பதிவு செய்த நாள் :
கருத்துகள் (103)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி : கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெறும், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களை காப்பாற்ற, மத்திய அரசு, இயற்றியுள்ள அவசர சட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், சிறைத் தண்டனை பெறும், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் தண்டனையை எதிர்த்து, மேல் முறையீடு செய்திருந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது.

அரசியலில், குற்றப் பின்னணி உடையவர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தக் கோரும், பொதுநல மனுவை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், ஜூலை, 10ம் தேதி, அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.

உத்தரவு:கிரிமினல் வழக்குகளில், இரண்டு அல்லது அதற்கு அதிகமான ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளை பறிக்க வேண்டும். தண்டனை அறிவிக்கப்பட்டதுமே, உடனடியாக, அவர்களின் பதவிகளை பறிக்கலாம்.குற்றப் பின்னணி உடையவர்களை பாதுகாக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், சில விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக, தண்டனை விதிக்கப்பட்டவர்கள், தண்டனையை எதிர்த்து, அப்பீல் செய்திருந்தால், பதவி நீக்கத்திலிருந்து தப்பிப்பதற்கு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு, 8, துணை பிரிவு, 4, ஆகியவை வசதியாக உள்ளன. இந்த பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது.சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவால், முக்கிய அரசியல் கட்சிகள், கலக்கம் அடைந்தன.இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவை, செல்லாததாக்குவதற்கான நடவடிக்கைகளை, மத்திய அரசு துவங்கியது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து, மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது.ஆனால், ‘நாங்கள் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில், எந்த தவறுமில்லை’ என கூறிய, சுப்ரீம் கோர்ட், மறு சீராய்வு மனுவை, தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே, குற்றப் பின்னணி உடையவர்களை, சுப்ரீம் கோர்ட் உத்தரவிலிருந்து பாதுகாப்பதற்கு, பார்லிமென்ட் மூலமாக காய் நகர்த்த, அரசு முடிவு செய்தது. இதற்கு, மற்ற அரசியல் கட்சிகளிடமிருந்து, போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.இந்நிலையில், காங்., ராஜ்யசபா எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான, ரஷீத் மசூத், தகுதி இல்லாதவர்களுக்கு மருத்துவ படிப்பு

படிப்பதற்கான இடங்களை ஒதுக்கி, ஊழல் செய்த வழக்கில்,குற்றவாளி என, சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். இதனால், இவரின் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான, லாலு பிரசாத் உள்ளிட்ட வி.ஐ.பி.,க்கள் மீதான வழக்குகளில், தீர்ப்பு வழங்கப்படவுள்ளன.இதையடுத்து, மத் திய அரசு, அவசர நடவடிக்கைகளில் இறங்கியது. குற்றப் பின்னணி உடைய, மக்கள் பிரதிநிதிகளை பாதுகாக்கும் வகையிலான அவசர சட்டத்தை இயற்றி, அதை, மத்தியஅமைச்சரவைக்கு அனுப்பி வைத்தது.இதற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்ததை அடுத்து, இந்த சட்ட மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு அனு்ப்பி வைக்கப்பட்டது. இதன்பின்,ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி கையெழுத்திட்ட பின், அது, நடைமுறைக்கு வரும்.

சலுகை: இந்த அவசர சட்டத்தின்படி, கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள், தங்கள் தண்டனையை எதிர்த்து, 90 நாட்களுக்குள், மேல் முறையீடு செய்திருந்தாலோ அல்லது மேல்கோர்ட்டுகளில், தண்டனைக்கு எதிராக தடை உத்தரவு பெற்றிருந்தாலோ, அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது.அவர்கள, வழக்கம் போல், பார்லிமென்ட் மற்றும் சட்டசபை கூட்டத் தொடர்களில் பங்கேற்கலாம். அதேநேரத்தில், இவர்களுக்கு சம்பளம் கிடைக்காது; பார்லிமென்டில் ஓட்டெடுப்பு நடக்கும்போது, அதில், அவர்கள் பங்கேற்க முடியாது.
*லோக்சபாவில் எம்.பி.,க்களாக உள்ள, 543 பேரில், 162 பேர் மீது, பல்வேறு கோர்ட்டுகளில், குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
*இந்த, 162 பேரில், 76 பேர் மீது, கடுமையான பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
*நாடு முழுவதும் உள்ள சட்டசபை உறுப்பினர்களை பொறுத்தவரை, 4,032 பேர் மீது, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
*இவர்களில், 14 சதவீதம் பேர் மீது, ஐந்தாண்டுகளுக்கும் அதிகமான சிறைத் தண்டனை

