பதிவு செய்த நாள் :
கருத்துகள் (10)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை, புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கடல்நீர் மெல்ல மெல்ல உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முட்டுக்கட்டை போடாவிட்டால், அடுத்த, 50 ஆண்டுகளில் நிலத்தடி நீர் முழுவதும், கடல்நீராக மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது தமிழக அரசின் கடமை.

சென்னையின் கிழக்கு பக்க எல்லையாக, வங்காள விரிகுடா கடல் உள்ளது. கடற்கரை பகுதியில், மீனவர் மட்டுமே வசித்து வந்தனர். அப்போதெல்லாம் ஆழ்துளை கிணறுகள் கிடையாது. மீனவர்கள் பயன்பாட்டிற்கு, கடற்கரையில், ஐந்தடி ஆழத்தில், சுவையான நிலத்தடி நீர் கிடைத்தது. கடற்கரையை அடுத்துள்ள நிலப் பகுதியில், சதுப்பு நிலங்கள், ஏரி, குளங்கள் என, பல்வேறு வகையான நீர்நிலைகள் இருந்தன. இதனால், மழைநீர் போதிய அளவுக்கு சேகரிக்கப்பட்டு, நிலத்தடி நீர்வளம் அதிகமாக இருந்தது. இதில், வெள்ளப்பெருக்கு காலங்களில் அதிகப்படியான நன்னீர் கடலுக்கு செல்லாமலும், கடல்நீர் உட்புகாமலும் தடுப்பதில், சதுப்பு நிலங்கள், முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு காலத்தில், மீனவர்கள் மட்டும் வசித்து வந்த கடற்கரை பகுதிகளில், மேற்கத்திய மோகம் காரணமாக, கடற்கரை, "ரிசார்ட்'கள் அதிகரித்தன. இதன் பின் கடந்த, 30 ஆண்டுகளில், கடற்கரையோரப் பகுதிகளில், மக்கள் வீடு கட்டி குடியேறுவது பலமடங்காக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அதிகரித்து வரும், அடுக்குமாடி குடியிருப்புகளின் தேவைக்காக, அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்ட, ஆழ்துளை கிணறுகளும், நீர் நிலை பகுதிகள், கபளீகரம் செய்யப்பட்டதும், கடல்நீர் உட்புக, சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பதாக அமைந்து விட்டன. இந்நிலை தொடர்ந்தால் அடுத்த, 50 ஆண்டுகளில் சென்னையின் பெரும் பகுதி நிலத்தடிநீர், கடல்நீராக இருக்கும் என்பதில் ஐயமில்லை.தீர்வு என்ன? கடல்நீர் உட்புகுவது குறித்து, பல ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு, மாநில அரசுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி வரும், மத்திய அரசின் நிலத்தடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கடற்கரையோரம், நிலத்தடிநீர் அதிகளவில் உறிஞ்சப்படுவதே, கடல்நீர் உட்புக முக்கிய காரணம். ஒரு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தால், அதை சுற்றி, ஒன்று முதல் ஒன்றரை சதுர கி.மீ., பரப்பளவிற்கு, கடல்நீர் உட்புகுகிறது. கடற்கரையில் இருந்து, 3 கி.மீ., தூரத்தில், ஆழ்துளை கிணறு அமைப்பதாக இருந்தால், 30 - 35 அடி ஆழம் மட்டுமே எடுக்க வேண்டும். சமீபத்திய கணக்கெடுப்பின் படி, கிழக்கு கடற்கரை சாலை, வடசென்னை பகுதிகளின் பல இடங்களில், கடல்நீர்

உட்புகுந்து விட்டது. தென்சென்னையை பொறுத்தவரை, திருவான்மியூர், பாலவாக்கம், வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி ஆகிய இடங்களில், பகுதி பகுதியாக கடல்நீர் உட்புகுந்துள்ளது.

