பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமானது கச்சத்தீவு: ஆதாரங்களை முதல்வரிடம் வழங்க வாரிசுகள் முடிவு

Updated : செப் 09, 2013 | Added : செப் 07, 2013 | கருத்துகள் (58)
Advertisement
Katchaatheevu,Tamilnadu,ராமநாதபுரம், மன்னர்,சொந்தமானது, கச்சத்தீவு,ஆதாரம், முதல்வர்

சென்னை: கச்சத்தீவை மீட்க, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள, முதல்வருக்கு உதவியாக, ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்திற்கே, கச்சத்தீவு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை, முதல்வரிடம் வழங்க, சேதுபதி வாரிசுகள் முடிவு செய்துள்ளனர்.
இலங்கையின், யாழ்ப்பாணத்தில் இருந்து, 70 கி.மீ., தூரத்திலும், ராமேஸ்வரத்தில் இருந்து, 18 கி.மீ., தொலைவிலும், கச்சத்தீவு அமைந்துள்ளது. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், கச்சத்தீவில் இறங்கி, ஓய்வெடுப்பர்; வலைகளை காய வைப்பர். அங்குள்ள தேவாலயத்திற்கு, இரண்டு நாடுகளைச் சேர்ந்தவர்களும் சென்று வருவர். சமீப காலமாக, அப்பகுதிக்குச் செல்லும், தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர், சிறை பிடித்து செல்வதால், கச்சத்தீவு பிரச்னை பெரிதாகி உள்ளது.
வழக்கு:

இலங்கை அரசு, "கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்' என்கிறது. இத்தீவு, 1974ல், யாருடைய ஒப்புதலும் இல்லாமல், மத்திய அரசால், இலங்கைக்கு தானமாக வழங்கப்பட்டது. தற்போது, அதன் தேவை அதிகமாக உள்ளதால், இலங்கையிடம் இருந்து, கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இம்மனுவிற்கு, சமீபத்தில் மத்திய அரசு சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்படவில்லை. அதனால், அதை திரும்பப் பெறுவது என்ற கேள்விக்கே இடம் இல்லை; கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது' என, தெரிவித்திருந்தது.
கொந்தளிப்பு:

இது, தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கச்சத்தீவு, இந்தியாவிற்கு சொந்தமானது என்பதற்கு, ஏராளமான ஆதாரங்கள் உள்ள நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை, திரும்பப் பெற வேண்டும் என, தமிழக எம்.பி.,க்கள், லோக்சபாவில் வலியுறுத்தினர்.
ஆதாரம்:

"பிரச்னைக்குரிய கச்சத்தீவு, ராமநாதபுரம் மன்னராக இருந்த சேதுபதிக்கு சொந்தமானது; இத்தீவு பகுதியில் முத்தெடுக்கும் உரிமையை, சேதுபதி மன்னர் குத்தகைக்கு விட்டுள்ளார்; ராமநாதபுரம் மன்னருக்கு, கச்சத்தீவு சொந்தமானது' என்பதற்கான ஆவணங்களை, அவரது வாரிசுகள், 1968ல், அப்போது வெளியுறவுத் துறை செயலராக இருந்த, கே.ஜி.நாயரிடம் வழங்கி உள்ளனர். அதேபோல், தமிழக முதல்வராக இருந்த, அண்ணாதுரையிடமும் வழங்கி உள்ளனர். அதன்பின், 1974ல், இந்திய அரசால், கச்சத்தீவு இலங்கைக்கு, தானமாக வழங்கப்பட்டுள்ளது. அப்போது, சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்திய மீனவர்களும், வழிபாட்டுக்கு செல்லும் பயணிகளும், கச்சத்தீவு செல்ல, இலங்கை அரசிடம் எவ்விதமான அனுமதியும் பெற வேண்டியதில்லை என்பது, அதில் முக்கியமான நிபந்தனையாக உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில், கச்சத்தீவு, இந்திய கடற்படை தளமாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக உள்ளது. கச்சத்தீவிற்கும், இந்தியாவிற்கும் இடையில், ஏராளமான கனிம வளம் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, கச்சத்தீவை மீட்க வேண்டியது அவசியம் என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இச்சூழலில், கச்சத்தீவு தங்கள் பரம்பரைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை, ராமநாதபுரம் மன்னர் பரம்பரையினர், முதல்வரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். இவை, கச்சத்தீவை திரும்பப் பெற உதவியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
விருப்பம்:

