உ.பி.,யில் கலவரத்தை தூண்டியவர்களுக்கு பிரதமர்...எச்சரிக்கை! பாதிக்கப்பட்ட மக்களுக்கு சோனியா, ராகுல் ஆறுதல்

Added : செப் 17, 2013 | கருத்துகள் (3)
Advertisement
உ.பி.,யில் கலவரத்தை தூண்டியவர்களுக்கு பிரதமர்...எச்சரிக்கை! பாதிக்கப்பட்ட மக்களுக்கு சோனியா, ராகுல் ஆறுதல்

லக்னோ:உ.பி.,யில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த, பிரதமர் மன்மோகன் சிங், ""கலவரத்துக்கு காரணமானவர்கள் மீதும், கலவரத்தை தூண்டி விட்டவர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எச்சரித்தார். அவருடன், காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுலும் சென்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள முசாபர் நகர் மாவட்டத்தில், கடந்த மாதம், இளம் பெண்ணை கேலி செய்த விவகாரத்தில், இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறியது.
பள்ளிகள் திறப்பு
இதுவரை, 44 பேர் இறந்துள்ளனர்; ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்புக்காக, ராணுவம், துணை ராணுவம், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 15 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த, ஊரடங்கு உத்தரவு, தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன.
நேற்று முன்தினம், கலவரப் பகுதிகளை பார்வையிடுவதற்காகச் சென்ற, முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு, பாதிக்கப்பட்ட மக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மக்கள், அங்கு அமைக்கப்பட்டுள்ள, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கலவரப் பகுதிகளை ஆய்வு செய்வதற்காகவும், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறுவதற்காகவும், பிரதமர் மன்மோகன் சிங், நேற்று, முசாபர் நகர் மாவட்டத்துக்குச் சென்றார். காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோரும், உடன் சென்றனர்.
பஸிகான் என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமுக்குச் சென்ற அவர்கள், அங்குள்ள மக்களை சந்தித்து, ஆறுதல் கூறினர். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். இதன் பின், பிரதமர் மன்மோகன் சிங், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இது ஒரு மோசமான கலவரம். முதலில், முகாம்களில் தங்கியுள்ள மக்களை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான, அனைத்து நிவாரண உதவிகளையும் அளிக்க வேண்டும்.
இதற்கான உதவிகளை செய்வதற்கு, மத்திய அரசு தயாராக உள்ளது. கலவரப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதற்கு, உ.பி., அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், மத்திய அரசு செய்யும். கலவரத்துக்கு காரணமானவர்களையும், கலவரத்தை தூண்டி விட்டவர்களையும், கண்டறிந்து, அவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் கூறுகையில், ""கலவரம் குறித்து உ.பி., அரசை ஏற்கனவே எச்சரித்து இருந்தோம். ஆனால், உ.பி., அரசு அதை அலட்சியப்படுத்தி விட்டது,'' என்றார்.
முகாம்களில்
முசாபர் நகர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள, மற்ற முகாம்களுக்கும், பிரதமர், சோனியா, ராகுல் ஆகியோர் சென்றனர். அங்குள்ள மக்களுக்கும், அவர்கள் ஆறுதல் கூறினர். காங்., தலைவர் சோனியா, பெண்கள் இருந்த பகுதிகளுக்கு சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
ராகுலும், தடுப்பு வேலிக்குள் புகுந்து, பாதுகாப்பு வளையத்தை கடந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். முகாம்களில் இருக்கும் பெரும்பாலானோர், "நாங்கள், நிரந்தரமாக முகாம்களிலேயே தங்கி விடுகிறோம். வீடுகளுக்கு செல் வதற்கு பயமாக உள்ளது. வி.ஐ.பி.,க் களுக்கு தான், பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்றனர்.
இதற்கிடையே, முசாபர் நகர் கலவரப் பிரச்னையை எழுப்பி, உ.பி., சட்டசபையில், எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டன. கலவரத்தை தூண்டி விட்டதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள, பா.ஜ., - எம்.எல்.ஏ., சங்கீத் சோமைத் தேடி, அவருக்கு சொந்தமான பல இடங்களில், போலீசார், நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

