எம்.பி.,க்கள் பதவி பறிப்பை தடுக்க அவசர சட்டம்...:பிரதமர் மன்மோகன் ஒப்புதல்; ராகுல் கடும் எதிர்ப்பு:காங்கிரஸ் ‘கூத்து’ அம்பலம்!| Rahul Gandhi: Ordinance on convicted politicians is complete nonsense | Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (214)  கருத்தை பதிவு செய்ய

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு, நாடு முழுதும், ஆதரவு அலை வீசத் துவங்கி விட்டதால், அதை முறியடிக்கும் முயற்சியாக, காங்கிரஸ் தலைமை, நாடகம் நடத்தத் துவங்கி விட்டது. குற்றப் பின்னணி உடைய, எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆதரவாக, தானே அறிமுகப்படுத்திய, அவசரச் சட்டத்திற்கு, கட்சித் துணைத் தலைவரான ராகுலை எதிர்ப்பு தெரிவிக்க வைத்து, நாடகத்திற்கு, பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

‘கிரிமினல் வழக்குகளில், இரண்டு அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் தண்டனை பெறும், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும்’ என, ஜூலை, 10ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

திருத்தத்துக்கு ஆதரவு:இந்த உத்தரவுக்கு, பொதுமக்கள் தரப்பில் வரவேற்பு இருந்தாலும், வழக்குகளில், தண்டனை பெறும், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களை பாதுகாக்கவும், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை செல்லாததாக்கவும், சட்டத் திருத்தம் கொண்டு வரலாம் என, முடிவு செய்ய, ஆகஸ்ட், 13ம் தேதி, அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது, முக்கிய எதிர்க்கட்சியான, பா.ஜ., உட்பட, பல கட்சிகள், சட்டத் திருத்தம் கொண்டு வர, ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து, அரசியல் சட்டத் திருத்த மசோதா ஒன்றை, மத்திய அரசு தயாரித்தது; அதை பார்லிமென்டில் தாக்கல் செய்து, அது பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது.இந்நிலையில், தகுதி இல்லாதவர் களுக்கு மருத்துவப் படிப்பிற்கான இடங்களை வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.,யுமான, ரஷீத் மசூது குற்றவாளி என, அறிவிக்கப்பட்டார். அவருடைய குற்றத்திற்கு ஏழு ஆண்டுகளுக்கு மேல் தண்டனையும், எம்.பி., பதவி பறிபோகும் சூழ்நிலையும் உருவானது.

கடுமையான எதிர்ப்பு:இவரின் பிரச்னையை தீர்க்கவும், குற்ற வழக்குகளில், இனி தண்டனை பெறும் எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிபோவதை தடுக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அவசரச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற, மத்திய அமைச்சரவை அனுமதி அளித்து, அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.அந்த சட்டத் திருத்தத்தை, அவசரச் சட்டமாக நிறைவேற்ற, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின், பா.ஜ.,வும், இடதுசாரி கட்சிகளும், கடுமையாக எதிர்க்கத் துவங்கி விட்டன; ‘அவசரச் சட்டம் அமல்படுத்துவது, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது’ என, கூறி வருகின்றன.பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தலைமையிலான, கட்சிக் குழுவினர், நேற்று முன்தினம், ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியை சந்தித்து, ‘அவசர சட்டத்திற்குஒப்புதல் அளிக்கக் கூடாது; அதை மத்திய அரசின் பரிசீலனைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்’ என, கோரிக்கை விடுத்தனர்; இதுதொடர்பாக மனுவும் அளித்தனர்.இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே மற்றும் சட்ட அமைச்சர், கபில் சிபல் ஆகியோரை அழைத்து, இந்தப் பிரச்னை தொடர்பாக, ஜனாதிபதி பிரணாப் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான அவசர சட்டம், பார்லிமென்டில் நிலுவையில் இருக்கும் போது, அதை, அவசர சட்டமாக கொண்டு வந்ததன் அவசியம் என்ன?’ என்று வினவியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், இந்த விவகாரத்தில், நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது.காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலே, அவசர சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

