பொது செய்தி

இந்தியா

ஸ்ரீநகரின் தால் ஏரியில் இன்று ஜுபின் மேத்தா இசை நிகழ்ச்சி

Added : செப் 07, 2013
Advertisement
 ஸ்ரீநகரின் தால் ஏரியில் இன்று ஜுபின் மேத்தா இசை நிகழ்ச்சி

புதுடில்லி: ""என் இசை நிகழ்ச்சியை நடத்த, நான் காஷ்மீரை தேர்ந்தெடுக்கவில்லை; காஷ்மீர் தான் என்னை தேர்ந்தெடுத்துள்ளது. இசை, அமைதியின் மறுவடிவம்,'' என, சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள, இந்தியாவைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர், ஜுபின் மேத்தா, 77, கூறினார்.
மும்பையில், பார்சி இனத்தை சேர்ந்த, மெஹ்லி மேத்தாவின் மகனாக பிறந்த இவர், உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். ஜம்மு - காஷ்மீரின் கோடைகால தலைநகர், ஸ்ரீநகரின் தால் ஏரி பகுதியில் இன்று, பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இதில் பங்கேற்க, நாடு முழுவதும் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும், ஏராளமான இசை ஆர்வலர்கள், ஸ்ரீநகரில் குவிந்து வருகின்றனர்.
சமூக நல்லிணக்கத்திற்கான, தாகூர் விருது, ஜுபின் மேத்தாவுக்கு, டில்லி, ராஷ்டிரபதி பவனில் நேற்று வழங்கப்பட்டது. மேத்தாவுக்கு அந்த விருதை வழங்கிய ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, ""இந்த நாட்டின் வியத்தகு குடிமகன், ஜுபின்,'' என, புகழாரம் சூட்டினார்.

"காஷ்மீர் உணர்வு' என்ற பெயரில், இன்று அவர் நடத்த உள்ள இசை நிகழ்ச்சி குறித்து, ஜுபின் நேற்று கூறியதாவது: அமைதியின் தூதவன் இசை. பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் சொல்ல, என்னிடம் ஒன்றுமில்லை. என் இசை நிகழ்ச்சியை நடத்த, நான் காஷ்மீரை தேர்ந்தெடுக்கவில்லை; என்னை, காஷ்மீர் தேர்ந்தெடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X