அரசியல் செய்தி

தமிழ்நாடு

லோக்சபா தேர்தலில் போட்டி உறுதி : சமூக சமத்துவப்படை தலைவர் தகவல்

Added : அக் 04, 2013
Share
Advertisement

வேலூர்: வரும் லோக்சபா தேர்தலில், சமூக சமத்துவப்படை போட்டியிடும்,'' என, அக்கட்சியின் தலைவர் சிவகாமி கூறினார். சமூக சமத்துவப்படை கட்சி, வேலூர் மாநகர புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்றும் கொடியேற்று விழா, வேலூர் ஆசிரியர் இல்லத்தில், நேற்று நடந்தது. இதில், தலைவர் சிவகாமி பேசியதாவது:
வரும் லோக்சபா தேர்தலில், சமூக சமத்துவப்படை கட்சி போட்டியிடுகிறது. தனித்து போட்டியா அல்லது கூட்டணியா என்பது குறித்து, வரும், 24ம் தேதி, சென்னையில் நடக்கும் மாநில பொதுக் குழு கூட்டத்தில், முடிவு செய்யப்படும். பஞ்சமி நிலம் மீட்பு, வேலையில்லா திண்டாட்டம், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கல், ஒரு குடும்பத்துக்கு, ஐந்து ஏக்கர் நிலம் இலவசமாக வழங்க வேண்டும் என்பது போன்ற திட்டங்களை முன்வைத்து, தேர்தலை சந்திப்போம். வீடு இல்லாதவர்களுக்கு, வீடு வழங்கும் திட்டத்தை விளக்க, வரும் டிசம்பர் மாதம், சேலத்தில் வீடற்றோர் மாநில மாநாடு நடத்தப்படும். இதில், சமூக சமத்துவப்படையைச் சேர்ந்த, ஒரு லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில், அரசு கணக்குபடி பஞ்சமி நிலம், 12 லட்சம் ஏக்கர் இருக்க வேண்டும். ஆனால், இரண்டு லட்சம் ஏக்கர் தான் உள்ளது. 10 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம், தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதை மீட்க, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். திருவண்ணாமலை மாவட்டம், போளூரில், பஞ்சமி நிலம் மீட்பது தொடர்பாக நடந்த பொது விசாரணையில், 80 வழக்கு பதிவு செய்யப்பட்டது. இங்கு மட்டும், 200 ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X