டில்லி பத்திரிகையாளர் சங்கத்தில், காங்கிரஸ் பொதுச் செயலர், அஜய் மேக்கன், நேற்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, திடீரென அங்கு வந்த, ராகுல் கூறிய தாவது:
‘குற்ற வழக்குகளில், தண்டனை பெறும்எம்.பி., – எம்.எல். ஏ.,க்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும்’ என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்தஉத்தரவை செல்லாததாக்கும் வகையில், மத்தியஅரசு, அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்ற முற்பட்டுள்ளது; அது முட்டாள்தனமானது. இந்த விவகாரத்தில், மத்திய அரசு செய்தது மிகவும் தவறானது. அந்த அவசர சட்டம் கிழித்து, துாக்கி

எறியப்பட வேண்டும்; இது என் தனிப்பட்ட கருத்து.அரசியல் ரீதியான சில விஷயங்களை கருத்தில் கொண்டு, அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் கூறுகின்றனர். அதேபோல், பா.ஜ., முலாயம் சிங்கின் சமாஜ்வாதி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளும், ஒவ்வொரு காரணம் சொல்கின்றன.ஆனால், இந்த அவசர சட்டம் அமல்படுத்தும் முட்டாள்தனமான செயலை, காங்கிரஸ் மட்டுமின்றி, அனைத்து அரசியல் கட்சிகளும் தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டில், ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என விரும்பினால், கிரிமினல் குற்றம் புரிந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும், இது போன்ற சட்டங்கள் அமல்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். இப்போது, சிறிய விஷயங்களுக்காக, நாம் விட்டுக் கொடுத்தால், பின், ஒவ்வொரு விஷயத்திற்கும் விட்டுக் கொடுக்க வேண்டியது நேரிடும்.இவ்வாறு ராகுல் கூறினார்.

அத்துடன் தன் பேச்சை முடித்து, அந்த இடத்தை விட்டு வெளியேற முயன்றார். ஆனால், நிருபர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், மீண்டும்இருக்கையில் அமர்ந்து, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.அப்போது, அவர் கூறுகையில், ‘‘காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் என்ன செய்கின்றன என்பதில், நான் அதிக அக்கறை காட்டி வருகிறேன். அதனால், இந்த அவசர சட்டம் விஷயத்தில், மத்திய அரசு செய்தது தவறு என, சொல்கிறேன்,’’ என்றார். இதன்பின், நிருபர்கள் சந்திப்பு நடந்த இடத்தை விட்டு வெளியேறினார் ராகுல்.

இதன்பின், நிருபர்களிடம் பேசிய, காங்கிரஸ் பொதுச் செயலர் அஜய் மேக்கன், ‘‘ராகுல் என்ன சொன்னாரோ, அது கட்சியின் கொள்கை,’’ என்றார்.

ஞானோதயம் ஏன்?காங்கிரசை உன்னிப்பாக கவனித்து வரும் டில்லி அரசியல் நோக்கர்கள், ‘காங்கிரஸ் நடத்தும் நாடகம் இது’ என்றேகூறுகின்றனர்.அவர்கள் கூறியதாவது:இந்த அவசர சட்டம் தொடர்பாக, ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, எந்த விதமான எதிர்ப்பையும் தெரிவிக்காத, காங்., துணைத் தலைவரான ராகுல், இப்போது எதிர்ப்புத் தெரிவித்துள்ளது, பலரையும் வியப்படைய வைத்துள்ளது.பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, நாடு முழுவதும் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அவர் செல்லும் இடங்களில் எல்லாம், இளைஞர்கள் கூட்டமும், பொதுமக்கள் கூட்டமும் பெருமளவில் கூடுகிறது. ‘ஊழலை ஒழிக்க வேண்டும்’ என, இளைஞர்கள் விரும்புகின்றனர். அவர்களது ஒரே தேர்வாக மோடி உள்ளார்.அதனால், காங்கிரசின் செல்வாக்கு சரிந்து விடலாம் என, கணக்கு போட்ட, ராகுல், ‘மிஸ்டர் கிளீன்’ என்ற இமேஜை உருவாக்கிக் கொள்ளவும், ஊழல் எதிர்ப்பில் தான் யாருக்கும் சளைத்தவன் அல்ல என்பதை நிரூபிக்கவும், மோடியின் ஊழல் எதிர்ப்பு பிரசாரங்களை முறியடிக்கவும், கட்சியின் முடிவுக்கு மாறாக, நேற்று தடாலடியாக, அவசரசட்டத்திற்கு எதிராகஅறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.இதன் மூலம், ஊழல், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் மீது தனக்கு கருணை கிடையாது என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்து; மக்கள் செல்வாக்கை பெற முயற்சி செய்துள்ளார்.

