எம்.பி., எம்.எல்.ஏ., மீதான வழக்கு: விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரிக்க ஏற்பாடு

Updated : அக் 05, 2013 | Added : அக் 05, 2013 | கருத்துகள் (18) | |
Advertisement
புதுடில்லி : குற்ற வழக்குகளில் தொடர்புடைய எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரித்து, 6 மாதங்களுக்குள் வழக்கை முடிப்பதற்கு சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஆலோசனை செய்து வருகிறது. குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களின் தீவிரங்களின் அடிப்படையில் வழக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கவும்
Govt, may amend, law to put, lawmakers, trials, on fast track, எம்.பி., எம்.எல்.ஏ., மீதான வழக்கு, விரைவு நீதிமன்றங்கள், மூலம் விசாரிக்க, ஏற்பாடு

புதுடில்லி : குற்ற வழக்குகளில் தொடர்புடைய எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரித்து, 6 மாதங்களுக்குள் வழக்கை முடிப்பதற்கு சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஆலோசனை செய்து வருகிறது. குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களின் தீவிரங்களின் அடிப்படையில் வழக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல்களில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனு அக்டோபர் 7ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளதை அடுத்து சட்ட அமைச்சகம் இந்த நடவடிக்கையை துவங்கி உள்ளது.


மத்திய அரசு முடிவு :

கொலை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட தீவிர குற்றங்களுக்கு முக்கியத்துவம் அளித்தும், மற்ற அனைத்து வழக்குகளிலும் தொடர்புடைய எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரிக்க மத்திய அரசு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அடுத்த 6 மாதங்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கிரிமினல் குற்றங்கள் அடிப்படையிலான சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


சட்ட திருத்தம் :

இந்த ஆண்டு குற்றவியல் சட்டத்தில் கொண்டு வரப்படும் 2வது திருத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எம்.பி., எம்.எல்.ஏ.,க்களின் மீதான வழக்குகளுக்காக கொண்டு வரப்பட உள்ள சட்ட திருத்தம், முன்னதாக டிசம்பர் 16 டில்லி பாலியல் பலாத்கார வழக்கின் போது அனைத்து பாலியல் பலாத்கார வழக்குகளும் விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரிக்கப்பட்டு 2 மாதங்களுக்குள் வழக்கை முடிக்க திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த வழக்குகள் மீதான விசாரணை தினந்தோறும் நடத்தப்பட வேண்டும் எனவும், காலதாமதம் இருக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.


சுப்ரீம் கோர்ட் உத்தரவு :

அரசியலில் உள்ள குற்றவாளிகளை பதவி நீக்கம் செய்வதில் அரசின் வழிகாட்டுதல் குறித்த பிரமாண பத்திரத்தை அக்டோபர் 7ம் தேதி நடைபெறும் பொது நல வழக்கு மீதான விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நிலுவையில் உள்ள பல தேர்தல் சீர்திருத்தங்களையும் அவசர சட்டமாக இயற்ற வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விஷயங்களுக்கும் தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்த பிறகும் அரசு தடை சொல்வதற்கு காரணம் என்ன என இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பி இருந்தது. எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கை விரைந்து முடிக்கவும், அதற்கான சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் பொதுநல கழகம் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையிலான குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kavee - Jeddah,சவுதி அரேபியா
06-அக்-201310:13:12 IST Report Abuse
Kavee முதலில் இதை செய்து அரசியல் கள்வர்களை எல்லாம் உள்ளே புடிச்சு போடுங்க ....அதோட கொள்ளை அடித்த பணத்தை நாட்டுக்கு கொண்டு வாங்க ....
Rate this:
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
06-அக்-201308:11:53 IST Report Abuse
Nalam Virumbi எம் பி, எம் எல் ஏ க்களின் வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டின் கீழ் உள்ள விரைவு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் அல்லது சுப்ரீம் கோர்ட்டின் தனி பெஞ்ச் விசாரிக்கவேண்டும். இதன் தீர்ப்புக்கு மேல் அப்பீல் கூடாது.
Rate this:
Cancel
tmsaravanai - CHENNAI,இந்தியா
06-அக்-201305:53:49 IST Report Abuse
tmsaravanai அம்மாவை எப்படியாவது மாட்ட வைக்கும் நோக்கில் தான் லல்லுவை கைது நாடகம் நாடத்துகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X