பொது செய்தி

தமிழ்நாடு

நாத்திகவாதம் பேசுபவர்களுக்கு கோவில்களில் நிகழ்ச்சி நடத்த தடை

Updated : செப் 07, 2013 | Added : செப் 06, 2013 | கருத்துகள் (62)
Share
Advertisement
நாத்திகவாதம், கோவில்களில், நிகழ்ச்சி, தடை,Ban, belovers, god

கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுக்கு, தமிழகத்தில் உள்ள, கோவில் நிலங்களை வாடகைக்கு கொடுப்பதற்கும், மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்குவதற்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 38 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. இவற்றில், ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ள கோவில்கள் எண்ணிக்கை, 234.கோவில்களுக்கு, சொந்தமாக திருமண மண்டபங்கள், பொது நிகழ்ச்சிக்கான மண்டபங்கள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்படுகின்றன.
இதில், நிகழ்ச்சிகள் நடத்த எந்த கட்டுப்பாடும் இல்லை.


இழுக்கு:

கடந்த மாதம், திருவாரூர் அருகே உள்ள கிராமத்தில், தி.க.,வினர் நிகழ்ச்சிக்கு கோவில் மண்டபம் அளிக்கப்பட்டது பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது.இது குறித்து, "ஜோதிமலை இறைபணி திருக்கூடம்' சார்பில், முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவில் உள்ள தகவல் குறித்து, அதன் நிர்வாகிகள் கூறியதாவது: திருவாரூர் மாவட்டம், கமலாபுரம் அருகிலுள்ள கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் உள்ள சிவாலயத்துக்கு உட்பட்ட திருமண மண்டபத்தில், திராவிடர் கழக கூட்டம், சமீபத்தில் நடந்தது. இப்பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல இடங்களில், கோவில்களுக்குச் சொந்தமான இடங்களில், கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுக்கு, இடம் தரப்படுகிறது. ஆன்மிகத்துக்கு இழுக்கான இச்செயலை, அறநிலையத்துறை அனுமதிப்பது தவறு. இதுபோன்ற மண்டபங்களை, பக்தர்கள் பயன்பெறும் வகையில் வாடகைக்கு விட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து, கோவில் செயல் அலுவலர்களுக்கும், புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


அனுமதிக்காதீர்கள்:

இனி, வரும் காலங்களில், கோவிலுக்குச் சொந்தமான திருமண மண மண்டபங்கள், கோவிலை சுற்றியுள்ள வளாகத்தில், இந்து சமயம் வளர்ச்சி சம்பந்தப்படாத கொள்கை உடையவர்களுக்கும், நாத்திகவாதத்தை கொள்கையாக கொண்டவர்களுக்கும் இடம் அளிக்க கூடாது. மது, மாமிசம் பயன்படுத்தும் கூட்டங் களுக்கும் இது பொருந்தும். மண்டபங்களை சமய வழிபாடு, தெய்வீக தன்மைக்கும், வளர்ச்சிக்கும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் மட்டுமே, அனுமதிக்க வேண்டும்; வாடகைக்கு கொடுக்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KUNDALAKESI - London,யுனைடெட் கிங்டம்
08-செப்-201303:58:50 IST Report Abuse
KUNDALAKESI தி க காரனும், அறிவே இல்லாமல் பகுத்தறிவு பேசும் மற்ற அறிவிலிகளும், தீவிர இந்து பக்தர்கள் தான். காசுக்காக, இந்து கடவுள்களையும், இந்து மத நம்பிக்கைகளையும் பேசுகிறார்கள். இவனுக என்னதான் தொண்ட கிழிய பேசினாலும் , இந்து மதத்த விட்டு போக மாட்டானுக. வேற மதத்துக்காரன் இவனுகள உள்ள விடமாட்டான். அல்லது வேற மதத்துக்கு போனா இப்படி பகுத்தறிவு பேசி காசு பாக்க முடியாது. இந்த பயலுகள எங்கயும் நிகழ்ச்சி நடத்த விடகூடாது.அது தான் சரி
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
07-செப்-201322:45:40 IST Report Abuse
Natarajan Ramanathan நாத்திகம் பேசுபவர்கள் ராகுகாலம் எமகண்டம் போன்ற நேரங்களில் தங்களது திருமணத்தைகூட நடத்துவதில்லை. அவ்வளவு ஏன் செவ்வாய் சனி கிழமைகளில் கூட திருமணம் செய்வதில்லை.
Rate this:
Share this comment
Cancel
ingurkumar - mettupalayam ,இந்தியா
07-செப்-201319:27:40 IST Report Abuse
ingurkumar கருத்து சரிதான் ..ஆனால் இது எந்த அளவுக்கு சட்டப்படி செல்லுபடி ஆகும் என்று தெரியவில்லை . இன்று கடவுளையே வியாபார பொருள் ஆக்கி விட்டார்கள் கோவிலை சுற்றி உள்ள இடங்களை வாடகைக்கு விடுவதும் அல்லது ஏலத்தில் விடுவதும் நானையமாக , நேர்மையாகவும் நடக்கிறதா ?அப்படி ஏலத்தில் எடுப்பவர்கள் விழா காலங்கள் ,முக்கிய நாட்களில் தேங்காய் பழம் முதல் கொண்டு உணவு பொருள்கள் ,தண்ணீர் வரை கொள்ளை விலைக்கு விற்கிறார்களே ?இது புனிதமான இடம் கடைகளை சுத்தி சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும் என்கிற அடிப்படை உணர்வு கூட இல்லையே ?உண்மையான நாத்திகனை ஆண்டவன் வெறுக்க மாட்டான் .தெய்வ ஸ்தலத்தை தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்துவதை தான் வெறுப்பான் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X