சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தேடப்பட்ட பயங்கரவாதி 'போலீஸ்' பக்ருதீன் சிக்கினான்!

Updated : அக் 06, 2013 | Added : அக் 04, 2013 | கருத்துகள் (50) | |
Advertisement
சென்னை : சேலம் ஆடிட்டரும், பா.ஜ., மாநில பொதுச் செயலருமான ரமேஷ் மற்றும் வேலூர் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையன் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த, பயங்கரவாதி, 'போலீஸ்' பக்ருதீன், சென்னை அருகே, ஆந்திர மாநில எல்லைப் பகுதியில், மாலை சிக்கினான்வேலூரில், ஜூலை மாதம், 1ம் தேதி, இந்து முன்னணி பிரமுகர், வெள்ளையப்பன் கொடூரமாக கொல்லப்பட்டார். தொடர்ந்து, அதே மாதம், 19ம் தேதி,
ஆடிட்டர் ரமேஷ்,பயங்கரவாதி, போலீஸ் பக்ருதீன்,Police Fakrudeen, arrest

சென்னை : சேலம் ஆடிட்டரும், பா.ஜ., மாநில பொதுச் செயலருமான ரமேஷ் மற்றும் வேலூர் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையன் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த, பயங்கரவாதி, 'போலீஸ்' பக்ருதீன், சென்னை அருகே, ஆந்திர மாநில எல்லைப் பகுதியில், மாலை சிக்கினான்

வேலூரில், ஜூலை மாதம், 1ம் தேதி, இந்து முன்னணி பிரமுகர், வெள்ளையப்பன் கொடூரமாக கொல்லப்பட்டார். தொடர்ந்து, அதே மாதம், 19ம் தேதி, சேலத்தில், பா.ஜ., அலுவலகம் முன், அக்கட்சியின் மாநில பொதுச் செயலர், ஆடிட்டர் ரமேஷை, மூவர் கும்பல் வெட்டிச் சாய்த்தது. தொடர்ந்து, இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த, சி.பி.சி.ஐ.டி., - டி.ஜி.பி., நரேந்திரபால் சிங் தலைமையில், சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, முதல்வர் உத்தரவிட்டார். கடந்த, 2011ல், மதுரை, திருமங்கலத்தி"ல், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி வரும் வழியில், 'பைப்' வெடிகுண்டு வைத்த வழக்கு மற்றும் வேறு சில வழக்குகளில், தலைமறைவாகிய, மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த, "போலீஸ்'பக்ருதீன், 45, பிலால் மாலிக், 25, நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த, பன்னா இஸ்மாயில், 38 மற்றும் நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக், 45, ஆகிய நால்வரையும் தேடி வந்தனர். நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில், 17 கிலோ வெடி மருந்து மற்றும் டெட்டனேட்டர்களுடன்சிலரை, ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை விசாரிக்கும், சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வெள்ளையன் கொலையிலும், பயங்கரவாதி, "போலீஸ்' பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.இவர்களை பற்றிய தகவலை தெரிவித்தால், 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என, தமிழக போலீசார் அறிவித்தனர். அதே நேரத்தில், சமீபத்தில், சேலத்திற்கு பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி வந்த போது, பிடிபட்ட சிலரும், இந்த தகவல்களை உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூன், 26ம் தேதி, மதுரை, நேதாஜி சாலையைச் சேர்ந்த, இந்து முன்னணி பிரமுகர், சுரேஷ்குமார் கொல்லப்பட்ட வழக்கில், மதுரை போலீசார் விசாரித்து வந்தனர். சேலம், வேலூர் கொலை சம்பவங்களுக்கான துப்பு, இதில் கிடைக்கலாம் என்ற அடிப்படையில், மதுரை போலீசாருடன் , சிறப்பு புலனாய்வு குழுவினர், மதுரையில் கிடைத்த, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், சிறப்பு புலனாய்வுப் பிரிவு மற்றும் மதுரை போலீசார் இணைந்து, மதுரை, புதூரைச் சேர்ந்த, அப்துல்லா மற்றும் நெல்பேட்டையைச் சேர்ந்த, தவுபீக் ஆகிய இருவரையும், கைது செய்தனர். இதில், அப்துல்லாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. குறிப்பாக, வெள்ளையப்பன் மற்றும் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் சம்பந்தப்பட்டது, பயங்கரவாதி, "போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட, மூவர் தான், இதில் நேரடியாக களம் இறங்கியவர்கள் என்பதும் தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட இடங்களில் கிடைத்த, வீடியோ பதிவுகளும் இவற்றை உறுதி செய்துள்ளதாக கூறப்பட்டது.தொடர்ந்து, இவர்களை சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் தேடி வந்தனர். நேற்று மாலை, 4:00 மணிக்கு, பயங்கரவாதி, "போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட சிலர், ஆந்திர மாநில எல்லையில், சிறப்பு புலனாய்வு குழுவினரால் சுற்றி வளைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பக்ருதீனுடன் கைதானவர்கள் யார்? அவர்கள் என்ன திட்டத்துடன் இருந்தனர் என்பன குறித்த, தகவல்களை போலீசார் வெளியிடவில்லை. தொடர்ந்து, அவர்கள் அனைவரும், ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Divya Dhar - Chennai,இந்தியா
10-அக்-201307:04:47 IST Report Abuse
Divya Dhar இப்ப ஒரு முஸ்லிம் இயக்கங்கள் கூட பேசவே இல்ல.....
Rate this:
Cancel
M Narasimman Munusamy - Coimbatore,இந்தியா
09-அக்-201308:04:56 IST Report Abuse
M Narasimman Munusamy பணத்துக்கும் மதபோதனைக்கும் அந்நியநாட்டு நாசசக்திக்கு அடிமையாகிவிட்ட நமது நாட்டு அதுவும் குறிப்பாக தமிழகத்தில் வசிக்கும் இளைங்கர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது. இதனால் அமைதிபூங்காவாக இருந்த தமிழகம் இனி பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிவிடும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இதை தடுப்பது அரசு, காவல்துறை மற்றும் பொதுமக்களாகிய எல்லோருடைய கடமையாகும்.
Rate this:
Cancel
jayashree ramesh - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-அக்-201320:52:18 IST Report Abuse
jayashree ramesh இவர்களெல்லாம் இந்திய நாட்டின் சாபம். இவர்கள் இருக்கும் வரை தீவிரவாதம் ஓயாது . இவர்கள் இருக்கவேண்டிய இடம் அண்டை நாடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X