டில்லியில் மீண்டும் காங்., ஆட்சி: கருத்து கணிப்பில் தகவல்

Updated : அக் 06, 2013 | Added : அக் 06, 2013 | கருத்துகள் (35) | |
Advertisement
டில்லியில் நடைபெறவுள்ள, சட்டசபை தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின், ஏழை மக்கள் கட்சி, பெரிய அளவில் ஓட்டுக்களைப் பிரிக்கும். அதனால், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என, கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2வது இடத்தில் பா.ஜ.,: டில்லியில், டிசம்பர், 4ம் தேதி, சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், கட்சிகளின் வெற்றி வாய்ப்புகள் குறித்து, சி ஓட்டர்ஸ்
டில்லியில் மீண்டும் காங்., ஆட்சி: கருத்து கணிப்பில் தகவல்

டில்லியில் நடைபெறவுள்ள, சட்டசபை தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின், ஏழை மக்கள் கட்சி, பெரிய அளவில் ஓட்டுக்களைப் பிரிக்கும். அதனால், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என, கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2வது இடத்தில் பா.ஜ.,:

டில்லியில், டிசம்பர், 4ம் தேதி, சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், கட்சிகளின் வெற்றி வாய்ப்புகள் குறித்து, சி ஓட்டர்ஸ் என்ற தனியார் நிறுவனம், கருத்து கணிப்பு நடத்தி, அதன் முடிவுகளை, வெளியிட்டுள்ளது.

அதில், கூறப்பட்டுள்ளதாவது:டில்லி சட்டசபை தேர்தலில், சில மாதங்களுக்கு முன் துவக்கப்பட்ட, சமூக சேவகர் அரவிந்த் கெஜ்ரிவாலின், ஏழை மக்கள் கட்சி, அனைவரும் வியப்படையும் வகையில், அதிக அளவிலான ஓட்டுக்களைப் பெறும். அதனால், மிகப்பெரிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும், பா.ஜ.,வின் வெற்றி, தோல்வியை, அந்தக் கட்சி பெறும் ஓட்டு மாற்றி அமைக்கும். ஏழை மக்கள் கட்சிக்கு, 21 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும். அந்தக் கட்சியால், வெற்றிக்கு தேவையான, பெரும்பான்மை இடங்களை பெற முடியாது. ஆனாலும், ஏழு முதல், 12 தொகுதிகளில் வெற்றி பெறும். ஏழை மக்கள் கட்சி பிரிக்கும் ஓட்டுக்களால், பா.ஜ.,வின் வெற்றி வாய்ப்பு, அப்படியே பறிபோகும். மொத்தம், 32 சதவீத ஓட்டுக்கள், பா.ஜ.,வுக்கு கிடைக்கும். அதன்மூலம், 22 முதல், 27 தொகுதிகளில் மட்டுமே, பா.ஜ., வெற்றி பெற்று, இரண்டாவது இடத்தைத்தான் பிடிக்கும்.


காங்.,குக்கு 34 சதவீதம் :

காங்கிரசுக்கு, 34 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும். அதாவது, 32 முதல், 37 தொகுதிகளில் வெற்றி பெறும். இதனால், மீண்டும் காங்கிரசே டில்லியில் ஆட்சியை பிடிக்கும். கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, 17 சதவீத ஓட்டுக்களைப் பெற்ற, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இம்முறை, வெறும், 7 சதவீத ஓட்டுக்களைப் பெறலாம். இவ்வாறு, கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரச்னைகளும் உண்டு :

மொத்தம், 13,000 பேரிடம் நடத்தப்பட்ட, இந்த கருத்துக் கணிப்பில், முதல்வர் ஷீலா தீட்சித்துக்கே, மீண்டும் முதல்வராக வரும் திறமை இருப்பதாக, நிறையப் பேர் கூறியுள்ளனர். தேர்தலில், விலைவாசி உயர்வு பிரச்னை, பிரதான இடத்தைப் பெறும் என 35 சதவீதத்தினரும், சட்டம், ஒழுங்கு பிரச்னை என, 8 சதவீதத்தினரும், ஊழலே முக்கிய இடம் பெறும் என, 7 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ராம்லீலா மைதானத்தில் கூட்டத்தொடர் : டில்லியில் ஏழை மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற, டில்லி சட்டசபையின் சிறப்புக் கூட்டத் தொடர், ராம்லீலா மைதானத்தில் நடைபெறும், என, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரான, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: டில்லியில், சட்டசபை தேர்தல் முடிந்து, டிசம்பர், 25ம் தேதிக்குள், புதிய அரசு பதவியேற்கும். ஏழை மக்கள் கட்சி ஆட்சியைப் பிடித்தால், அதே மாதம், 29ம் தேதி, சட்டசபையின் சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்படும். ஜன்லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, சமூக சேவகர் அன்னா ஹசாரே, 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த, டில்லி ராம்லீலா மைதானத்திலேயே, சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும். காங்கிரசும், பா.ஜ.,வும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அந்த இரு கட்சியினரும், எங்கள் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்கின்றனர். இவ்வாறு, கெஜ்ரிவால் கூறினார்.

-நமது டில்லி நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A. Sivakumar. - Chennai,இந்தியா
06-அக்-201315:41:01 IST Report Abuse
A. Sivakumar. பா.ஜ.க மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே ஆட்சியைப் பிடிக்கும் போட்டி காங்கிரஸ் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்படும் நிலைமைதான் தற்போது நிலவுகிறது...
Rate this:
Cancel
peter jose - chennai,இந்தியா
06-அக்-201311:57:53 IST Report Abuse
peter jose sheela is a great leader?
Rate this:
Cancel
Tamilan - Chennai,இந்தியா
06-அக்-201311:46:07 IST Report Abuse
Tamilan இந்த கருத்து கணிப்பு எல்லாம் சும்மா ஒரு நாடகம்,,,,வெற்றியா, தோல்வியா என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லும்,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X