கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த கலெக்டர் : மத்திய பிரதேசத்தில் நடந்த ஆச்சர்ய சம்பவம்

Updated : செப் 07, 2013 | Added : செப் 07, 2013 | கருத்துகள் (21) | |
Advertisement
போபால்:மத்திய பிரதேசத்தில், விகாஸ் நர்வால் என்ற கலெக்டர், கழிவுநீர் கால்வாயை, சுத்தம் செய்யும் பணியில், நேரடியாக களமிறங்கியது, பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ""மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்க வேண்டும் என்பதற்காகவே, சுத்தம் செய்யும் பணியில், நானே இறங்கினேன்,'' என, அவர் விளக்கம் அளித்துள்ளார்.மத்திய பிரதேசம் மாநிலம், நீமூச் மாவட்டத்தில், சமீப
MP collector gets his hands dirty, cleans clogged drains himselfகழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த கலெக்டர் : மத்திய பிரதேசத்தில் நடந்த ஆச்சர்ய சம்பவம்

போபால்:மத்திய பிரதேசத்தில், விகாஸ் நர்வால் என்ற கலெக்டர், கழிவுநீர் கால்வாயை, சுத்தம் செய்யும் பணியில், நேரடியாக களமிறங்கியது, பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ""மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்க வேண்டும் என்பதற்காகவே, சுத்தம் செய்யும் பணியில், நானே இறங்கினேன்,'' என, அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம், நீமூச் மாவட்டத்தில், சமீப காலமாக, டெங்கு காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. "இங்குள்ள, முக்கிய நகரங்களில், கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதும், சுகாதார பணிகளை, சரியாக மேற்கொள்ளாததும் தான், இதற்கு காரணம்' என, பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்த மாவட்ட கலெக்டர், விகாஸ் நார்வால், அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். கடந்த, ஒரு வாரமாக, நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில், அவரே, நேரடியாக களமிறங்கியுள்ளார்.கழிவுநீர் கால்வாயை, கலெக்டர் சுத்தம் செய்வதை பார்த்த, பொதுமக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். "கலெக்டரே சுத்தம் செய்கிறார்; நாமும் செய்யலாமே' என, பொதுமக்கள் பலரும், சுத்தப்படுத்தும் பணியில், அவருடன் சேர்ந்து, ஆர்வத்துடன், ஈடுபட்டு வருகின்றனர்.

கலெக்டர், விகாஸ் அகர்வால் கூறியதாவது:கலெக்டர், ஒரு மாவட்ட நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். தன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை, சுத்தமாக பராமரிப்பதில், கலெக்டருக்கும் முக்கிய பங்கு உள்ளது. இதனால் தான், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக திகழும் வகையில், நானே, சுத்தம் செய்யும் பணியில் இறங்கினேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

L.Karthikeyan - Gudiyatham,இந்தியா
07-செப்-201320:48:14 IST Report Abuse
L.Karthikeyan நல்லது தானே வேலையில் இறங்கிய..........கலெக்டருக்கு.....நன்றி.....நன்றி
Rate this:
Cancel
guhanvarma - johor,மலேஷியா
07-செப்-201319:35:33 IST Report Abuse
guhanvarma வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Narayanaswamy Chandrasekaran - Doha,கத்தார்
07-செப்-201316:53:47 IST Report Abuse
Narayanaswamy Chandrasekaran பல ஆண்டுகள் முன்பு ஒரு மத்திய அரசாங்க தொழிற்சாலையில் அங்கு பணியிலிருந்த பொது மேலாளர் ஆஸ்பத்தரியில் மருத்துவரைப்பார்க்க வரிசைல்யில் அமர்திருந்தார். அதை பார்த்த மருத்துவர் அவரிடம், உங்கள் நேரம் இந்த தொழிற்சாலைக்கு மிகவும் காஸ்ட்லி என்று சொல்லி முதலில் அவரை கவனித்து அனுப்பிவைத்தார். இங்கு ஒரு மாவட்ட அதிகாரி சாக்கடை சுத்தம் செய்து அவரது பொன்னான மற்றும் மிகவும் காஸ்ட்லி நேரத்தை வீனடித்ததோடல்லாமல் விளம்பரம் வேறு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X