தமிழ்நாடு

துணை முதல்வர் 19ம் தேதி வருகை: அமைச்சர் தகவல்

Added : செப் 10, 2010
Advertisement

நாகர்கோவில்: தமிழக முதல்வர் பங்கேற்கும் முப்பெரும் விழா மேடையில் ஓய்வு அறை உட்பட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், துணை முதல்வர் ஸ்டாலின் 19ம் தேதியே நாகர்கோவில் வருவதாகவும் விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்தார்.


தமிழக முதல்வர் கருணாநிதி வருகிற 20ம் தேதி நாகர்கோவில் வருகிறார். அவர் நாகர்கோவில் பொருட்காட்சி மைதானத்தில் நடக்கும் அண்ணா பிறந்தநாள் விழா, பெரியார் பிறந்தநாள் விழா, அ.தி.மு.க. உதய தினவிழா ஆகிய முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார். இதற்காக பொருட்காட்சி மைதானத்தில் நடக்கும் விழா மேடை அமைத்தல் உள்ளிட்ட முன்ஏற்பாடு பணிகளை அமைச்சர் சுரேஷ்ராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள், மற்றும் தி.மு.க. நகர செயலாளர் மகேஷ் உட்பட திரளானோர் உடனிருந்தனர்.


பின்னர் அமைச்சர் சுரேஷ்ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்; குமரி மாவட்டத்தில் இதுவரை யாரும் எடுக்காத அளவில் சிறப்பான பெரிய விழாவாக தமிழக முதல்வர் கலந்துகொள்ளும் முப்பெரும் விழா நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தி.மு.க. தொண்டர்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவல்கிணறில் இருந்து நாகர்கோவில் வரையும், களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் அலங்கார வளைவுகள், மற்றும் தோரணங்கள் அமைத்து கட்சிக்கொடிகள் பறக்க விடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த ஒன்றிய, நகர பிரதிநிதிகள் செய்து வருகின்றனர்.


விழா நடைபெறும் பொருட்காட்சி மைதானத்தில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. விழா மேடையில் ஓய்வு அறை உட்பட சிறப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழக முதல்வர் 20ம் தேதி காலை ரெயிலில் வந்தால் கன்னியாகுமரியிலும், விமானம் மூலம் வந்தால் களியக்காவிளையிலும் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைப்போல் கன்னியாகுமரியில் முதல்வர் தங்குகிறார். விழாவை முடித்துக்கொண்டு மறுநாள்(21ம் தேதி) சென்னை புறப்பட்டு செல்கிறார். விழா நடக்கும் நாளுக்கு முதல் நாளான 19ம் தேதியே துணை முதல்வர் ஸ்டாலின் நாகர்கோவில் வருகிறார். முப்பெரும் விழாவிற்கான பணிகள் 30 சதவீதம் முடிவடைந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்தார்.


றவுத்துறையானது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விவசாயக்கடனை தவணை தவறாமல் செலுத்தும் விவசாயிகளுக்க வட்டியில்லாமல்லவழங்கப்படுகிறது. தவணை தவறும் பட்சத்தில் 4 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும். விவசாயக்கடனுடன் விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்களும் வழங்கப்படுகிறது. தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சுய உதவி குழுக்களுக்கு சுயதொழில் கடன்களை அதிகமாக வழங்கி வருகிறதால் பெண்கள் சுய தொழில்கள் செய்வதன் மூலமாக தங்களுமைய குடும்ப பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையவும் வழி செய்கிறது. இதுவரை கூட்டுப்பொறுப்பு குழுக்கள் மூலம் கடன் பெற வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கடனை திருப்பி கட்டினால் வட்டியில்லை. ஆதலால் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டுறவு சங்கங்களில் நல்ல ஈடுபாடு கொண்டு தங்களுடைய கடமைகளையும் பொறுப்புக்களையும் அரசு அவ்வப்போது அறிவிக்கும் சலுகைகளையும் தெரிந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.


பயிற்சி முகாமில் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் செல்வின் ஜெயபாலன், சங்க தனி அலுவலர் முருகேசன், செயலாளர் செல்வின் டேவிட் உட்பட பலர் கலந்து கொண்டனர். இத்தகவலை கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் தெரிவித்துள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X