காங்கிரசின் அகிலஇந்திய தலைவர் சோனியா; இவர் ராகுலின், தாய். ராகுல், கட்சியின் துணைத்தலைவர்; ஆட்சியின் கொள்கைகளை முடிவு செய்யும் இவர்கள், முதலிலேயே ஏன் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை?மோடியின்

Advertisement

செல்வாக்கு பெருகி வருவதைத் தடுக்கவே, அரசுடன் சேர்ந்து ஒரு நாடகத்தை நடத்தியுள்ளனர்.நாடு முழுதும், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளரான, குஜராத் முதல்வர் மோடிக்கு, ஆதரவு அலை வீசத் துவங்கி விட்டது. இனியும், மவுனமாக இருந்தால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரும் தலைவர்கள் பலரும், ‘டிபாசிட்’ கூட கிடைக்காமல், பெரும் தோல்வியைச் சந்திக்க நேரிடும் எனக் கணக்கிட்டு, காங்கிரஸ் கட்சி, நாடகத்தை அரங்கேற்றத் துவங்கி விட்டது.தகவல் தொடர்புத் துறையின், ‘2ஜி’ ஏல ஊழலில் துவங்கி, ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளுடன், கீழிறங்கிப் போய்விட்டது காங்கிரஸ் கட்சியின் இமேஜ்.குற்றப்பின்னணி உள்ள, எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிப்பதை தடுக்கும்சட்டத்தை கொண்டு வர, அரசுமூலம் காய் நகர்த்தி, அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்றுள்ளனர். அப்போதெல்லாம் ராகுலுக்கு இது பற்றி தெரியாதா? ஊழல்வாதிகளை அப்புறப்படுத்த அவதாரம் எடுத்தவர் போல், இப்போது திடீரென ராகுல் எதிர்ப்பு தெரிவிப்பது மிக சரியான நாடகம். மத்திய அரசும், அமைச்சரவையும், காங்கிரசும் திட்டமிட்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. ஊழல் ஒழிப்பு கதாநாயகனாக, ராகுலை முன்னிறுத்த, அக்கட்சி, அவர் மூலமே காய் நகர்த்தி, அவர் வாயாலேயே, அவசர சட்டத்தை, ‘முட்டாள்கள் இயற்றியது’ எனச் சொல்ல வைத்து விட்டது.இது போன்ற மேலும் பல அதிரடி அறிவிப்புகளை ெவளியிட்டு, நல்ல இமேஜை ஏற்படுத்தி, தொடர்ந்து மூன்றாவது முறையாக, மத்தியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என, காங்கிரஸ் கணக்கு போடுகிறது.இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.

நாடு திரும்பியதும் முடிவுமன்மோகன் சிங் அறிவிப்பு:ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த அவரிடம், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் தகுதியிழப்பை தடுக்கும் அவசரச் சட்டத்துக்கு, ராகுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து,செய்தியாளர்கள் கேட்டனர்.அப்போது, அவர் கூறியதாவது:அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேட்டி கொடுப்பதற்கு முன்னதாகவே, அது தொடர்பாக, ராகுல், எனக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தஅவசரச் சட்டம் குறித்த விஷயம், நாட்டில், பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. இதை, அரசு,கவனத்தில் கொள்ளும்.அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராகுல் தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக, நான், நாடு திரும்பியதும், அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.இதற்கிடையே, பிரதமரின் முன்னாள் ஆலோசகர், சஞ்சய் பாரு கூறுகையில், ‘‘இவ்வளவு விஷயங்கள் நடந்தபின்னும், பிரதமர் பதவியில் தொடருவது சரியல்ல. உடனடியாக, அவர், ராஜினாமா செய்ய வேண்டும்,’’ என்றார்.

