பொது செய்தி

தமிழ்நாடு

தென்மேற்கு பருவமழை ஐந்து மாவட்டங்களில், "புஸ்'

Updated : செப் 16, 2013 | Added : செப் 14, 2013 | கருத்துகள் (3)
Share
Advertisement
தென்மேற்கு பருவமழை, Rain

தமிழகத்தில், தென் மேற்கு பருவமழை காலத்தில், இதுவரை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில், போதுமான மழை பெய்யவில்லை; திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களில், மிகவும் சொற்பமான அளவே பெய்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, வடகிழக்கு பருவமழையால் வட மாவட்டங்களும், தென் மேற்குப் பருவ மழையால், தென் மாவட்டங்களும் நீர் பெறுகின்றன.

கடந்தாண்டில், வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிலைக்கு, தமிழகம் தள்ளப்பட்டது. ஆனால், இந்தாண்டு அதிகளவு மழைப் பொழிவு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு சாட்சியாக, அடிக்கடி, வெப்பச் சலனம், மேல் அடுக்கில் சுழற்சி உள்ளிட்டவை காரணமாக, மழை பொழிவு நிகழ்ந்து வருகிறது.ஆண்டுதோறும், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை, தென் மேற்கு பருவமழைக் காலம். இந்த பருவமழையில், நாட்டின், 75 சதவீத பகுதிகள் மழை பெறுகின்றன. செப்டம்பர் மாத துவக்கத்தில் இருந்து, நாட்டின் வடமேற்கு எல்லையில் படிப்படியாக இம்மழை குறைகிறது.தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் உள்ளதால், மழை மறைவு பகுதியாக உள்ளது. இருந்தாலும், தமிழகத்தின் தென் கோடிப் பகுதியில், அதிகளவு மழையை அளிக்கிறது.
தொடர்ந்து, அக்டோபர் முதல் டிசம்பர் வரையில், வடகிழக்கு பருவமழைக் காலம் துவங்குகிறது. தற்போது, செப்டம்பர் மாதம், தென் மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.தென்மேற்கு பருவமழை காலத்தில், தமிழகத்திற்கு மிதமான அளவு மழையே கிடைத்துள்ளது. புதுச் சேரியில், வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, 32 மாவட்டங்களில், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரத்தில், வழக்கமான மழையை விட குறைந்த மழையே பெய்துள்ளது.இது தவிர, திருப்பூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள், வழக்கத்தை விட மிக சொற்பமான மழையையே பெற்றுள்ளன. சென்னை, கோவை, தேனி, நெல்லை உள்ளிட்ட, 12 மாவட்டங்கள், வழக்கத்தை விட அதிகளவு மழை பொழிவை பெற்றுள்ளன.

காஞ்சிபுரம், கன்னியாகுமரி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட, 15 மாவட்டங்கள் மிதமான அளவு மழையையும் பெற்றுள்ளன. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்கள், தென் மேற்கு பருவமழை காலத்தில், அதிக மழைப் பொழிவை பெற்ற பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. புதுச்சேரியை பொறுத்தவரை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகளவில் மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், தற்போது மேல் அடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் மழையால், நீர் நிலைகள் ஓரளவிற்கு நிரம்பியுள்ளன. தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை அதிகளவில் கிடைக்கும் பட்சத்தில், குடிநீருக்கு பஞ்சமிருக்காது.

- நமது நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-201307:28:26 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் மரங்கள் பயிர் பச்சைகளே குறைவான சென்னையில் அதிக மழை வெளியூர்களில் குறைந்த மழை இது எப்படி?
Rate this:
Cancel
subailangovan - muscat,ஓமன்
15-செப்-201307:12:02 IST Report Abuse
subailangovan எப்படி மழை பெய்யும்? கண்ணுக்க்குத்தேரிந்து மரங்களே இல்லை..வனவளம் அழிக்கப்பட்டதில் திண்டுக்கல் முன்னிலை வகிக்கிறது..நகர விரிவாக்கம், நான்கு வழிச்சாலை என வளர்ச்சிப்பணிகளால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது..திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று முக்கிய நான்கு வழிச்சாலைகள் இருக்கிறது முன்பு சாலையின் இருபுறமும் புளியமரங்கள் இருந்தது..இப்போது தப்பித்தவறி கூட ஒரு மரம் இல்லை மரம் வளர்ப்பதில் நான்கு வழிச்சாலை நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை..அவர்கள் வளர்ப்பது செவ்வரளி செடிகளை மட்டுமே..அரசோ, தேசிய நெடுஞ்சாலை ஆணையமோ இந்த போக்கை கண்டுகொள்ளதது வருத்தமளிக்கும் விஷயம் எத்தனை ஆண்டுகளான மரங்கள் இதே நான்குவழிச்ச்சலை உருவாக்கும்போது வெட்டப்பட்டது.? மீண்டும் மரங்கள் நடப்பட்டத என்றால் இல்லை அதேபோல கொடைக்கானல்,தாண்டிக்குடி,சிறுமலை என நல்ல அடர் வனவளம் இருந்தது..ஒரே ஒரு நாள் இந்த மலை அடிவாரத்தில் இருக்கும் செக் போஸ்டுகளில் கவனித்துப்பார்த்தால் எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டு கீழே வருகிறது என அறியலாம்மரம் கடத்தப்படுவது இங்கே மாமூலனது சுப.இளங்கோவன்.மஸ்கட்.
Rate this:
Cancel
sundar - CBE,இந்தியா
15-செப்-201306:44:49 IST Report Abuse
sundar உறுதியாக மழை பொழியும் இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X