இது குறித்து, ராமநாதபுரம் மன்னராக இருந்த ராமநாத சேதுபதியின் மகளும், சென்னையில் வசித்து வருபவருமான ராஜேஸ்வரி நாச்சியார் கூறியதாவது: கச்சத்தீவு எங்களுக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்களை, 1968ல், என் தந்தை, அவரிடம் உதவியாளராக இருந்த ராமச்சந்திரன் மூலம், வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த நாயரிடம் வழங்கி உள்ளார். கிழவன் சேதுபதி காலத்தில் இருந்து, கச்சத்தீவு எங்கள் மூதாதையர் வசம் இருந்துள்ளது. மண்டபம் மரைக்காயர் உட்பட, நான்கு பேருக்கு, குத்தகைக்கு விட்டுள்ளனர். இத்தீவை, மீனவர்கள் பயன்படுத்திக் கொள்ள, அனுமதி அளித்துள்ளனர். எங்கள் சமஸ்தானத்திற்கு சொந்தமான, 52 கோவில்களின், பரம்பரை அறங்காவலராக, நான் உள்ளேன். நிலம் தொடர்பான ஆவணங்கள், பூர்வீக வீட்டில் உள்ளன. அவற்றை ஆய்வு செய்தால், கச்சத்தீவு தொடர்பான தகவல்கள் முழுமையாகக் கிடைக்கும். அவற்றை முதல்வரிடம் ஒப்படைப்போம். கச்சத்தீவு, இந்தியாவிற்கு சொந்தமானது. அதை விட்டுக் கொடுக்கக் கூடாது. நம் மீனவர்களுக்கு, அத்தீவு பயன் அளிக்க வேண்டும் என்பதே, எங்கள் விருப்பம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

ராமநாத சேதுபதி தம்பி மகன், குமரன் சேதுபதி கூறுகையில், ""கச்சத்தீவு, ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவற்றை விரைவில் முதல்வரை சந்தித்து, வழங்க உள்ளோம். கச்சத்தீவை மீட்க போராடும், முதல்வருக்கு உறுதுணையாக இருப்போம்,'' என்றார்.
"கச்சத்தீவு' பெயர் காரணம்:

கச்சத்தீவில், "டார்க் குவீன்' என்ற பச்சை ஆமைகள் அதிகம் உள்ளன. "கச்சபம்' என்றால், "ஆமை' என பொருள். பச்சைத் தீவு என்பதே, நாளடைவில் கச்சத்தீவு என அழைக்கப்பட்டது. கடந்த, 1882ல், எட்டு தீவுகள், 69 கடற்கரை கிராமங்கள், ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு, சொந்தமாக இருந்துள்ளன. அந்த எட்டு தீவுகளில், கச்சத்தீவு ஒன்று. சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும், "உமிரி' மூலிகை, கச்சத்தீவில் அதிகம் உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vaithee eashwar - Gandhinagar,இந்தியா
13-செப்-201310:49:59 IST Report Abuse
vaithee eashwar தன்னுடைய பகுதியை தன்னுடையதல்ல என்று உலகத்தில் கூறுகிற ஒரே நாடு இந்தியா தான். ஒரு இந்தியனாக வெட்கப்படுகிறேன். கச்சதீவை தன்னுடையதல்ல என்று கூறிய மத்திய அரசாங்கம் காஷ்மீரும் எங்களுடயதல்ல என்பதை எப்பொழுது கூறும்?
Rate this:
Share this comment
Cancel
Sundar Pandian - doha,கத்தார்
09-செப்-201300:48:02 IST Report Abuse
Sundar Pandian ராமநாதபுரம் சமஸ்தானம், மன்னர் திரு சேதுபதி ராஜா அவர்களின்,புதல்வி அம்மையார் திருமதி ராஜேஸ்வரி அவர்களுக்கு, தக்க சமயத்தில் நமது மண்ணின் ஆதாரத்தை ஆதாரனத்தின் ஆவணத்தையும் வெளிக்கொண்டு வந்தற்கு எண்களின் ஆயிரம்,ஆயிரம் கோடி நன்றி
Rate this:
Share this comment
Cancel
mani k - trichy,இந்தியா
08-செப்-201319:30:48 IST Report Abuse
mani k முன்னாள் அரசாண்ட மன்னர்களுக்கு நம் மக்கள் மீது இருக்கும் கருணை கூட இந்நாள் அரசாலும் மந்திரிகளுக்கு இல்லை என்பது மிக மன வேதனை அளிக்கிறது.கி.மணி.trichy.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X