– நமது சிறப்பு நிருபர் –

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (214)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohandasu Govindarasu - Chennai,இந்தியா
29-செப்-201300:12:33 IST Report Abuse
Mohandasu Govindarasu இது திருச்சியினால் ஏற்பட்ட பயமே தவிர வேறொன்றும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
prabhu - kumbakonam,இந்தியா
28-செப்-201322:10:32 IST Report Abuse
prabhu இப்பொழுதுதான் ராகுலுக்கு புத்தி சுவாதீனம் வந்துள்ளது . இதற்கு கரணம் என்ன என்று உலகத்திற்கே தெரியும் .
Rate this:
Share this comment
Cancel
ravi ramanujam r - rajapalayam,இந்தியா
28-செப்-201322:03:35 IST Report Abuse
ravi ramanujam r இவர்கள் வீட்டில் தான் இதற்கான திட்டமே தீட்டபட்டபோது ராகுல் எங்கு சென்று இருந்தார்? விஜயகாந்த் போல் தன்னிலை மறந்து இருந்தாரா? இந்திய மக்களை மடையர்கள் என நினைத்து செயல் படுகிறாரா?
Rate this:
Share this comment
Cancel
GOVIND - Peravurani,இந்தியா
28-செப்-201321:39:47 IST Report Abuse
GOVIND ராகுல் நீ அடிக்கிற மாதிரி அடி. நான் அழுவுற மாதிரி அழுவுறேன். இப்படிக்கு "மண்" மோகன் சிங்.
Rate this:
Share this comment
Cancel
RSR - chennai,இந்தியா
28-செப்-201321:33:06 IST Report Abuse
RSR .உச்ச நீதிமன்றம் இது விஷயத்தில் தனது கருத்தை வெளியிட்டவுடன், அரசியல் நெருக்கடி வரலாம் என்பதால், அனைத்து கட்சிகளின் கருத்தும் கோரப்பட்டது. அப்போது, நடந்த கருத்துப்பட்டறையில், அனைத்து கட்சிகளும், நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக குரல் எழுப்பின. இது முற்றும் உண்மை. ஏனெனில், குற்றவாளிகள் அனைத்து கட்சிகளிலும் உள்ளனர். ( ஒரு வேளை, இடது சாரி கட்சிகள் விதிவிலக்காக இருக்கலாம்). ராகுல் காந்தி , அமைச்சரவையில் இல்லை. சோனியா காந்தியும் இல்லை. மத்திய அமைச்சரவைவையில் நடக்கும் விவாதம் மற்றும் முடிவுகள் , சட்டப்படி, கட்சியின் தலைமைக்கு தெரியப்படுத்தக்கூடாது. . எனவே , இதை எதிர்ப்பதற்கு, ராகுல் காந்திக்கு வேறு வழி ஏதும் இல்லை. ஒரு மலினமான அரசியல்வாதி போல் அல்லாமல், அவர் தனது தர்மாவேச நிருபர் கூட்டத்தில், அனைத்து கட்சிகளையும் சாடி அறிவுறுத்தி இருக்கிறார். . இதுவே முதல் முறையாக இந்திரா போன்றும், நேரு போன்றும், ஆணித்தரமாக கிரிமினல் அரசியல் நடத்தும் எல்லா கட்சிகளுக்கும் எச்சரிக்கையாக அருமையாக கருத்து தெரிவித்துள்ளார்....WELL DONE RAHUL
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
28-செப்-201320:34:43 IST Report Abuse
krishna சட்டம் இயற்ற முடிவு எடுத்த போதே எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாமே. பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடுவது இதுதானோ.
Rate this:
Share this comment
Cancel
Shankar - Hawally,குவைத்
