செஞ்சி:பென்னகர்
அரசு உயர் நிலை பள்ளியில் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா
நடந்தது.தலைலைமயாசிரியர் முனுசாமி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக
தலைவர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர் கருணாநிதி
வரவேற்றார்.அரிமா சங்க மாவட்ட தலைவர் முருகன் ஆசிரியர்களுக்கு சால்வை
அணிவித்து, நினைவு பரிசு வழங்கினார். அரிமா சங்க பொருளாளர் அசோக்குமார்,
வர்த்தகர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியை
ஜெயந்தி ஆசிரியர் தின செய்தியை கூறினார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி
பரிசு வழங்கினர். ஆசிரியர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.