பொது செய்தி

தமிழ்நாடு

மனித கழிவுகளை சுத்தம் செய்வதில் 30 பேர் பலி: தமிழகத்தில் நிரந்தர தீர்வு தேவை

Updated : செப் 23, 2013 | Added : செப் 23, 2013 | கருத்துகள் (14)
Share
Advertisement
‘தமிழகத்தில், 2010 முதல், மனித கழிவை மனிதன் அள்ளுவதில்லை’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இத்தொழில் செய்வோருக்கு தமிழகத்தில் அளிக்கும் உதவித் தொகையை, மத்திய அரசு நிறுத்தி விட்டது. ஆனால், கடந்த, 30 மாதங்களில், 30 பேர் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது இறந்துள்ளனர்.லட்சம் பணியாளர்கள்: தமிழகத்தில், 12,500 கிராம ஊராட்சிகள், 543 பேரூராட்சிகள், 52 நகராட்சிகள், 11
மனித கழிவு,சுத்தம், பலி,தீர்வு,seavage

‘தமிழகத்தில், 2010 முதல், மனித கழிவை மனிதன் அள்ளுவதில்லை’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இத்தொழில் செய்வோருக்கு தமிழகத்தில் அளிக்கும் உதவித் தொகையை, மத்திய அரசு நிறுத்தி விட்டது. ஆனால், கடந்த, 30 மாதங்களில், 30 பேர் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது இறந்துள்ளனர்.

லட்சம் பணியாளர்கள்: தமிழகத்தில், 12,500 கிராம ஊராட்சிகள், 543 பேரூராட்சிகள், 52 நகராட்சிகள், 11 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில், 1 லட்சம் துப்புரவு பணியாளர் நிரந்தரமாகவும், பகுதி நேரமாகவும் வேலை செய்கின்றனர்.இவர்களை தவிர, மருத்துவமனை, கல்வி நிலையங்கள், அரசு அலுவலகம், தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை, அரசிடமே இல்லை.தமிழகத்தில், 49 சதவீத நகர்ப் பகுதிகளும், 51 சதவீத கிராமப் பகுதிகளும் உள்ளன. நகர்ப் பகுதிகளில் தான், துப்புரவு பணி அதிகமாக தேவைப்படுகிறது. கழிவுநீர் கால்வாய் மற்றும் தொட்டிகளில் இறங்கும் போது, நச்சு வாயு தாக்கி, துப்புரவு தொழிலாளர்கள் இறப்பதும் நகர்ப்புறங்களில் அதிகம்.

கழிவுநீர் தொட்டியில் உயிரைக் குடிக்கும், ‘நைட்ரஜன் சல்பைடு’ அதிகமாக உள்ளது. நச்சு வாயு, கழிவு நீரில் கலக்கும் பொருட்களை பொறுத்து மாறுபடுகிறது. ரசாயன கலவைகள் கலக்கும் போது, நச்சுத் தன்மை மேலும் அதிகரிக்கிறது.இந்நிலையில், மனித கழிவுகளை மனிதன் அள்ள தடை செய்யும் சட்டம், 2010ல், தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது. மனித கழிவுகளை அள்ளுவதைத் தடுக்கும் முறையான சட்டம் கொண்டு வருவதில், மத்திய அரசு அக்கறை காட்டி நடவடிக்கை எடுத்துஇருக்கிறது.


14 பேர் குழு:

மேலும், 2012 சட்டப்படி, கழிவுகளை இயந்திரங்களைக் கொண்டு தான் அகற்ற வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2009ல், சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, துப்புரவுத் தொழிலாளர்களை, கழிவுகள் அகற்றப் பயன்படுத்துவதைத் தடுக்க, 14 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.சென்னை மாநகராட்சி போன்ற பகுதிகளில், ‘ஜெட் ராடிங், டீசில்ட் மேன், பக்கெட் மிஷன், சூப்பர் சக்கர்’ போன்ற இயந்திரங்களும், கழிவுகளை அகற்ற பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், 2001, பிப்., 22ம் தேதி முதல் 2013 செப்., 7ம் தேதி வரை, மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட, 30 துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்துள்ளனர் என்ற புள்ளி விவரத்தை, தமிழ்நாடு துப்புரவுத் தொழிலாளர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் கூறுகையில், "மனித கழிவுகளை அகற்ற தடை விதித்த பின், இயந்திரங்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. ஆனால், இவற்றை முறையாகப் பயன்படுத்துவது, பராமரிப்பதில் சிக்கல் நிலவுகிறது," என்கிறார்.


நோய் தாக்குதல் பாதிப்புள்ள தொழில்:

இவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, துப்புரவு தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் துணைத் தலைவர் ரவிகுமார் கூறியதாவது:நாப்கின், பிளாஸ்டிக், இறைச்சி கழிவுகள் போன்றவையே, கழிவு நீர் பாதையில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றை, இயந்திரங்கள் கொண்டு அகற்றுவது எளிதல்ல.கழிவு நீர் தொட்டிக்குள் ஆக்சிஜன் உள்ளதா, நைட்ரஜன் சல்பைடு உள்ளதா என்பதை அறிய கருவிகள் வைத்துள்ளனர். ஆனால் அதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவு.இவர்களுக்கு, குழு காப்பீடு உள்ளது. பணியில் இருக்கும் போது இறந்தால் மட்டுமே இக்காப்பீடு கிடைக்கும். பணி ஓய்வு பெறும்போது, ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதில்லை.துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நோய் தாக்குதல் அதிகம். ஆனால், இதற்கான இலவச சிகிச்சைகள் கிடைப்பதில்லை. ஒப்பந்த அடிப்படையில், துப்புரவு தொழிலை, அரசு செய்வதால், துப்புரவு தொழிலாளிக்கும் அரசுக்கும் தொடர்பே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.துப்புரவு பணியில் ஈடுபட்டிருக்கும் போது இறந்தால், சந்தேக மரணம் என பதிவு செய்கின்றனர். விபத்தில் மரணம் என்று கூட வழக்கு பதிவதில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

நமது சிறப்பு நிருபர்

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
23-செப்-201318:30:42 IST Report Abuse
K.Sugavanam நச்சு வாயு ஹைட்ரஜன் சல்பைடு,நைற்றோஜென் சல்பைடு அல்ல.மனிதனை கழிவல்லும்.கழிவுப்பாதை அடைப்பெடுக்கும் கருவியாக பயன் படுத்த கூடாது என நீதிமன்றமே சொல்லி இருக்கிறது.இந்த புதை சாக்கடைகள் முறையாக திட்டமிடப்பட்டு தகுந்த அளவில் அமைக்க படாததே அடைப்புக்கு காரணம்.
Rate this:
Cancel
R.Suresh Kumar - Chennai,இந்தியா
23-செப்-201315:24:19 IST Report Abuse
R.Suresh Kumar நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்,,,,,,,,,,,,,,,,,
Rate this:
Cancel
Kanagasundaram Sakthidasan - chennai,இந்தியா
23-செப்-201312:28:52 IST Report Abuse
Kanagasundaram Sakthidasan மனது வைத்தால் மார்க்கமுண்டு.கண்டிப்பாக இவர்களது குறைகள் களையப்பட வேண்டும்.கவனிப்பாரா முதலமைச்சர்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X