சென்னை: ஆந்திர எல்லை கிராமமான புத்தூரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பிலால்மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகிய இருவரும் போலீசாரிடம் சரண் அடைந்தனர். இதன்மூலம், 12 மணி நேர அதிரடி நடவடிக்கை நிறைவடைந்தது. முன்னதாக, வீட்டில் பதுங்கியிருந்த ஒரு பெண், மூன்று குழந்தைகளை வெளியில் அனுப்பிய பிலால்மாலிக், பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பன்னா இஸ்மாயிலுடன் சரண் அடைந்தான். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் எங்கு உள்ளனர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.