முசாபர்நகர் செல்ல சோனியா செல்ல திட்டம்

Updated : செப் 12, 2013 | Added : செப் 12, 2013
Advertisement

புதுடில்லி: உ.பி. மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் இரு தரப்பு மோதலில் ஏற்பட்ட கலவரத்தி்ல் இதுவரை 44 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் உ.பி.யில் ஆளும் சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம்சிங் யாதவ், கலவரப்பகுதிகளில் விரைவில் சென்று பார்வையிட உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து காங். தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் ஆகியோரும் முசாபர்நகர் மாவட்டத்தில் கவால் பகுதிக்கு சென்று பார்வையிட்டு , பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற உள்ளனர். இதற்கிடையே பக்கத்து மாவட்டமான பாக்பாத் பகுதியில் கலவரம் பரவியது. அங்கு செல்ல முயன்றதாக மத்திய அமைச்சர் அஜித்சிங்கை போலீசார் தடுத்துநிறுத்தி திருப்பி அனுப்பினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X