பீசோ மீட்டர்: கடல்நீர், நிலத்தடி நீருடன் கலப்பது, 'பீசோ மீட்டர்' என்ற கருவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. கடற்கரை ஓரங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அதில், அக்கருவியை பொருத்தி, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எடுத்து, கருவியில் சேகரமாகியுள்ள விவரங்களை பார்த்தால், எந்த இடத்தில் கடல்நீர் உட்புகுந்துள்ளது, எந்த இடத்தில் நிலத்தடிநீர் அதிகரித்துள்ளது என்பது தெரிய வரும். அந்த தகவலின் அடிப்படையிலேயே, மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். ஆனால், சென்னையில் கடல்நீர் உட்புகும் பிரச்னை, மிகவும் ஆபத்தாகவே உள்ளது. இதை தடுக்க இருந்த, நீர்வள அமைப்புகள், மனிதர்களால் சிதைக்கப்பட்டதே முக்கிய காரணம். ஆழ்துளை கிணறுகள் மூலம், அதிகளவிலான நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது; இது தடுக்கப்பட வேண்டும்.

திருப்பி அனுப்பும் வழி: கடல்நீரை திருப்பி அனுப்ப ஒரே வழி, நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்துவது தான். இது, மழைநீர் சேகரிப்பால் மட்டுமே முடியும். கடந்த, 2003ல் தமிழக அரசு அறிவித்த மழைநீர் சேகரிப்பு திட்டம், நல்ல பலன் தந்தது. அத்திட்டத்துக்கு, மீண்டும் புத்துயிர் அளிக்க வேண்டும். நிலத்தடியில் உட்புகுந்துள்ள, 1 யூனிட் (1,000 லிட்டர்) கடல்நீரை வெளியேற்ற, நாம் ஒன்பது யூனிட் (9,000 லிட்டர்) நல்ல தண்ணீர் உட்செலுத்த வேண்டும். "இன்ஜெக்ஷன் ஜெட்' இயந்திரத்தை பயன்படுத்தினால், இது சாத்தியமாகும். குடியிருப்புகளால் காணாமல் போன நீர்நிலைகளை கண்டுபிடித்து, புதுப்பிக்க வேண்டும். அப்போது தான், கடல்நீர் உட்புகும் ஆபத்தில் இருந்து, சென்னையை காப்பாற்ற முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.27 குளங்கள்: இதுகுறித்து, ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த, 'நீர் எக்ஸ்னோரா' பிரதிநிதி சேகர் கூறியதாவது: கிழக்கு கடற்கரை சாலையில், 60க்கும் மேற்பட்ட குளங்களை, நான் பார்த்துள்ளேன். முன்பெல்லாம், அதில் மழைநீர் தேங்கி காட்சியளிக்கும். தற்போது, குளங்களை தேட வேண்டி உள்ளது. ஈஞ்சம்பாக்கத்தில் மட்டும், 27 குளங்கள் இருந்தன. அதில், பல குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்டு விட்டன. எனவே, அவற்றை மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் நீதிமன்ற உதவியை நாடி உத்தரவும் பெற்றோம். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவையே மதிக்கவில்லை. ஒரே ஒரு குளம் மட்டுமே

Advertisement

மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

குஜராத்தில் முன்னோடி திட்டம்: தமிழகத்தை போலவே, குஜராத் மாநிலமும், கடலை ஒட்டி அமைந்துள்ளது. அங்கும், 1980ம் ஆண்டுகளில், கடல்நீர் உட்புகுந்தது கண்டறியப்பட்டது. கடல்நீர் மேலும் உட்புகுந்து நிலத்தடி நீர்மாசடையாமல் இருக்க, பிரமாண்ட திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. அது தான் கடற்கரையோரம், 400 கி.மீ., தூரத்திற்கு பிரமாண்ட கால்வாய் அமைப்பது. அந்த கால்வாயுடன், மாநிலத்தில் உள்ள அனைத்து நதிகளும் இணைக்கப்படுகின்றன. இத்திட்டம், 2005ல் துவக்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் இருக்கும் குளங்களையும், ஏரிகளையும் தொலைத்து நிற்கிறோம்.