சுப்ரீம் கோர்ட்டில் உ.பி., அரசு பதில்
கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து பதில் அளிக்கும்படி, உ.பி., அரசு மற்றும் மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
மாநில அரசு அளித்துள்ள பதிலில், "வன்முறையை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. தற்போது, இயல்புநிலை திரும்பியுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அளித்துள்ள பதிலில், "வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக, கலவர பகுதிகளுக்கு, 78 கம்பெனி துணை ராணுவப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் லோக்சபா தேர்தல் வரப் போகிறதல்லவா? அதனால் தான், பிரதமர் மன்மோகன் சிங், கலவரப் பகுதிகளை பார்வையிடுவதற்காக வந்துள்ளார். மதச்சார்பு என்ற போர்வைக்குள்
மறைந்துள்ள சில, சர்வாதிகார அமைப்புகள் தான், இந்த கலவரத்தை தூண்டி விட்டுள்ளன.
அசம் கான்
சமாஜ்வாதி மூத்த தலைவர்

கலவரம் நடந்த பகுதிகளுக்கு, பிரதமரும், காங்., தலைவரும், "மதச்சார்பின்மை சுற்றுலா' சென்றுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த
சுற்றுலாவால் எந்த பயனும் இல்லை.
வன்முறைக்கு ஆளானவர்களின் வலிகள்,
இவர்களின் பயணத்தால், ஆறப்போவது இல்லை.
முக்தார் அப்பாஸ் நக்வி
பா.ஜ., துணை தலைவர்

சமாஜ்வாதி அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு,
மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதைத் தவிர, மத்திய அரசின் வேறு எந்த
நடவடிக்கையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு
தீர்வாகாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவது என்பது, வெறும் நாடகமே.
மாயாவதி
பகுஜன் சமாஜ் தலைவர்

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram - chennai  ( Posted via: Dinamalar Android App )
19-செப்-201303:06:17 IST Report Abuse
ram This lady was issued with summon in USA by the name Sonia Gandhi. But the hospital authorities first refused to receive summon saying no indian lady person in that name inside hospital but per passport registering, one indian woman by name Edvige Antonia Albina Main only inside. This is then an Italian lady with duel personality and cheating india.
Rate this:
Share this comment
Cancel
Ramesh - Thiruvarur,இந்தியா
17-செப்-201311:29:18 IST Report Abuse
Ramesh உ.பி.,யில் கலவரத்தை தூண்டியவர்களுக்கு பிரதமர்...எச்சரிக்கை அய்யா பிரதமர் அவர்களே கலவரத்திற்க்கான காரணம் என்னவென்ற செல்லவேயில்லை எதனால் .....? பல உயிர்கள் போயி இருக்கும்பொழுது - ஒரு பிரதமர், முதமைச்சர் ஆகியோர் இதுபோல் நடைபெறமால் பார்த்ததுகொள்ள வேண்டுமோ ஒழிய . . . . . . . ஒரு கண்ணில் வெண்வெய்யும் மறுகண்ணில் மிளகாய் பொடியா? கேடுகெட்ட ஓட்டு வங்கி அரசியலுக்கா எத்தனை உயிர்கள் கொல்ல போகிறார்கள். நீங்கள் இருக்கும் இந்துகளின் நிலைமை - அதேகதிதான். இந்துக்களே எவனுக்கோ என்று இருந்தால் நாளைய உனக்கும் எனக்கும் தான் விழ்ந்துகொள். போலி மதசார்புமின்மை பேசி கொண்டு திரியும் நாய்களை அடித்து வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-செப்-201309:16:45 IST Report Abuse
Sriram V People should awake. It is all game plan of Congress. The congress wanted to pull the minority vote base as much as possible for next lok sabha election and it is one of the possible way. State government should investigate it thoroughly.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X