Tamil nadu poltical parties fear on ordinance withdrawl | அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம்

Updated : அக் 07, 2013 | Added : அக் 06, 2013 | கருத்துகள் (48)
Advertisement
Tamil nadu, poltical parties, ordinance withdrawl,அவசர சட்டம்,தமிழக கட்சிகள்

குற்ற வழக்கில் தண்டனை பெற்ற, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிப்பை தடுக்க, மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம், வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்குகளில் சிக்கியுள்ள, தமிழக கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் கலக்கம் அடைந்து உள்ளனர்.

குற்ற வழக்கில் தண்டனை பெற்ற, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட், அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. குற்ற வழக்குகளில், சிறை தண்டனை பெறும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், குறிப்பிட்ட காலத்துக்குள், மேல் முறையீடு செய்யும்பட்சத்தில், அவர்கள் பதவியில் நீடிக்கலாம் என்ற ஷரத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இருந்தது. இதன்மூலம், தண்டனை பெற்ற அரசியல்வாதிகள், அப்பீல் செய்து விட்டு, பதவியில் தொடர்ந்து வந்தனர். சமீபத்தில், அந்த ஷரத்தை அதிரடியாக ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட், பரபரப்பு தீர்ப்பு கூறியது.இதையடுத்து, குற்ற வழக்கில், இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றால், எம்.பி., அல்லது, எம்.எல்.ஏ., பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.இந்த இக்கட்டில் இருந்து, அரசியல்வாதிகளை காப்பாற்ற வேண்டும் என்று, விரும்பிய மத்திய அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்க, ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதை அவசர அவசரமாக, ஜனாதிபதி ஒப்புலுக்கு அனுப்பி வைத்து விட்டு, அமெரிக்கா சென்றுவிட்டார் பிரதமர் மன்மோகன் சிங். அதற்கிடையில் நடந்த திருப்பங்கள், அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டிய கட்டாயத்தை, காங்கிரஸ் அரசுக்கு ஏற்படுத்திவிட்டது.காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், 'அவசர சட்டத்தை கிழித்து எறிய வேண்டும்' என, பகிரங்க பேட்டி அளித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். லாலு போன்ற ஆதரவு தலைவர்களை காப்பாற்றவே, இந்த அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாக, பத்திரிகைகளும், எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டின.அதன் விளைவுதான், ராகுலின் கோபமும் எதிர்ப்பும்.

இப்பின்னணியில், தீர்ப்பு குறித்தோ அல்லது அவசர சட்டம் குறித்தோ, தி.மு.க., இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மாறாக, சர்ச்சை ஏற்படுத்திய ராகுல் பேட்டியும், அக்கட்சி தலைமைக்கு பிடிக்கவில்லை என்பது இப்போது தெரியவந்து உள்ளது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் மிகவும் அவசரப்பட்டு விட்டது என்றும், நிதானத்துடன் இந்த பிரச்னையை அணுகியிருக்கலாம் என்றும், தி.மு.க., தலைமை கருதுவதாக தெரியவந்துள்ளது. அதன் காரணமாக, 'அப்செட்'டான தி.மு.க., தலைவர், அறிவாலயம் வராமல் வீட்டிலேயே இருந்த தகவலும், அறிவாலய வட்டாரத்தில் உலா வருகிறது.ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தில், கனிமொழியும், ராஜாவும் வழக்கை சந்தித்து வருகின்றனர். தொலைபேசி முறைகேடு தொடர்பான வழக்கில், தயாநிதியும் சிக்கியுள்ளார். மூவரும் எம்.பி.,யாக இருக்கும் நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு, அவர்களது பதவிக்கு மட்டுமல்ல; எதிர்கால அரசியலையும் கேள்விக் குறியாக்கிவிடும் என்ற கவலை, தி.மு.க., வட்டாரத்தை தொற்றி உள்ளது.

