பதிவு செய்த நாள் :
கருத்துகள் (30)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

ஐதராபாத் : ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்க, மத்திய அமைச்சரவை, நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானா அல்லாத மற்ற ஆந்திர மாநில பகுதிகளில், மூன்று நாள், "பந்த்' நடைபெறுகிறது. இதனால், இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.

"தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட வேண்டும்' என, ஆந்திராவில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கோரிக்கை இருந்து வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக, இந்த கோரிக்கையை வலியுறுத்தி, அமமாநிலத்தில் அரசியல் கட்சிகளும், அவர்களுக்கு ஆதரவான மாணவர் அமைப்புகளும் போராடி வருவதால், தலைநகர் ஐதராபாத் போர்க்களமாக மாறியுள்ளது.இந்நிலையில், ஜூலை மாதம், "தெலுங்கானா மாநிலம் உருவாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து, மேலும் பிரச்னை அதிகமானது. "ஆந்திராவை பிரிக்கக் கூடாது' என, மத்திய அரசில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களும், ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்.பி.,க்களும், குரல் கொடுத்தனர்; எனினும், அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.காங்கிரஸ் செயற்குழுவின் முடிவு படி, தனி மாநிலம் உருவாக்கப்படுவதற்கான, அடுத்த கட்ட நடவடிக்கையாக, நேற்று முன்தினம் கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தெலுங்கானாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கும் அடுத்த கட்ட நடவடிக்கையாக, உடனடியாக, அமைச்சர்கள் குழுவும் அமைக்கப்பட்டது. அந்தக் குழு, புதிய மாநிலத் தேவைகள் மற்றும் எல்லைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டது.அமைச்சரவையின் முடிவு வெளியான உடனேயே, டில்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட ஆந்திர மக்கள், "மாநிலத்தை பிரிக்கக் கூடாது' என, முழக்கம் இட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவர்கள், அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.நேற்று முன்தினம் நள்ளிரவிலேயே, மத்திய சுற்றுலா துறை அமைச்சராக இருந்த, நடிகர் சிரஞ்சீவி, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைத்து விட்டு, ஆந்திரா திரும்பி விட்டார்.மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும், ஆந்திராவைச் சேர்ந்த, பல்லம் ராஜு, பிரதமர் மன்மோகனை சந்தித்து, தன் ராஜினாமா முடிவை கூறினார். "அவசரப்பட வேண்டாம்; பொறுத்திருங்கள். நான் கூறும் வரை ராஜினாமா செய்ய வேண்டாம்' என, அவரை பிரதமர் கேட்டுக் கொண்டார்.காலை வரை பொறுத்திருந்த பல்லம் ராஜு, நேற்று ராஜினாமா கடிதத்தை, பிரதமருக்கு


அனுப்பி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:இப்போது இருக்கும் சூழ்நிலையில், அமைச்சரவையில் நீடிக்க நான் விரும்பவில்லை. காங்கிரசை சேர்ந்த நான், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலக விரும்புகிறேன். அதற்காக, கட்சித் தலைவர், சோனியாவை சந்திக்க உள்ளேன். மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்ற முடிவை, மத்திய அரசு அவசரப்பட்டு எடுத்து விட்டது. மாநில மக்களின் உணர்வுகளை மதிக்கத் தவறிவிட்டது. எனவே, நான் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகியுள்ளேன். அதனால் தான் ராஜினாமா செய்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

பல்லம் ராஜு போலவே, ஆந்திராவை சேர்ந்த அமைச்சர்களான, கே.எஸ்.ராவ், புரந்தேஸ்வரி, கில்லி கிருபாராணி, கோட்லா ஜெயசூரிய பிரகாஷ் ரெட்டி ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர்.காங்கிரஸ் மூத்த எம்.பி.,யான ஆர்.எஸ்.ராவும் ராஜினாமா செய்துள்ளார். ஆந்திர மாநிலத்தில், சட்ட அமைச்சராக இருந்த, எரசு பிரதாப் ரெட்டியும், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடன், 12க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்கள், ராஜினாமா கடிதங்களை, காங்கிரஸ், முதல்வர், கிரண்குமார் ரெட்டியிடம் வழங்கியுள்ளனர்.

இது பற்றி, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, ""தனி மாநிலங்கள் உருவாகும் போது, இது போன்ற நிலைமைகள் உருவாவது சஜகம் தான். எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் கவலைகளையும் நாங்கள் கேட்போம்; அதன் மீதும் தக்க நடவடிக்கை எடுப்போம். இந்நிலையை தவிர்க்க முடியாது. எக்காரணத்தை கொண்டும், தெலுங்கானா முடிவில் மாற்றமில்லை,'' என்றார்.

மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானா பகுதிகள் தவிர்த்து, பிற பகுதிகளில், மூன்று நாள், "பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வர், கிரண்குமார் ரெட்டி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், மாநில சட்டம், ஒழுங்கு நிலைமை குறித்து அவசர ஆலோசனை மேற்கொண்டார்.பல இடங்களில், மாணவர்கள், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். அரசு பஸ்கள் இயக்கப்படாததால், விசாகப்பட்டினம் உட்பட பல பகுதிகளில், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.மாநில காங்கிரஸ் தலைவர், போட்சா சத்யநாராயணாவின் விசாகப்பட்டினம் வீட்டின் முன் குவித்த ஏராளமானோர், உள்ளே செல்ல முயன்றனர். அவரகளை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

அடுத்து என்ன?
தெலுங்கானா மாநிலத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதை

Advertisement

அடுத்து, 10 உறுப்பினர்களைக் கொண்ட, அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு, தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை மேற்கொள்ளும்.
ஆறு வாரங்களில், அந்தக் குழு, தன் பரிந்துரையுடன், தெலுங்கானா மசோதாவை தயாரிக்கும். அந்த மசோதா, வரும் குளிர்கால கூட்டத்தொடரில், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும். முதற்கட்டமாக, 10 ஆண்டுகளுக்கு, ஐதராபாத், தெலுங்கானாமற்றும் பிற பகுதிகளுக்கும் தலைநகராக விளங்கும்.

ஜெகன் மோகன் உண்ணாவிரதம்: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவரும், கடப்பா தொகுதி, எம்.பி.,யுமான ஜெகன் மோகன் ரெட்டி, காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.இதற்கான முடிவை, ஐதராபாத்தில் நேற்று அறிவித்த ஜெகன் கூறியதாவது:தனி மாநிலம் குறித்து, ஆந்திர சட்டசபை மற்றும் மாநில மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எங்கள் மாநில மக்களின் விருப்பத்தை கேட்காமல், மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது.

இதை கண்டித்து, காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க உள்ளேன்.தண்ணீர் பிரச்னைக்காக, தமிழகம், கர்நாடக மாநிலங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், புதிய குழப்பமாக, ஆந்திராவையும் இரண்டாக பிரித்து, தண்ணீர் தகராறை ஏற்படுத்த மத்திய அரசு முயல்கிறது. தெலுங்கானா மாநிலம் தேவையில்லை என தெரிவித்து, எங்கள் கட்சி நி"ர்வாகிகள், ஜனாதிபதி மற்றும் பிறரை சந்தித்து வலியுறுத்துவர்.இவ்வாறு, ஜெகன் கூறினார்.

தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவை வரவேற்கிறோம். பத்து மாவட்டங்களுடன், ஐதராபாத்தையும் கொண்டு உருவாக்கப்படும் தெலுங்கானா மாநிலத்திற்கு, எங்கள் வாழ்த்துகள். நீண்ட கால கோரிக்கையை, மத்திய அரசு கவனமுடன் பரிசீலித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட்