நெதர்லாந்தில் கட்டுப்பாடு: கடலால் சூழப்பட்ட நெதர்லாந்து நாடு, கடல் மட்டத்தை விட, கீழான பகுதி. அங்கு, நிலத்தடி நீரில், கடல்நீர் ஊடுருவும் வாய்ப்பு அதிகம். எனவே, நிலத்தடி நீர் எடுப்பதை, அரசு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஒரு நாளைக்கு, குறிப்பிட்ட அளவு லிட்டர் தண்ணீர் மட்டுமே, நிலத்தில் இருந்து உறிஞ்சட வேண்டும் என்பது, விதியாக உள்ளது. அதற்கு மேல் உறிஞ்சினால், கடல்நீர் உட்புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பொதுமக்கள் அரசின் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகின்றனர்.மடிப்பாக்கத்தில் உப்புநீர் ஏன்? வங்காள விரிகுடாவில் இருந்து, 7 கிலோ மீட்டர் தொலைவில், மடிப்பாக்கம் அமைந்திருந்தாலும், அப்பகுதியில் சில இடங்களில் நிலத்தடி நீர், கடல்நீரை போலவே உவர்ப்பு தன்மை கொண்டதாக காணப்படுகிறது. இது கடல்நீர் உட்புகுந்ததால் ஏற்பட்டதில்லை என்கின்றனர். பல நூறு ஆண்டுகளுக்கு முன், மடிப்பாக்கம் பகுதி, குட்டையாக இருந்ததால், அங்கு பல ஆண்டுகளாக தேங்கிய தண்ணீர், தாதுக்களுடன் கலந்து, உவர்ப்பு தன்மை ஏற்பட்டு விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த பிரச்னைக்கு நிரந்த தீர்வு, அங்குள்ள மண் வளத்தை மாற்றுவது தான். இது இந்தக் காலத்தில் சாத்தியமில்லை.நிலத்தடி நீர் திருட்டு: சென்னை புறநகர் பகுதிகளில், நாள் ஒன்றுக்கு பல கோடி லிட்டர் நிலத்தடி நீர், கடந்த, 15 ஆண்டுகளாக, டேங்கர் லாரிகள் மூலம் உறிஞ்சப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம், 200 அடி ஆழத்தில் சென்றுவிட்டது. இதை, தமிழக அரசு தடுத்து நிறுத்த, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதே நிலை நீடித்தால், அடுத்த, 20 ஆண்டுகளில், நிலத்தடி நீரே இல்லாமல், கடல் உட்புக ஏராளமான வாய்ப்பு உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi Chandran - puducherry,இந்தியா
07-அக்-201300:01:03 IST Report Abuse
Ravi Chandran நிலத்தடி நீருக்கு கட்டுப்பாடு இல்லாததனாலே இந்த நிலை. அரசாங்கமும் அது போட்ட 2003 நிலத்தடி நீர் சட்டத்தையும் திரும்ப வாபஸ் வாங்கி விட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு அதனுடைய நிலத்தடி நீர் சட்டத்தின் மூலம் இன்னம் நிறைய நிறுவனங்களுக்கு நிலத்தடி நீரை எடுக்க அனுமதி அளித்து வருகிறது . நிறுவனங்கள் எடுக்கும் நிலத்தடி நீருக்கு அரசு ஒரு சிறிய கட்டணமாவது வசூலித்தால்தான் இதற்கெல்லாம் ஒரு முடிவு பிறக்கும். இதன்மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு நிலநீரை மேம்படுத்த உருப்படியான உறுதியான திட்டங்களை தீட்ட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
m.s.kumar - chennai,இந்தியா
06-அக்-201310:52:06 IST Report Abuse
m.s.kumar சென்னை நில பரப்பு கடல் மட்டத்தை விட ஒரு மீட்டர் தாழ்வானது , இதன்னால் மழை காலத்திலும் கடல் சீற்றத்திலும் கடல் நீர் சுலபமாக நில பரப்பை எட்டும் இதன்னால் நீர் உப்பு நீராக மாறி பயன் பாட்டிற்கு உகந்ததாக இல்லாமல் போய்விடும் . இதோடு குடிநீரில் கழிவு நீர் கலப்பது போன்றவற்றால் நீர் பிரச்னை தீர்க்க முடியாத் ஒன்றாக போனது . இதை அறிந்துதான் தான் M .G .R . அவர்கள் திருச்சி தமிழ்நாட்டின் தலைநகராக மற்ற ஆசை பட்டார்
Rate this:
Share this comment
Cancel
varadarajan.a.v - chennai,இந்தியா
05-அக்-201318:52:17 IST Report Abuse
varadarajan.a.v மழை நீர் கடலில் கலந்து வீணாகாது சேமித்து நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்த அரசு தக்க நடவடிக்கைகளை உடனே மேற்கொண்டால் நலமாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
