General VK Singh to file RTI seeking copy of Army report on TSD | என் மீது என்ன குற்றச்சாட்டு: விளக்கம் கேட்டு ஆர்.டி.ஐ.,யில் சிங் மனு !| Dinamalar

பொது செய்தி

இந்தியா

என் மீது என்ன குற்றச்சாட்டு: விளக்கம் கேட்டு ஆர்.டி.ஐ.,யில் சிங் மனு !

Updated : செப் 23, 2013 | Added : செப் 22, 2013 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
என் மீது என்ன குற்றச்சாட்டு: விளக்கம் கேட்டு ஆர்.டி.ஐ.,யில் சிங் மனு !

புதுடில்லி: தன் மீதான குற்றச்சாட்டு குறித்த ராணுவ அறிக்கை விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விளக்கம் கேட்டு மனு செய்ய உள்ளார் முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே. சிங். முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சி்ங், தனது பதவி காலத்தின் போது, தொழில்நுட்ப பிரிவை ரகசியமாக அமைத்து, ராணுவ உயரதிகாரிகளின் ‌தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாகவும், காஷ்மீர் அரசை கவிழ்க்க சதி செய்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டதாகவும், இக்குழு அறிக்கையின்படி அவர் ரகசியப்பிரிவு வைத்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் பத்திரிகை ஒன்றில் செய்தி ‌வெளியானது. சிங் மீது உரிய விசாரணை நடத்த மத்திய அரசும் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது.
மோடியுடன் கைகோர்த்ததால் ஆத்திரம்
இந்நிலையில் கடந்த 15-ம் தேதி அரியானா மாநிலம் ரிவாரியில் நடந்த பா.ஜ., பொதுக் கூட்டத்தில் ‌, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடியுடன் பங்கேற்றார். அதுமட்டுமல்லாமல், முன்னாள் , இந்நாள் ராணுவத்தினரையும் பங்கேற்க வைத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மத்திய அரசு அவர் மீது குற்றச்சாட்டை சுமத்தியது. தன் மீதான குற்றச்சாட்டினை வி.கே.சிங் மறுத்தார்.இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டு குறித்தும், ராணுவ அறிக்கை விவரங்களை , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அறிந்திடக்கோரி மனு தாக்கல் செய்ய உள்ளார். அதில் குற்றச்சாட்டு குறித்து ராணுவம் தாக்கல் செய்த அறிக்கை தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் தருமாறு ராணுவ தலைமையகத்திற்கு உத்தரவிட வேண்டும்என கூறியுள்ளார்.
ராஜ்நாத் சிங் ஆதரவு
வி.கே.சிங் விவகாரம் குறித்து பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கூறுகையில், மோடியுடன் மே‌டையில் ஏறிய ஒரே காரணத்திற்காக வி.கே.சிங் மீது பொய்யான குற்றச்சாட்டினை மத்திய அரசு சுமத்தியுள்ளது. வி.கே.சி்ங் மட்டுமல்ல. பா.ஜ.,வில் யார் இணைந்தாலும்,அவர்கள் மீது நடவடிக்‌கையை பாய்ச்சுவது காங்., கட்சியின் அன்றாட வேலையாகி விட்டது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
22-செப்-201319:52:40 IST Report Abuse
Subramanian Sundararaman இது ஒரு பழி வாங்கும் செயல் என்பது வெளிப்படையாக தெரிகிறது. ஒரு ராணுவ தளபதியை அவமானப்படுத்தும் செயல். சட்ட விரோத செயல்களில் ஒரு வேளை ஈடுபட்டிருந்தால் அரசு அதை அப்போதே கண்டுபிடிக்கத் தவறிவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது. முதலில் நாட்டின் எல்லையில் அவ்வப்போது நடக்கும் அத்து மீறல்களையும் ஆக்கிரமிப்புகளையும் தவிர்ப்பதில் நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள். இதற்கு நாட்டிலுள்ள எல்ல கட்சிகளும் ஒத்துழைப்பைத் தர தயாராயிருக்கிறார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் வேண்டாதவர்கள் மீது சிபிஐ மற்றும் இது போன்ற அமைப்புகளை அரசு ஏவி விடுவது கேவலமானது. தேர்தலுக்குப் பின் ஸ்விஸ் பாங்கு விவகாரங்கள் , அதிகார துஷ் பிரயோகங்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். சரித்திரத்தைத் திருப்பி பாருங்கள். All time great இந்திரா காந்திக்கே இந்த நிலை ஏற்பட்டது.
Rate this:
Share this comment
Cancel
Anbu - Chennai,இந்தியா
22-செப்-201319:23:23 IST Report Abuse
Anbu கொஞ்சம் பொருங்க சார் இதுவும் எவ்வளவு நாளைக்கு நடக்குது பார்போம். கடலும் கொள்ளா மணிமேகலையின் அரசு.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
22-செப்-201318:56:58 IST Report Abuse
villupuram jeevithan என்ன குற்றச்சாட்டா ? அதான் எல்லோருக்கும் தெரியுமே ? மோடியுடன் மேடையில் இருந்தது தான் . ஆனால் அந்த குற்றச்சாட்டை ஓப்பனாக சொல்ல மாட்டார்கள் . அவ்வளவுதான் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X