ஆழ்துளை குழியில் விழுந்த 4 வயது குழந்தை: 10 மணி நேரத்துக்கு பின் மீட்பு: சிகிச்சை பலனின்றி பரிதாப பலி

Updated : செப் 29, 2013 | Added : செப் 28, 2013 | கருத்துகள் (15) | |
Advertisement
திருவண்ணாமலை : ஆரணி அருகே, போர்வெல் குழியில் விழுந்த, நான்கு வயது பெண் குழந்தை, 10 மணி நேரத்துக்கு பின், மாலை, 6.10 மணிக்கு மீட்கப்பட்டது. வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி, இரவு, 8 மணிக்கு பரிதாபமாக இறந்தது.போர்வெல் குழியில், குழந்தைகள் விழுந்து பலியாகும் சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளது. சில இடங்களில், அதிர்ஷ்டவசமாக
Four-year-old, girl, rescue, borewell, dies, ஆழ்துளை குழி, 4 வயது குழந்தை

திருவண்ணாமலை : ஆரணி அருகே, போர்வெல் குழியில் விழுந்த, நான்கு வயது பெண் குழந்தை, 10 மணி நேரத்துக்கு பின், மாலை, 6.10 மணிக்கு மீட்கப்பட்டது. வேலூர்
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி, இரவு, 8 மணிக்கு பரிதாபமாக இறந்தது.

போர்வெல் குழியில், குழந்தைகள் விழுந்து பலியாகும் சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளது. சில இடங்களில், அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். போர்வெல் குழிகளை மூடாமல், மெத்தனமாக இருப்பதால், இது போன்ற துயரங்கள் அடிக்கடி நடக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த, புலவன்பாடியை சேர்ந்த பழனி மலர்கொடி தம்பதியரின் மகள் தேவி, 4. குடும்ப தகராறு காரணமாக, பழனி மனைவியை பிரிந்து வசித்து வருகிறார். மலர்கொடி, மகள் தேவியுடன் அதே பகுதியில் உள்ள தந்தை பரமசிவம் வீட்டில் வசிக்கிறார்.நேற்று காலை, வேர் கடலை அறுவடை பணிக்கு சென்ற மலர்கொடி, குழந்தையையும் அழைத்து சென்றார். பக்கத்து நிலத்தை சேர்ந்த சங்கர் என்பவர், 300 அடி ஆழத்தில் சமீபத்தில் போர்வெல் போட்டிருந்தார். அதில்,குழாய் பொருத்தப்பட்டு, குழாயின் மேல் பகுதியை, கோணிப்பையால் மூடி, அதன் மேல் சிறிய கல் வைத்திருந்தார். நேற்று காலை, 7.30 மணிக்கு, வயலில் விளையாடி கொண்டிருந்த குழந்தை, போர்வெல்லை மூடி வைத்திருந்த கல் மீது அமர்ந்தது.சமீபத்தில், பெய்த மழைக்கு கோணிப்பை வலுவிழந்து இருந்ததால்,
கல் குழாயின் உள்ளே புகுந்ததோடு, குழந்தையும் குழிக்குள் விழுந்தது. குழந்தை, போர்வெல் குழிக்குள் விழந்ததை, அங்கு பணியில் இருந்த விவசாய தொழிலாளர்கள் பார்த்து, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். ஆரணி, களம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். குழந்தை, 30 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும், என தீயணைப்பு வீரர்கள் கணித்து, அதற்கு ஏற்றார் போல் மீட்பு பணிகளில் தீவிரம் காட்டினர்.

நான்கு, ஜே.சி.பி., உள்ளிட்ட, ஐந்து வாகனங்கள் மூலம் போர்வெல் குழிக்கு அருகில் பள்ளம் தோண்டு பணி நடந்தது. நான்கு ஆம்புலன்ஸ், நான்கு டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.குழிக்குள், குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. நேற்று பகல், 12 மணி வரை, 20 அடி பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பின், வேகமாக பள்ளம் தோண்டினால், மண் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், மிகவும் ஜாக்கிரதையாக பள்ளம் தோண்டு பணி நடந்தது. நேற்று மதியம், 3.45 மணி அளவில், 27 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. தொடர்ந்து பள்ளம் தோண்டு பணி நடந்தது. போர்வெல் குழியில், 30 அடி வரை, ஆறரை இன்ச் குழாயும், அதற்கு கீழ்
பகுதியில் நான்கரை இன்ச் குழாயும் பொருத்தப்பட்டிருப்பதாக, போர்வெல் சொந்தக்காரர் சங்கர் தெரிவித்ததால், குழந்தை, 30 அடிக்குள் சிக்கியிருக்க வாய்ப்பு உள்ளது, என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கலெக்டர் ஞானசேகரன், எஸ்.பி.,முத்தரசி ஆகியோரின் நேரடி பார்வையில், மீட்டு பணிகள் நடந்தது.குழந்தை குழியில் விழுந்த தகவல் அறிந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள், மீட்பு பணி நடக்கும் இடத்தில் குவிந்தனர்.தொடர்ந்து, 10 மணி நேரத்துக்கு பின், மீட்பு குழுவினர் மாலை, 6.10 மணிக்கு குழந்தை மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தை, 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம், ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவசர ஆம்புலன்சில் இருந்த மருத்துவ பணியாளர்கள், முதல்கட்டமாக குழந்தையை பரிசோதித்து விட்டு, குழந்தை மயக்க நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து, ஆரணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை உயிரோடு இருப்பதை உறுதி செய்தனர்.

இருப்பினும், அங்கு முதலுதவி சிகிச்சையளித்து, குழந்தையை மேல் சிகிச்சைக்காக, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி, இரவு, 8 மணிக்கு குழந்தை பரிதாபமாக இறந்தது.ஆழ்துளை கிணற்றில் இருந்து, 10 மணி நேரத்துக்கு பின் மீட்கப்பட்ட குழந்தை, மருத்துவமனையில் இறந்ததால், கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sasikumar - Chennai,இந்தியா
29-செப்-201313:58:02 IST Report Abuse
sasikumar நமது நாடு கூமுட்டைகளின் கூடாரம் , திருத்துவது கஷ்டமே ...
Rate this:
Cancel
isaacumman - coimbatore ,இந்தியா
29-செப்-201311:20:51 IST Report Abuse
isaacumman போர்வாள் போடுபவர்களுக்கு தமிழக அரசு சட்டம் கொண்டுவரவேண்டும் இளம் பிஞ்சுகளை பாதுகாக்க வேண்டும்
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
29-செப்-201310:54:47 IST Report Abuse
Malick Raja கடைதேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக அல்லவா... வாசகர்கள் கருத்துக்கள் இருக்கிறது... அடிப்படையில் பாதுகாப்பின்மை காரணமாக குழந்தை தவறுதலாக விழுந்து விட்டது... துரதிஷ்ட வசமாக மரணம் ... இதற்க்கு ஏனப்பா இத்தனை விமர்சனங்கள்.. அந்த வீட்டிற்கு ருபாய் 100 கொடுத்து விட்டு கருத்து எழுதுங்கள் என்று சொன்னால் திரும்பி கூட பார்க்காமல் ஓடும் கூட்டமல்லவா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X