சென்னை: ஆந்திர எல்லை கிராமமான புத்தூரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருக்கும் பைப் வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அல் உம்மா பயங்கரவாதியுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவனை உயிருடன் பிடிக்க வேண்டும் என முடிவெடுத்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது, பிலால்மாலிக்கை சரண் அடையும்படி போலீசார் வலியுறுத்தியதாகவும், அதற்கு அவன் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.