தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை: சர்க்கரை, வலிப்பு நோயாளிகள் வேதனை

Added : செப் 10, 2010
Advertisement

பொன்னேரி : அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால், தொடர் மருத்துவம் பெறும் சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் வலிப்பு நோயாளிகள் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். விபத்தில் காயமடைந்தவர்கள், தற்கொலை முயற்சி யில் ஈடுபடுபவர்கள் என தினமும் 50க்கும் மேற்பட்டோரும் வருகின்றனர். மேலும் வைரஸ் ஜுரம், டெங்கு, வாந்தி பேதி, மயக்கம்  உள்ளிட்ட நோய்களுக்கு ஆளானவர்கள் என ஏராளமானோர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.


தாலுகாவின் பெரிய மருத்துவமனையாக பொன்னேரி அரசு மருத்துவமனை திகழ்ந்து வருகிறது. ஆனால், போதிய மருத்துவர்கள் இல்லாமல் திணறி வருகிறது. இங்கு 19 டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் வெறும் ஆறு பேர் மட்டுமே உள்ளனர். சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் வலிப்பு நோயாளிகள் தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும். இவர்களுக்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. போதிய டாக்டர்கள் இல்லாததால் இவர்களுக்கு உரிய நேரத்தில் மருந்து வழங்க முடிவதில்லை. வியாழக் கிழமைகளில் மாத்திரை வாங்க வரும் வயதான நோயாளிகள், மணிக்கணக்கில் வரிசையில் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.


நேற்று வியாழக்கிழமை என்பதால் மாத்திரை வாங்குவதற்காக காலை 6 மணி முதல் வரிசையில், 200க்கும் மேற்பட்ட நோயாளி கள் காத்துக் கிடந்தனர். காலை 8 மணி வரை டாக்டர்கள் யாரும் வராததால், நோயாளிகள் விரக்தி அடைந்தனர். காலை 8.30 மணிக்கு வந்த ஒரே ஒரு டாக்டர் மாத்திரைகள் வழங்குவதற்கான சீட்டு எழுதிக் கொடுத்தார். மாத்திரைச் சீட்டு பெறுவதற்காக, மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளிப்புறம் வரை நீண்ட வரிசையில் வயதான நோயாளிகள், வெயிலில் காத்துக் கிடந் தனர். மாத்திரை வழங்கும் இடத்திலும், ஒரே ஒரு ஊழியர் இருந்ததால் அங்கும் முதியவர்கள் வரிசையில் நின்றபடி மாத்திரைகளை பெற்றுச் சென்றனர். பொன்னேரி அரசு மருத்துவமனையில் தேவை யான டாக்டர்களை பணியமர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்வதுடன், வயதான நோயாளிகளை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல், உடனடி யாக மாத்திரைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X