்தவர் சுஷ்மிதா பானர்ஜி, 49. இவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த வர்த்தகர் ஜான்பாஸ் கானை, 1989ல், திருமணம் செய்து கொண்டார். அதன் பின், சுஷ்மிதா, ஆப்கானிஸ்தானில் உள்ள, பக்டியா மாகாணத்தின், கரானா நகரில் வசித்து வந்தார். இந்து பெண் என்பதால், இவர் பர்தா எதையும் அணியாமல் நடமாடி வந்தார். இதனால், தலிபான்கள் இவரை மிரட்டினர். இவர் தன் வீட்டில் சுகாதார மையம் ஆரம்பித்து, சேவையாற்றி வந்தார். இதையும் மூடும் படி தலிபான்கள் எச்சரித்தனர். தலிபான்களின் உத்தரவை இவர் மதிக்காததால், ஒழுக்கம் தவறிய பெண்ணாக இவரைச் சித்தரிக்க முயன்றனர். ஒரு கட்டத்தில் அவரை, நாட்டை விட்டுத் துரத்த முயன்றனர். இதற்காக ஒரு முறை இவரைச் சிறை பிடித்துக் கொடுமைப்படுத்தி உள்ளனர். இதையெல்லாம் சுஷ்மிதா, கட்டுரையாக எழுதியுள்ளார். இவருடைய அனுபவங்கள், 2003ல், "எஸ்கேப் பிரம் தலிபான்' என்ற, இந்திப் படமாகத் தயாரிக்கப்பட்டது. இவருடைய வேடத்தில், நடிகை மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். தலிபான்களின் கெடுபிடிகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல், பாகிஸ்தான் வழியாக இவர் தாயகம் தப்பி வந்தார். தலிபான் ஆட்சி முடிந்ததால், மீண்டும் ஆப்கான் சென்று கணவருடன் வசித்து வந்தார்.
இருப்பினும், தலிபான்கள் இவரை மறைமுகமாக மிரட்டி வந்தனர். இந்நிலையில், நேற்று இவர் வீட்டுக்குள் புகுந்த தலிபான்கள், சுஷ்மிதாவின் கணவரைக் கட்டிப் போட்டு விட்டு, இவரை வெளியே இழுத்து வந்து சரமாரியாகச் சுட்டனர். பின், அங்கிருந்த இஸ்லாமியப் பள்ளியில் இவரது சடலத்தைப் போட்டு விட்டு ஓடி விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
lia - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
06-செப்-201308:13:10 IST Report Abuse
lia Miga kodooramana ondru... ithu pol nam naatil vaetru mathatthinaruku nadanthirunthal?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X