சவுதியில் வேலை வாய்ப்பு முகாம் : 6,000 இந்தியர்களுக்கு மீண்டும் வேலை

Added : செப் 18, 2013
Advertisement

ஜெட்டா: சவுதி அரேபியாவில், வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம், 6,000 இந்தியர்கள், மீண்டும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் உள்ள நிறுவனங்களில், வெளிநாட்டினர் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர். இதற்கிடையே, சவுதி அரசு, மார்ச் மாதம், "நிதாகத்' என்ற பெயரில் புதிய சட்டத்தை, அமல்படுத்தியுள்ளது. "புதிய சட்டப்படி, சவுதியில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும், பத்து பேரில் ஒருவர், அந்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்' என்ற விதிமுறை புகுத்தப்பட்டுள்ளது. புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது, தொழில் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தால், 84 சதவீத நிறுவனங்கள், மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. இச் சட்டத்தால், பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய சட்டத்தால், தகுதியிழந்த வெளிநாட்டினர், நாடு திரும்புவதற்கும், மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கும், அந்நாட்டு அரசு, கடந்த ஜூலை வரை, மூன்று மாத கால அவகாசம் அளித்தது. அதன் பின், வரும், நவம்பர் மாதம் வரை, மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் வேலை பார்த்த பலர், ஜூலை மாதம், தாயகம் திரும்பி விட்டனர்.

ஜெட்டா நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி, பைஸ் அகமது கித்வாய் கூறியதாவது: சவுதி அரசின், புதிய தொழிலாளர் சட்டத்தின் காரணமாக, வேலை வாய்ப்பை இழந்த இந்தியர்கள் பலர், தூதரகத்தை தொடர்பு கொண்டு, மாற்று ஏற்பாடு செய்து தரும்படி வேண்டினர். இதையடுத்து, மூன்று, வேலைவாய்ப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்தோம். இதில், 200 நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த கண்காட்சி மூலம், 6,000 இந்தியர்களுக்கு, நிரந்தர வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில், 95 சதவீதம் பேருக்கு தொழில் நுட்பத்துறையிலும், 5 சதவீதம் பேருக்கு ஓட்டல் சம்பந்தப்பட்ட துறையிலும் வேலை கிடைத்துள்ளது.
இந்தியர்கள், பலர், பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டனர். சிலரிடம் பாஸ்போர்ட் நகல் கூட இல்லை. இவர்கள் தொடர்ந்து சவுதியில் பணிபுரிவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்.
சவுதியில், 20 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். புதிய சட்ட விதிமுறைக்கான காலக்கெடு, நவம்பர் மாதம் முடிகிறது. சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள், இந்த காலக்கெடுக்குள் உரிய ஆவணங்களை பெற முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், சிறை தண்டனை அல்லது கடும் அபராதங்களை சந்திக்க வேண்டி இருக்கும். இவ்வாறு, பைஸ் அகமது கித்வாய் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X