Advertisement

பெறும் வகையிலான, குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

‘சிறையில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடலாம்’ :
சிறையில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட வகை செய்யும், ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட திருத்த மசோதா –2013’க்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, சிறையில் இருப்பவர்கள், தேர்தலில் ஓட்டளிக்க முடியாது; அதனால், அவர்கள், பார்லிமென்ட் மற்றும் சட்டசபை தேர்தல்களிலும் போட்டியிட முடியாது’ என, ஜூலை, 10ம் தேதி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை செல்லாததாக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட திருத்த மசோதா – 2013 கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவில், 62வது பிரிவில், துணை பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டது. அதில், ‘ஒருவர் சிறையில் அல்லது போலீஸ் காவலில் இருக்கும் போது, அவரின் ஓட்டுரிமை பறிக்கப்படுவதில்லை; மாறாக, ஓட்டுப் போடும் உரிமை, தற்காலிமாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறது. அதனால், வாக்காளர் பட்டியலில் அவரின் பெயர் தொடர்ந்து இடம் பெறுவதால், அவர் தேர்தலில் போட்டியிடவும், தகுதி உடையவராகிறார்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இநதச் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார் என, சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (103)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vaidya - hyderabad,இந்தியா
26-செப்-201307:36:02 IST Report Abuse
vaidya திருடனாப் பார்த்து திருந்தாவிட்டால் என்ற பல்லவியை படித்து, அலுத்து விட்டது, வெட்கம் அற்ற சுயநல அரசு திருந்தாக் கூட்டத்தால் பிடித்து கூட்டமாய் கூடியது. இவர்களா குற்றவாளிகளை தண்டிக்க விடுவார். தின்ன பணம் செரிக்காமல், செத்த பின்னும் ஏப்பம் வந்து கொண்டேயிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
25-செப்-201322:36:49 IST Report Abuse
spr நம் ஜனாதிபதி ஒரு ரப்பர் ஸ்டாம்புதான் அமைச்சரவை நீட்டிய காகிதத்தில் கையெழுத்திட வேண்டும் இல்லையெனின் பதவி பறிபோகும். பணி ஒய்வு பெற்ற பின் இந்த நாட்டின் இளைஞர்களிடம் நீங்களே நாட்டை முன்னேற்ற வாய்ப்புடையவர்கள் என்று புலம்புவதைவிட, இதற்கு ஒப்புதல் அளிக்காமல் தன மானத்தை, மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளலாம் இல்லை முந்தைய ஜனாதிபதிகள்போல, பதவி சுகம்தான் முக்கியம் என்று கண்ணை மூடிக்கொள்வாரா பார்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Manoharan Prushothaman - mayiladutharai,இந்தியா
25-செப்-201320:47:24 IST Report Abuse
Manoharan Prushothaman அரசியல், குற்றவாளிகள் கையில் எப்போதோ போய்விட்டது. மூன்று நான்கு கொலை வழ்க்குகளில் தண்டனை பெற்றவர்தான் இனி பிரதமராகவ்ம் முதல்வர்கலாகவ்ம் ஆகலாம் என்று சட்டம் இயற்றும் காலம் வெகு தூரத்தில் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Ravi - Doha,கத்தார்
25-செப்-201319:44:44 IST Report Abuse
Ravi இப்போது உள்ள அரசு தானாகவே முன் வந்து நாங்க நல்லவங்க இல்ல இன்னு சொல்லுறது நல்லா தெரியுது. நாம் தான் முழித்துக்கொள்ளவேண்டும் வரும் தேர்தலில்.
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
25-செப்-201318:05:17 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar அரசியல் குற்றவாளிகள் நீதி துறை உத்திரவு அவசர சட்டம் மூலம் தடுக்க முடியாது..,தவறான அவசர சட்டத்திற்கு நிச்சயம் ஜனாதிபதி ஒப்புதல் கண்டிப்பாக வழங்குவது துளிகூட சாத்தியமில்லை..,மத்திய அமைச்சரவை நல்லவை செய்தல் வேண்டும்.நீதியை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்..,குற்றங்களை தடுப்பவையாக இருக்க வேண்டும்.தவறான அரசியல்வாதிகளை அரசியலிருந்து நீக்குவதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது ஜனநாயகம் அரசியல் மேம்படும்..., குற்றவாளி அரசியல்வாதிகளின் கையில் நமது நல்ல ஜனநாயக அரசியல் சாக கூடாது.அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்குவது இந்திய அரசியல் ஜனநாயகத்திற்கு சிறப்பாகாது - பூபதியார்
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load.asp, line 349