சென்னை : குடிபோதையில் நண்பருடன், சவால் விட்டு கூவத்தில் குதித்தவர் உடலை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர். சிந்தாதிரிப்பேட்டை, மேற்கு கூவம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நந்தகோபால் (30). ஆட்டோ டிங்கரிங் கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் ரஞ்சித் (32). இருவரும் நேற்று பகல் 12 மணியளவில், மது அருந்திவிட்டு சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றுப் பாலம் அருகில் நடந்து வந்தனர். அப்போது ரஞ்சித், கூவம் ஆற்றில் நீச்சல் அடிக்க முடியுமா என நந்தகோபாலுக்கு சவால் விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, திடீரென நந்தகோபால், கூவம் ஆற்றில் குதித்தார். நீரில் மூழ்கிய நந்தகோபாலை காப்பாற்ற நண்பர் ரஞ்சித், ஆற்றில் வேறு வழியாக இறங்கினார். இதைப்பார்த்த பொதுமக்கள் ரஞ்சித்தை காப்பாற்றினர். தொடர்ந்து, சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எழும்பூர், திருவல்லிக்கேணி பகுதி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடம் வந்து கூவத்தில் இறங்கி தேடினர். சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE