பொது செய்தி

தமிழ்நாடு

உலக எழுத்தறிவு தினம்

Added : செப் 08, 2010
Share
Advertisement
ஒவ்வொருவரும் எழுத்தறிவு பெறுவது அவசியம் மற்றும் கடமை. இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக "யுனெஸ்கோ' நிறுவனத்தால் ஆண்டுதோறும் செப்., 8ம் தேதி, உலக எழுத்தறிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. எந்த ஒரு மொழியையும் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரியாமல் இருப்பதே எழுத்தறிவின்மை என கருதப்படுகிறது. ஐந்தில் ஒன்று: உலகளவில் 15 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினர் 77 கோடியே 60
உலக எழுத்தறிவு தினம்

ஒவ்வொருவரும் எழுத்தறிவு பெறுவது அவசியம் மற்றும் கடமை. இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக "யுனெஸ்கோ' நிறுவனத்தால் ஆண்டுதோறும் செப்., 8ம் தேதி, உலக எழுத்தறிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. எந்த ஒரு மொழியையும் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரியாமல் இருப்பதே எழுத்தறிவின்மை என கருதப்படுகிறது.


ஐந்தில் ஒன்று: உலகளவில் 15 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினர் 77 கோடியே 60 லட்சம் பேர், அடிப்படை எழுத்தறிவு இல்லாதவர்களாக உள்ளனர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பெண்களாக உள்ளனர். ஐந்து இளைஞர்களில், ஒருவர் எழுத்தறிவு இல்லாதவராக உள்ளார். 7 கோடியே 50 லட்சம் குழந்தைகள் பள்ளிகளுக்கே செல்வதில்லை மற்றும் பலர் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுகின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


ஜார்ஜியா முதலிடம்: யுனெஸ்கோவின் 2008ம் ஆண்டு புள்ளி விவரத்தின் படி, உலகிலேயே தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவில் தான் எழுத்தறிவு சதவீதம் (58.6%) குறைந்த அளவில் உள்ளது. அடுத்த படியாக அரபு நாடுகள் (62.7%) உள்ளன. உலகின் சராசரி எழுத்தறிவு 84 சதவீதம். ஜார்ஜியா நாடு 100 சதவீத எழுத்தறிவு பெற்றுள்ளது. இந்தியாவில் 15 வயதுக்குட்பட்டோரின் எழுத்தறிவு 66 சதவீதமாகவும், இளைஞர்களின் எழுத்தறிவு 88 சதவீதமாகவும் உள்ளது.  இந்திய மாநிலங்களில் 2001ம் கணக்கெடுப்பின் படி, கேரளா 90.92 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. பீகார் (47.53 சதவீதம்) கடைசி இடத்தில் உள்ளது. தமிழ்நாடு 73.47 சதவீதத்துடன் 13 இடத்தில் உள்ளது.


புதிய இலக்கு: நாட்டில் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு "கல்வி அடிப்படை உரிமை மற்றும் கட்டாய கல்வி' என்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால் எழுத்தறிவு இல்லாதவர்களே இந்தியாவில் இல்லை என்ற நிலையை உருவாக்கலாம்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X