varadarajan.a.v - chennai,இந்தியா
05-அக்-201317:34:07 IST Report Abuse
varadarajan.a.v மழை நீர் கடலில் சென்று கலந்து வீணாகாமல் அரசு அதை சேகரிக்க தக்க நடவடிக்கைஐ உடன் எடுக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
p.mohamed rafik,kuruvadi - hafar al batin,இந்தியா
05-அக்-201301:41:18 IST Report Abuse
p.mohamed rafik,kuruvadi இது போன்ற செய்திகள் தான் ஊடகங்களிலிருந்து மக்கள் எதிர் பார்க்கின்றனர்.நன்றி தினமலர்.அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஊடகங்கள் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
M.Dhanasekaran - Nagpur  ( Posted via: Dinamalar Android App )
04-அக்-201319:16:43 IST Report Abuse
M.Dhanasekaran Eye opener.This technical news item presented in simple easily understandable way.Quick action to protect/recharge ground water is highly required. M.Dhanasekaran,Nagpur,Maharastra.
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
04-அக்-201314:41:18 IST Report Abuse
Rangarajan Pg அரசு எந்த வித நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் அதற்கு ஒத்துழைக்க மாட்டார்கள். ஆனால் இதை போன்ற பிரச்சினைகள் ஏதாவது ஏற்பட்டால் அரசை குறை கூறுவார்கள். நிலத்தடி நீரை RE -CHARGE செய்யும் வண்ணம் மழை நீர் சேகரிப்பு திட்டம் ஜெயலலிதா அரசால் அமலுக்கு வந்தது. ஆனால் அதற்கடுத்த ஆட்சி நமது தீயசக்தி அமைத்தார். அந்த திட்டத்திற்கு மாலை போட்டு அடக்கம் செய்து விட்டார்கள் திமுகவினர். அவர்களுகென்ன நிலத்தடி நீர் மாசுபட்டால் என்ன மக்கள் அவதி பட்டால் என்ன? அவர்களுக்கு தேவையானது நடந்தால் போதும். தற்போது இந்த அரசு மீண்டும் அந்த சட்டத்தை கொண்டு வந்து மிக கடுமையாக நடைமுறைபடுத்த வேண்டும். மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிடில் பாதிப்பு அனைவருக்கும் தான்.
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
04-அக்-201314:38:03 IST Report Abuse
Rangarajan Pg மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மீதும் அமல் படுத்துவதில் ஏன் தாமதம் செய்கிறார்கள். நல்ல தண்ணீர் குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்ட அனுமதித்த அரசியல்வாதிகள் இந்த பிரச்சினை பெரிதானால் அவர்கள் பாட்டுக்கு வேறு ஊருக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ சென்று செட்டில் ஆகி விடுவார்கள். அவர்களுக்கு நிரந்தர வீடும் கிடையாது ஊரும் கிடையாது. எங்கே வேண்டுமானாலும் இடம் பெயர்வார்கள். ஆனால் நாம் தான் கடைசி வரை இங்கே வாழ வேண்டி இருக்கிறது. இதை போன்ற சீரழிவுகளால் நாம் தான் அவதி பட வேண்டி இருக்கிறது. கல்வி அறிவு மற்றும் விழ்ப்புணர்வு இல்லாதவர்கள் செய்யும் இதை போன்ற தவறுகளால் சுற்று சுழல் மீது அக்கறை உள்ளவர்களும் பாதிக்க படுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Vaitheeswaran Ramaswamy - Toronto,கனடா
04-அக்-201307:47:04 IST Report Abuse
Vaitheeswaran Ramaswamy இது முற்றிலும் உண்மை. 30 வருடம் முன்பு நான் சென்னையில் அடுக்கு மாடி வீடு வாங்கும்போது, 7 அடி ஆழத்தில் கிணற்று நீர் கிடைத்தது. இப்போது அது 30 அடி கீழே சென்று விட்டது. நீரும் உவர் நீராகிவிட்டது. இபோது நீர் வாங்கி பயன் படுத்துகிறோம்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
04-அக்-201307:46:33 IST Report Abuse
K.Sugavanam ஒரே தீர்வு மழை நீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் மேலாண்மை,மற்றும் ரீசார்ஜிங்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X