28-செப்-201319:44:13 IST Report Abuse
Shankar இப்படி ஒரு விளையாட்டு மக்கள் முன் விளையாடிய பிறகு ராகுல் தான் காங்கிரஸ் பிரதம வேட்பாளர் என்று அறிவித்தால், மக்கள் அனைவரும் ராகுலுக்காக அந்த கட்சி வேட்பாளர்களை வெற்றி அடைய செய்வார்கள் என்று கனவு காண்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
28-செப்-201319:43:40 IST Report Abuse
villupuram jeevithan பாவம் பிரதமர், அம்மா பிறந்த நாள் வாழ்த்து சொன்னதிலிருந்து நேரம் சரியில்லை? இப்படி வாங்கி கட்டீகிறாரே?
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
28-செப்-201316:54:27 IST Report Abuse
CHANDRA GUPTHAN தமிழ்நிதி - மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி. மக்கள் பித்தலாட்டம், பிராடு, பக்கிரியாக இருப்பார்களாம். அரசியல்வாதிகள் மட்டும் புத்தன், காந்தியாக இருக்க வேண்டுமாம்? (மக்கள் தான் மன்னனை ஆள்கிறார்களா ?மக்கள் தான் பித்தலாட்டம், பிராடு, பக்கிரியாக இருந்தார்களா ? நல்லாயிருக்க நியாயம்? மக்கள் மட்டும் சுயநலமாக லஞ்சம் கொடுப்பார்கள், வாங்குவார்கள், அது தப்பில்லை (யாருக்கு அரசியல்வாதிகளுக்கு , சம்பளமும் வாங்கிக்கொண்டு கடமையை செய்யாத அரசாங்க ஊழியர்களுக்கு ) . வரதட்சணை கொடுப்பார்கள், வாங்குவார்கள் அது தவறில்லை ( அதற்குத்தான் சட்டம் போட்டீர்களே ஏன் அதை கடுமையாக்கவில்லை ) . மக்கள் ஒட்டு போட ஐநூறு ரூபாய், பிராண்டி, கோழி பிரியாணி கேட்பார்கள். கொடுக்காதவர்களை தோற்கடித்துவிடுவார்கள். கொடுப்பவன் மட்டும்தான் இந்திய ஜனநாயகத்தில் ஜெயிக்க முடியும் (அதை ஆரம்பித்து வைத்தது யார் மக்களா ? . ஆனால் அவன் புத்தன் போன்று வீட்டை விற்று கொடுக்க வேண்டும் (பொது மக்கள் வாங்கிய கடனுக்கே வீட்டை விற்று கொடுக்கும் போது - மக்களை ஆள்பவர்கள் ? ) . ஊழல் செய்ய கூடாது (ஏன் அரசாங்கத்தில் சம்பளம் இதரபடிகள் தரவில்லை ). நல்லா இருக்கே இந்த நியாயம்? இப்போது இல்லாவிட்டாலும், அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த சட்டம் நிறைவேறும். அதை தடுக்க முடியாது. அரசியல்வாதிகளை ஒரேயடியாக ஏமாத்த முடியாது ( மக்களை என்று திருத்தி எழுதுங்கள் ) இப்படி ஒரு அபத்தமான கருத்தை தமிழ்நிதியால் (நிதி குடும்பத்தை சேர்ந்தவரோ சந்தேகமா இருக்கு ) மட்டுமே தரமுடியும் - சந்திரகுப்தன். தோஹா, கத்தார்
Rate this:
Share this comment
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
28-செப்-201316:43:18 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் எப்படியோ நல்லது நடந்தால் சரி. இந்த அவசர சட்டம் திரும்ப பெறப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
28-செப்-201317:23:23 IST Report Abuse
Pannadai Pandianஅது என்ன எப்படியோ சரவணன் ??? பாசம் வழிய கூடாது, கண்டனம் தெரிவியுங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X