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (30)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A. Sivakumar. - Chennai,இந்தியா
05-அக்-201318:57:41 IST Report Abuse
A. Sivakumar. தெலுங்கானாவைப் பிரித்துத் தந்தால் அங்கிருக்கும் மக்களவைத் தொகுதிகள் அனைத்தையும் (17) பெற்று விடலாம் என்று மனப்பால் குடித்த இத்தாலி காங்கிரஸ் இப்போது குரங்கு ஆப்பில் சிக்கிக்கொண்டு தவிப்பதைப் போல் தவிக்கிறது... தெலுங்கானாவின் பதினேழு மக்களைவைத் தொகுதிகளைக் கணக்கிட்ட காங்கிரஸ், மீதியுள்ள ஆந்திராவின் 25 மக்களவைத் தொகுதிகளை இழப்பது நிச்சயம்... இதே பிரச்சினை வரும் மக்களவைத் தேர்தல் வரை நீடித்தால், தெலுங்கானாவின் 17 தொகுதிகளிலும் இத்தாலி காங்கிரஸுக்கு ஆப்பு காத்திருக்கிறது... தமிழகம், கர்நாடகம், கேரளம் முதலான மாநிலங்களில் ஏற்கெனவே இத்தாலி காங்கிரஸுக்கு எதிர்ப்பு அலை மற்றும் திரு.மோடிக்கான ஆதரவு அலை நீடித்து வருகிறது... ஆக மொத்தம், காங்கிரஸின் இரும்புக்கோட்டையாகக் கருதப்பட்ட தென்னிந்தியாவை பா.ஜ.க மற்றும் இதர மாநிலக் கட்சிகளிடம் இழக்கப்போகிறது இத்தாலி காங்கிரஸ்...
Rate this:
Share this comment
Cancel
vijay - Chennai,இந்தியா
05-அக்-201318:08:16 IST Report Abuse
vijay இந்த தெலுங்கானா முடிவு காங்கிரசின் அரசியல் தந்திரம் எனலாம். ஆந்திராவில் வரும் தேர்தலில் ஜகன்மோகன் ரெட்டிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதால், காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. சுமார் 50 ஆண்டுகளாக தெலுங்கானாவை பிரிக்க வேண்டும்,என்று அப்பகுதி மக்கள் போராடி வரும் நிலையில், இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி காங்கிரஸ் அரசோ ஆந்திராவை தெலுங்கானா ராயல்சீமா என்று பிரித்து, தெலுங்கானாவில் அடுத்த ஆட்சியை பிடிப்பதில் குறியாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
05-அக்-201317:43:18 IST Report Abuse
Sundeli Siththar தனி மாநிலங்கள் அமையும்போது, இதுபோன்ற போராட்டங்கள் நடைபெறுவது இயற்கையா? பாஜக ஆட்சியில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொது அப்படி நடக்கவில்லையே..
Rate this:
Share this comment
Cancel
Tamilar Neethi - Chennai,இந்தியா
05-அக்-201316:53:50 IST Report Abuse
Tamilar Neethi உலகம் ஒரு சிறு கிராமம் போல ஆகும் இந்நாளில் பிரிவினை என்பது இப்படி மக்கள் வெறுப்பை சந்திப்பது நல்ல ஒரு விஷயம். ஆமாம் இந்த எதிர்ப்பு கூட்டம் பிரிவினை வாதிகள் பிரிவினை வேண்டி தீவைத்த போது, தீ குளித்தபோது என்ன செய்து கொண்டிருந்தார்கள் ???? இப்போது தீயில் எரிந்த குப்பைமீது எண்ணை ஊத்தி கொண்டிருகிறார்கள். இதான் கொல்டி என்பது. தமிழகத்திலும் தென் மாநில இயக்கம் , ஜாதி கட்சிகள் என்று மெல்ல வளர்வது கொல்டி முறைதான்
Rate this:
Share this comment
Cancel
Jaggu Gee - Chennai,இந்தியா
05-அக்-201316:40:37 IST Report Abuse
Jaggu Gee இந்த காங்கிரஸ் மந்திரிங்க ராஜினாமா எல்லாம் இப்போ ராகுல் செஞ்சதை போல டிராமா தான்
Rate this:
Share this comment
Cancel
s.p.poosaidurai - Ramanathapuram,இந்தியா
05-அக்-201311:55:38 IST Report Abuse
s.p.poosaidurai பிரிக்கவேண்டும் என்று போராட்டகுழு போராடியபோது பிரிக்கவேண்டாம் என்று போராடவில்லை.இப்ப போராடுவது என்ன நியாயம் ?
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
05-அக்-201310:46:36 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இனியும் வேண்டாம் மாநிலங்கள்...பிரிவினை பெருவினை..அது உள்ளிருந்தே அறுக்கும் கொடுவாள்..
Rate this:
Share this comment
Cancel
krishnamurthy venkatesan - Chennai,இந்தியா
05-அக்-201310:34:47 IST Report Abuse
krishnamurthy venkatesan தெலங்கான பிரிக்கப்படும்போது திருப்பதியை தமிழ் நாட்டுடன் இணைத்து விடுங்கள். ஏனனில் இங்கு தெலுகு மக்கள் அதிகம் உள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
r.sundararaman - tiruchi,இந்தியா
05-அக்-201310:16:16 IST Report Abuse
r.sundararaman தேசத்தை துண்டாக்கி தன்னலமே பெரிதென அன்று கூடிய கூட்டம் இன்றுவரை பல பிரித்தாளும் சுயநல வியுகத்தை கடைப்பிடித்து நாட்டையே கெடுத்துவிட்டு இப்போதும் எஞ்சியிருக்கும் மக்கள் நிம்மதிக்கும் உலைவைக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Dhayalan - coimbatore,இந்தியா
05-அக்-201310:07:56 IST Report Abuse
Dhayalan ஆந்திர மாநில பிரிவில் அரசியல் கட்சிகள் நல்ல ஆதாயம் பார்க்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X