சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் மோட்டார் பழுது மக்கள் குடிநீர் இன்றி அவதி தேவை மாற்று நடவடிக்கை

Added : செப் 08, 2013
Share
Advertisement
குஜிலியம்பாறை : கூம்பூர் ஊராட்சி பாறைப்பட்டியில், குடிநீர் மின் மோட்டார் பழுதால், நான்கு குக்கிராம மக்கள், குடிநீர் இன்றி ஒரு வாரமாக அவதிப்படுகின்றனர்.கூம்பூர் ஊராட்சி பாறைப்பட்டியில் 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு, சின்னக்குளத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து, குடிநீர் சப்ளை ஆகிறது. இந்த குடிநீர் தான் பாறைப்பட்டி,

குஜிலியம்பாறை : கூம்பூர் ஊராட்சி பாறைப்பட்டியில், குடிநீர் மின் மோட்டார் பழுதால், நான்கு குக்கிராம மக்கள், குடிநீர் இன்றி ஒரு வாரமாக அவதிப்படுகின்றனர்.
கூம்பூர் ஊராட்சி பாறைப்பட்டியில் 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இங்குள்ள குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு, சின்னக்குளத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து, குடிநீர் சப்ளை ஆகிறது.
இந்த குடிநீர் தான் பாறைப்பட்டி, வால்நாயக்கனூர், கணக்கப்பிள்ளையூர், ராஜபுரம் குக்கிராம மக்களுக்கு செல்கிறது. இந்நிலையில், பாறைப்பட்டிக்கான போர்வெல் மோட்டார், காயில் போய்விட்டதால், கடந்த ஒரு வாரமாக, நான்கு குக்கிராம மக்கள், குடிநீர் இன்றி தவிக்கின்றனர். இதேபோல், அருகில் உள்ள கணக்கப்பிள்ளையூருக்கான, தனி குடிநீர் போரில் இருந்து, கடந்த ஒரு மாதமாக சப்ளை இல்லாததால், இப்பகுதி மக்கள், குடிநீரை தேடி அலையாய், அலைகின்றனர்.
ராஜபுரத்தை சேர்ந்த தர்மராஜ் கூறுகையில், ""கடந்த ஒரு வாரமாக குடிநீர் இல்லாததால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்குவதில், முறையான கவனம் செலுத்துவதில்லை என்றார்.
ஊராட்சி தலைவர் துளசிமணியிடம் கேட்டபோது; குடிநீர் மின் மோட்டார் காயில் போய்விட்டதால், கழட்டி கொடுத்துள்ளோம் என்றார். ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில், குடிநீர் சப்ளை இல்லாததால், நான்கு குக்கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய குடிநீர் சப்ளை செய்ய, ஒன்றிய நிர்வாகம் முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X