ஏற்கனவே, '2ஜி' வழக்கு விவகாரங்களில் காங்கிரசின் போக்கு பிடிக்காமல் இருந்த தி.மு.க., தலைமைக்கு, அவசர சட்டமும், அது வாபஸ் பெறப்பட்ட விதமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என, தி.மு.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


அ.தி.மு.க.,வுக்கும் சிக்கல்:

பெங்களூரில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கு, முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய முக்கியமான வழக்கு. அதனால் தான், இந்த வழக்கின் ஒவ்வொரு அசைவையும் தி.மு.க., உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதன் காரணமாக, அரசியல் குறுக்கீடு, அதை முறியடிக்க நீதிமன்றத்தின் தலையீடு என அடுத்தடுத்து, திருப்பங்களை சந்தித்து வரும் வழக்காக இது மாறி இருக்கிறது.இந்நிலையில், 17 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு, இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எந்த நேரத்திலும் தீர்ப்பு கூறப்படலாம் என்ற நிலை உள்ளது.அதன் விளைவாக, அரசு வக்கீல் திடீர் நீக்கம், பின், மீண்டும் நியமனம் என்ற பரபரப்புகளுடன் விசாரணை தொடர்கிறது. அதோடு, வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த விசாரணையில், வரும், 30ம் தேதி நீதிமன்றததில் ஆஜராக வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.இந்நிலையில், குற்ற வழக்கில், இரண்டு ஆண்டுக்கு மேல் தண்டனை பெற்றவரை பதவி நீக்கம் செய்ய வகை செய்யும் சுப்ரீம் கோர்ட் உத்தரவும், அதை, ரத்து செய்ய கொண்டு வந்த அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டதும், பெங்களூரு வழக்கின் தீர்ப்பு மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

மேலும், தி.மு.க., இளைஞரணி தலைவர் ஸ்டாலின் (மேம்பால ஊழல் வழக்கு - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை), பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் (முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் கொலை சதி வழக்கு.


ஸ்டாலின், ராமதாஸ், வைகோ:

முதல் குற்றப்பத்திரிகையில் பெயர் இல்லை. ஆனாலும், சி.பி.ஐ., விசாரணை தொடர்கிறது), ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ (நிலுவையில் உள்ள பொடா சட்ட வழக்கு), முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி (மருத்துவ கல்லுாரி அனுமதி வழங்கியதில் முறைகேடு) ஆகியோர் மீதும் (இவர்கள் எந்த பதவியிலும் தற்போது இல்லை), தி.மு.க., - அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீதும் (வருமானத்தை மீறி சொத்து குவிப்பு) வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்த வழக்குகளின் தீர்ப்பு, இப்போது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நமது நிருபர் குழு

வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
purushoth aman - Singapore,சிங்கப்பூர்
06-அக்-201315:52:41 IST Report Abuse
purushoth aman தமிழக மக்கள் சுனாமியாக, புயலாக உருவெடுத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இவர்களை எல்லாம் இருக்குஇடம் தெரியாமல் செய்ய, தமிழக நலன்,, மற்றும் இந்திய திரு நாட்டின் கௌரவம் காக்க மோடி அவர்களின் கரத்தை வலுப்படுத்த பாஜாகாவை வெற்றி பெற செய்ய வேண்டும். அது நிச்சயம் நடக்க எல்லாம் வல்ல இறைவன் துணை செய்வாராக. 'ஜெய் ஹிந்த்'
Rate this:
Share this comment
Cancel
mani k - trichy,இந்தியா
06-அக்-201313:40:07 IST Report Abuse
mani k சட்டமும் அதற்குரிய தண்டனையும் இந்திய பிரஜை அனைவருக்கும் ஒன்றே..எனவே கோர்ட்டின் விசாரனைபடி தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் ஒரே மாதிரி தண்டனை வழங்க வேண்டும். அது தான் ஜனநாயகம்.நம் நாடு நல்ல வழியில் செல்வதற்கும் நாடு எல்லா வகையிலும் சிறந்து விளங்க இதுவே முதல் படி.வாழ்க ஜனநாயகம்.கி.மணி.திருச்சி.
Rate this:
Share this comment
Cancel
Rockes Porte - Trichur,இந்தியா
06-அக்-201313:35:00 IST Report Abuse
Rockes Porte வைகோ மீது எவ்வித ஊழல் குற்ற சாட்டுகளும் இல்லை. மற்றவங்க எல்லாரு மேலேயும் இருக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X