தமிழ்நாடு

அரவையில் முருங்கை பவுடர் தொழிற்சாலை : கொங்கு வேளாளக்கவுண்டர் பேரவை அரசுக்கு கோரிக்கை

Added : செப் 10, 2010
Advertisement

கரூர்: "அரவையில் முருங்கை விவசாயிகளை காப்பாற்ற, முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவை மாநில பொருளாளர் அம்மையப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: அரவக்குறிச்சி தாலுகாவில் உள்ள க.பரமத்தி யூனியன், தாந்தோணி யூனியன், அரவக்குறிச்சி யூனியன் மற்றும் வேடச்சந்தூரில் ஒட்டன்சத்திரம், மூலனூர், வெள்ளக்கோவில் ஆகிய பகுதி விவசாயிகளின் பிரதான தொழிலாக முருங்கை உற்பத்தி உள்ளது. சில சமயங்களில் முருங்கை சாகுபடி அதிகமாகி, சந்தையில் கடுமையாக விலை வீழ்ச்சியடைகிறது. முருங்கை பறிப்பதற்கான கூலி கூட கிடைப்பதில்லை.

முருங்கை சாகுபடி செய்யப்படும் இப்பகுதியில் குளமோ, ஏரியோ, கால்வாயோ இல்லை. இதனால், நீண்டகால பயிராக தென்னை, வாழை, கரும்பு இப்பகுதியில் பயிர் செய்யமுடியாது. குறுகிய கால பயிராக முருங்கை, தக்காளி, வெங்காயம், கத்திரி என விவசாயம் நடக்கிறது. அதிக அளவில் மக்கள் ஈடுபட்டுள்ள முருங்கை சாகுபடியை தொடர, விவசாயிகளை காப்பாற்ற நிரந்தர தீர்வாக அரவக்குறிச்சியில் முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முருங்கை பவுடரை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும்,விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கவும் இதனால் வாய்ப்பு ஏற்படும். மேலும், காய், கனிகள் அழுகாமல் இருக்க, இப்பகுதியில் குளிர்சாதன வசதியுடன் கிடங்கு அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X